July 1, 2025
  • July 1, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் தனுஷ் 40 படத்தின் படப்பிடிப்பு முடிந்தது
February 9, 2020

கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் தனுஷ் 40 படத்தின் படப்பிடிப்பு முடிந்தது

By 0 624 Views

கடந்த தலைமுறையில் போலீஸ் வேடத்தில் நடிக்க ஆசைப்பட்ட ஹீரோக்கள் இன்னொரு முகமாக தாதா கேரக்டரிலும் நடிக்க ஆசைப்பட்டார்கள். அந்த வகையில் தனுஷ் இன்னும் போலீஸாக நடிக்கவில்லை என்றாலும் தற்போது கார்த்திக் சுப்புராஜின் படத்தில் கேங்ஸ்டர் கேரக்டரில் நடித்திருக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு போன வருஷம் வாஷிங்டன் நகரில் ஆரம்பித்து அதற்குப் பின் திருநெல்வேலியில் நடைபெற்று தற்போது சென்னை மாநகரத்தில் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளதை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் உறுதிப்படுத்தி இருக்கிறார்.

கூடவே இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வரும் 19ஆம் தேதியன்று இணையதளத்தில் வெளியாகவுள்ளதென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தனுஷ் – கார்த்திக் சுப்பராஜ் இணைஞ்சிருக்கும் இப் படத்தில் மலையாள நடிகையான ஐஸ்வர்யா லட்சுமி, ‘கேம் ஓவர்’ படத்தில் நடித்த சஞ்சனா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இந்த படத்திற்கும் மாரி செல்வராஜின் ‘கர்ணன்’ படத்திற்கும் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.

மேலும் தனுஷ் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் மற்றொரு படமான மாரி செல்வராஜின் “கர்ணன்” படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதத்தில் நிறைவு பெறுமாம்.

கர்ணன் டைட்டில் விவகாரம் எதுவும் இல்லையே..?