July 1, 2025
  • July 1, 2025
Breaking News
September 15, 2020

கொரோனா தொற்றுக்கு பலியான பிரபல தமிழ் நடிகர்

By 0 1087 Views
கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வந்த மூத்த ஊடகவியலாளரும், திரைப்பட நடிகருமான ப்ளோரன்ட்  பெரேரா காலமானார்.
 
 விஜய் நடித்த புதிய கீதை மூலம் சினிமாவுக்கு அறிமுகமான ப்ளோரன்ட்  பெரேரா, என்கிட்ட மோதாதே (2017), வேலையில்லா பட்டதாரி 2 (2017), ராஜா மந்திரி, தொடரி உள்ளிட்ட 50 கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பல வருடங்களாக ஊடகத்துறையில் பணியாற்றி வந்து இருக்கிறார்.
 
சில நாட்களுக்கு முன் ஒரு திருமணம், சூட்டிங் மற்றும் நகை கடைக்கு சென்று வந்தவர் உடலில் காய்ச்சல் போன்றவை covid-19 பரிசோதனை செய்து கொண்டார்.
 
அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக ரிசல்ட் வரவே சென்னை பொது மருத்துவமனையில் சேர்ந்தார். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தவர் இன்று உயிரிழந்தார்.
 
அவருக்கு வயது 67. அன்னாரது ஆத்மா அமைதி பெற பிரார்த்திப்போம்.