இந்தியாவின் உருமாறிய கொரோனா 17 நாடுகளுக்கு பரவி உள்ளது – உலக சுகாதார நிறுவனம்.
தமிழகத்தில் ஒரேநாளில் 16,665 பேருக்கு கொரோனா தொற்று – 98 பேர் உயிரிழப்பு.
அண்ணா பல்கலைக்கழகம் அடுத்த மாதம் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறவிருந்த நிலையில் ஒத்திவைப்பு.
தமிழக கட்சிகளின் முடிவு ஒருதலைப்பட்சமானது – ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர்.
மே 1 முதல் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு வரத்தேவையில்லை – பள்ளிக் கல்வித்துறை இயக்குநர்.
ரெம்டெசிவிர் மருந்து விற்பனை நேரத்தை தமிழக அரசு அதிகரிக்க வேண்டும் – நடிகர் கமல்ஹாசன்.
பெங்களூருவில் 3000 கொரோனா நோயாளிகள் தலைமறைவு – அமைச்சர் அசோகா.
கர்நாடகா: ஆக்சிஜன் கிடைக்காமல் 8 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு.
சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆகியும் உத்தர பிரேதசத்தில் மக்களுக்கு ஆக்சிஜன் வழங்க முடியாததது வெட்கக்கேடானது – அலகாபாத் உயர்நீதிமன்றம்.
நாடு முழுவதும் மேலும் 500 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை அமைக்க பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட குழு கூட்டத்தில் ஒப்புதல்.
ஸ்டெர்லைட் ஆலையை கண்காணிக்க 9 பேர் கொண்ட குழு அமைப்பு.
18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் – ஆளுநர் பன்வாரிலால் புரோகித்.
சென்னை ஐஸ் அவுஸ் காவல்நிலையத்தில் பணியாற்றி வந்த 7 பேருக்கு கொரோனா.
வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்த மேலும் இரு வழக்குகளில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
உத்தரகாண்ட் மாநிலத்தில் அனைத்து அரசு அலுவலகங்களும் மே 1 வரை மூடப்படும் – உத்தரகாண்ட் அரசு.
மாநிலங்களுக்கான கோவிஷீல்டு தடுப்பூசியின் விலை ரூ.400-ல் இருந்து ரூ.300 ஆக குறைப்பு – சீரம்.
தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாய நிபுணத்துவ உறுப்பினராக முன்னாள் வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் நியமனம்.
கொரோனாவின் கோர பிடியில் சிக்கியுள்ள இந்தியாவிற்கு உதவ 34 கோடி ரூபாய் நிதி திரட்டிய அமெரிக்க வாழ் இந்தியர்களின் தன்னார்வ அமைப்பு.
இந்தியாவுக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 10 மில்லியன் டாலர்கள் நிதியுதவி.
இந்தியாவுக்கு கூடுதல் மருத்துவ உதவிகளை வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம் – கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.
அரபிக்கடலில் தத்தளித்த 11 மீனவர்கள் மீட்பு.