’36 வயதினிலே’, ‘பசங்க-2′, ’24’, ‘மகளிர்மட்டும்’ ஆகிய படங்களை தொடர்ந்து, சமீபத்தில் தயாரித்து வெளியிட்ட ‘கடைக்குட்டி சிங்கம்’ படம் வரை சமூக நோக்கிலான படங்களைத் தொடர்ந்து தயாரித்து வருகிறது 2D என்டெர்டெயின்மென்ட் நிறுவனம். இந்த நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தை ‘உறியடி’ பட இயக்குனர் விஜய்குமார் இயக்கவுள்ளார். ‘உறியடி’ படம் மூலம் திரையுலகையும் ரசிகர்களையும்...
கடந்த பாராளுமன்ற கூட்டத் தொடரின்போது இஸ்லாத்தில் மும்முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்யும் நடைமுறைக்கு தடை விதிக்கும் வகையில், முஸ்லீம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு சட்ட மசோதா மக்களவையில் நிறைவேறியது. இருந்தும், மாநிலங்களவையில் இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கான பெரும்பான்மை இல்லாததால் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு தெரிவிக்க, இம்மசோதா அப்படியே விடப்பட்டது.. கடந்த மழைக்கால கூட்டத்...
வசூல் ராஜாவாக மாறிய ‘சீமராஜா’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்கவிருக்கும் படத்தின் அறிவிப்பு வந்துள்ளது. அந்தப் படத்தையும் ஆர்.டி.ராஜாவின் ’24 ஏஎம் ஸ்டூடியோஸ்’ நிறுவனமே தயாரிக்கிறது. அந்தப் படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்கவிருக்கிறார். விஷாலை வைத்து மித்ரன் இயக்கிய ‘இரும்புத்திரை’ வெளியாகி வெற்றி பெற்றது தெரிந்த விஷயம்தான். இதற்கு இடையில் எம்.ராஜேஷ் இயக்கத்தில்...
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்க, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ‘சர்கார்’ படத்தின் கொண்டாட்டம் இன்றிலிருந்து தொடங்குவதாக ஏற்கனவே அறிவிக்கட்டிருந்தது. இதனால் விஜய் ரசிகர்கள் இன்று காலையிலிருந்தே வரவிருக்கும் அறிவிப்புக்காகக் காத்திருந்த நிலையில் இன்று காலை 11 மணிக்கு சன் பிக்சர்ஸ் ‘சர்கார்’ படத்தின் முதல் பாடல் வெளியீட்டுத் தேதியை அறிவித்திருக்கிறது. அதன்படி வரும் (செப்டம்பர்)...
Courtesy – Puthiya Thalaimurai TV