தன் வழி தனி வழியான படங்களை இயக்கி வரும் தமிழின் பெருமைமிக்க பெண் இயக்குநர்களில் ஒருவரான லஷ்மி ராமகிருஷ்ணனின் அடுத்த படம் ‘ஹவுஸ் ஓனர்.’ இதில் ‘பசங்க’ புகழ் கிஷோர் மற்றும் விஜி சந்திரசேகர் மகள் லவ்லின் ஆகியோரை முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க வைத்து இயக்கி வருகிறார் லஷ்மி. சென்னையில் வந்த பெரு வெள்ளத்தின்...
மேற்கு தொடர்ச்சி மலைக்காடுகள் நிறைய மர்மங்களையும் அபாயங்களையும் அதே நேரத்தில் இயற்கை வளங்களையும் கொண்டிருக்கின்றன. அங்கு மாவோயிஸ்டுகள், நக்சல்கள் ஆயுதப் பயிற்சி எடுப்பதாகவும், அதிரடிப்படை அவர்களை சுற்றி வளைத்து கைது செய்வதும் அவ்வப்போது நடந்து வருகிறது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை காட்டுப்பகுதியான கேரள மாநிலம் மறையூரில் தனியாருக்கு சொந்தமான காட்டுப்பகுதியில் நடிகர் கிருஷ்ணா...
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் மூன்று ஆண்டுகள் உள்ள நிலையில் டி.டி.வி.தினகரன் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு வேட்பாளரரை அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அதன் விபரம்… அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் திண்டுக்கல்லில் நடக்கும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சியை அடைந்து அங்கிருந்து...
லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரில் இன்று பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில் அமெரிக்காவின் செரினா வில்லியம்சை ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் எதிர்கொண்டார். ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய கெர்பர் முதல் செட்டை 6-3 என்ற நிலையில் கைப்பற்றினார். இரண்டாவது செட்டிலும் கெர்பரின் கை ஓங்கியே...
இன்றைக்கு நம் கண்ணெதிரே காணாமல் போய்க்கொண்டிருக்கும் கூட்டுக்குடும்ப உறவுகளையும், விவசாயத்தின் மேன்மையையும் வைத்து ஒரு கதை எழுதியதற்காகவே முதலில் இயக்குநர் பாண்டிராஜைக் கட்டித்தழுவி பாராட்டியாக வேண்டும். அதைப் படமாக எடுக்க முன்வந்த நடிகர் சூர்யாவுக்கும் அதே தழுவலுடன் ஒரு பாராட்டு. ஒரு பெரிய விவசாயக் குடும்பத்தில் ஆண் வாரிசு வேண்டி இரண்டு தாரங்கள் மூலம்...