September 23, 2023
  • September 23, 2023
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • சூரரை போற்று வெளியீடு தள்ளிப் போகிறது – சொல்கிறார் சூர்யா
October 22, 2020

சூரரை போற்று வெளியீடு தள்ளிப் போகிறது – சொல்கிறார் சூர்யா

By 0 418 Views

சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் சுதா கொங்கரா இயக்கி சூர்யா நாயகனாக நடிக்கும் படம் ‘சூரரைப் போற்று ‘. 

இப்படம் இந்திய விமானியின் சாதனையை பற்றியது. இதில் நடிப்பதற்காக சூர்யா தன் உடலை வருத்தும் மற்றும் பல்வேறு பயிற்சிகள் எடுத்து நடித்திருக்கிறார்.

கொரோனா பரவல் காரணமாக தியேட்டர்கள் மூடி இருக்கும் இந்த நேரத்தில் சூரரை போற்று படத்தை ஓ டி டி தளத்தில் வெளியிட முதலில் ஆர்வம் காட்டி வந்த சூர்யா பிறகு தியேட்டர்களிலும் அதனை வெளியிட வேண்டும் என்கிற ஆர்வத்தில் படத்தின் வெளியீட்டு தேதியை ஒரு மாதத்திற்கு முன்பே அறிவித்தார்.

அதன்படி அக்டோபர் 30ம் தேதி இந்தப் படம் உலகெங்கும் வெளியாகும் என்று அவர் அறிவித்தார். அதற்குள் கொரோனா பயம் முற்றிலுமாக நீங்கி தியேட்டர்கள் திறக்கப்பட்டு விடும் என்பதும் அவரது நம்பிக்கையாக இருந்தது.

இந்நிலையில் அக்டோபர் 30 அன்று அமேசான் பிரைமில் இந்த படம் வெளியாவதற்கான போஸ்டர்களும் தயாரான நிலையில் இந்த பட வெளியீடு தள்ளிப் போகிறது என்று ஒரு கடிதம் மூலம் தெரிவித்திருக்கிறார் சூர்யா.

Soorarai pottru release postponed

Soorarai pottru release postponed

அந்தக் கடிதத்தில் படம் தள்ளிப் போவதற்கான காரணத்தை அவர் சொல்லியிருக்கிறார்.

அதன்படி படம் முழுவதும் உள்நாட்டு விமான சேவையை பற்றிய தகவல்கள் அதிகமாக வருவதால் தேசிய பாதுகாப்பு கருதி தடையில்லா சான்றிதழை பெற வேண்டிய அவசியம் ஏற்பட்டதாகவும் அவை கிடைக்க தாமதம் ஆன நிலையில் இந்தப் பட வெளியீடு தள்ளிப் போவதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

எதை விடவும் தேச பாதுகாப்பு முக்கியம் என்பதால் இந்த தாமதம் ஏற்புடையதுதான் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

ஆக தடையில்லா சான்றிதழ் கிடைத்தவுடன் மறு வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. அதுவரை ரசிகர்கள் கொஞ்சம் ஆர்வத்தை அடக்கி வைத்திருப்பது நல்லது.