October 16, 2025
  • October 16, 2025
Breaking News
April 3, 2020

ஊரடங்கு உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை – முதல்வர்

By 0 764 Views

வெளிமாநில தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள சென்னை ராஜா அண்ணாமலைபுரம் சமுதாய நல கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று   நேரில் சென்று ஆய்வு செய்தார்.

பின்னர் வேளச்சேரியில் வெளிமாநில தொழிலாளர்கள் தங்கியுள்ள சமுதாய நலக்கூடத்திலும் ஆய்வு செய்தவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதிலிருந்து:-

வெளிமாநிலங்களில் இருந்து 1.34 லட்சம் வெளிமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தங்கி வேலை செய்கின்றனர். அந்தத் தொழிலாளர்களுக்கு தங்குமிடம், உணவு, உடை உள்ளிட்ட  பல்வேறு உதவிகளை அரசு செய்துள்ளது. 

மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கவே ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்தும் கொரோனாவின் தாக்கத்தை பற்றி தெரியாமல் மக்கள் வெளியே சுற்றுகின்றனர். கொரோனா பரவாமல் தடுக்க மக்கள் அரசுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.

மக்களின் பாதுகாப்புக்காகவே 144 போடப்பட்டது. மக்களை துன்புறுத்த தடை உத்தரவு போடவில்லை. மக்கள் வெளியே சுற்றுவது அதிகரித்தால் 144 தடை உத்தரவை கடுமையாக்க நேரிடும். தேவையின்றி வெளியே வருபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். ஊரடங்கை மீறினால் சட்டம் தன் கடமையைச் செய்யும்

தமிழக அரசு ஊழியர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படாது..!”