இயக்குநர் விஜய முருகன் இயக்கத்தில் யோகி பாபு நடித்திருக்கும் படத்திற்கு காக்டெய்ல் என்று பெயர் வைத்ததுடன் நில்லாமல் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் கையில் வேலுடன் கடவுள் முருகன் கெட்டப்பில் யோகி பாபு போஸ் கொடுத்தார்.
அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே இப்படக் குழு எதிர்பார்த்த அளவு சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதே சமயம் தமிழ்க்கடவுள் முருகன் கெட்டப்பில் உள்ள யோகிபாபு- தோற்றத்துக்கு டீம் விளக்கம் கொடுத்தாலும், படத்திற்கு காக்டெய்ல் என மதுவின் பெயரை வைத்திருப்பதும் சர்ச்சையைக் கிளப்பி அடங்கியது.
சரி… ரிலீஸ் ஆகும் போது இருக்கிறது கச்சேரி என்று பார்த்தால் இப்போது இப்படம் வரும் ஜூலை 10ல் ஓடிடியில் ரிலீஸாகப் போவதாக அறிவிப்பு வந்துருக்கிறது…
Cocktail releasing in ott
தியேட்டர்களில் வெளியானால் முற்றுகை நடத்த முடியும். ஆனால் இப்படி ஓடிடி-யில் ரிலீஸ் ஆகும் பிட் படம் தொடங்கி முருகக் கடவுள் கிண்டல் வரையிலான படத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க என்ன புது வழி கண்டுபிடிக்க போகிறார்களோ… முருகப் பெருமானுக்கு தான் வெளிச்சம்..!