தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண் டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றிருப்பதாகவும், இதுமேலும் வலுப்பெற்று இன்று மாலை புயலாக வலுப்பெறும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
வங்கக்கடலில் உருவாகும் இந்த புதிய புயலுக்கு ஆம்பன் என பெயரும் வைத்திருந்தார்கள்.
இந்நிலையில் வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ஆம்பன் புயல் வரும் 20-ந்தேதி மேற்குவங்காளம் மற்றும் ஒடிசா அருகே நகரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஆம்பன் புயல் வரும் மே 20-ந்தேதி மேற்கு வங்காளம் – வங்காளத்தேசத்தை ஒட்டிய கடற்பகுதியில் கரையை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.