April 2, 2026
  • April 2, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • விஜய்சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்தவரின் அடையாளம் தெரிந்தது
October 21, 2020

விஜய்சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்தவரின் அடையாளம் தெரிந்தது

By 0 635 Views

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் இன் வாழ்க்கை கதையை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் 800 படத்தில் முத்தையா முரளிதரனின் வேடத்தில் விஜய்சேதுபதி நடிப்பதாக இருந்ததும், அவரை அதில் நடிக்க கூடாது என்று உலகத் தமிழர்களும் இங்குள்ள தமிழர்களும் கேட்டுக்கொண்டதன் பேரில, அவர் அதில் இருந்து விலகியதும் தெரிந்த விஷயங்கள்.

இந்நிலையில் அந்தப்படத்தில் இருந்து அவர் விலகும் தருவாயில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் விஜய்சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த அப்படி செய்தால்தான் இலங்கை தமிழ் மக்களின் இன்னல் புரியும் என்று அறிவித்திருந்தார்.

அந்தப் பதிவுக்கு எல்லா மட்டத்தில் இருந்தும் கண்டன கணைகள் எழுந்து போலீஸில் புகாரும் அளிக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து தமிழக காவல்துறையின் சைபர் கிரைம் போலீசார் களத்தில் இறங்கி சமூக வலைதளத்தை ஆராய்ந்து வந்தனர்.

இந்நிலையில் அப்படி விஜய் சேதுபதியின் மகளுக்கு மிரட்டல் விடுத்த நபர் பற்றிய ஆதாரம் கிடைத்துள்ளது.

அந்த நபர் இலங்கையில் இருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து அவரை கைது செய்ய சர்வதேச போலீசான இண்டர்போல் காவல் அதிகாரிகளின் உதவியை நாட தமிழக போலீசார் முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.