கற்பனைத் திறன் மிகு படைப்பாளி பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தயாராகி இருக்கும் சூப்பர் ஹீரோ படைப்பான ‘ஹனு-மேன்’, எதிர்வரும் மே மாதம் 12ஆம் தேதி அன்று தமிழ், தெலுங்கு, இந்தி என இந்திய மொழிகளில் மட்டுமல்லாமல் ஆங்கிலம், ஸ்பானிஷ் மற்றும் ஜப்பானிய மொழிகளில் தயாராகி உலகளவில் வெளியாகிறது என படக்குழுவினர் பெருமிதத்துடன் தெரிவித்திருக்கிறார்கள். இயக்குநர்...
உண்மை சம்பவத்தை மையப்படுத்தி புதுமுகங்கள் நடித்திருக்கும் ‘தில் திலீப்’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி தன்னுடைய இணையப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். ‘குபீர்’ எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் திலீப் குமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘தில் திலீப்’. இதில் திலீப் குமார், ராதா ரவி,...
பாம்பூ ட்ரீஸ் சினிமாஸ்,அல் முராட் ,சக்தி வேல் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘லாக்’. இப்படத்தை எழுதி ரத்தன் லிங்கா இயக்கி உள்ளார். இவர் ஏற்கெனவே சில குறும்படங்களை இயக்கியவர், ‘அட்டு’ என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் வடசென்னை வாழ்வியலைப்பதிவு செய்தவர் என்ற முத்திரை பதித்தவர். ‘லாக்’ படத்தின் இசை வெளியீட்டு விழா...
நடிகர் சிவகுமார் வழங்கும் ‘ திருக்குறள் 100’ திருக்குறள் பற்றிய சிறப்பு நிகழ்ச்சி, புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பொங்கல் விடுமுறை நாட்களில் ஒளிபரப்பாகிறது. இதனையொட்டி நடிகர் சிவகுமார் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தார். நடிகர் சிவகுமார் நூறு திருக்குறள்களை எடுத்துக்கொண்டு அதற்கு ஏற்ற பொருத்தமான வாழ்க்கை அனுபவங்களை இணைத்து ‘வள்ளுவர் வழியில் வாழ்ந்தவர்களின் வரலாற்றுடன்...
ஸ்ரீ வெற்றிவேல் ஃபிலிம் அகாடமி சார்பில் ஐயப்ப பக்தர்கள் இணைந்து கூட்டு முயற்சியாக தயாரித்திருக்கும் படம் ‘ஸ்ரீ சபரி ஐயப்பன்’. 33 வருடங்களுக்கு பிறகு வெளியாக இருக்கும் ஐயப்ப பக்தி படமான இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், கலை மற்றும் இயக்கம் என 6 முக்கிய பொறுப்புகளை இயக்குனர் ராஜா தேசிங்கு கையாண்டுள்ளார்....
தி.மு.க. பொருளாளரும், எம்.பி.யுமான டி.ஆர்.பாலு, தன்னுடைய வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகளை தொகுத்து ‘பாதை மாறாப் பயணம்’ என்ற தலைப்பில் சுயசரிதை எழுதி உள்ளார். இந்த புத்தகம் 2 பாகங்களை கொண்டது. முதல் பாகத்தில் கருணாநிதியுடன் இருப்பது போன்றும், 2-ம் பாகத்தில் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் உடன் இருப்பது போன்றும் நூலின் முகப்பு படம்...
பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் சம்பவங்களை வைத்து நிறைய படங்கள் வந்து விட்டன. பெண்களை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்குபவர்களுக்கும் ரகம் ரகமான தண்டனைகள் கொடுத்தாயிற்று. அந்த வரிசையில் இந்தப் படமும் சேரும் என்றாலும் இதில் ஒரு வித்தியாசமான முயற்சியாக பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகாமல் இருக்க என்ன செய்யலாம் என்கிற தீர்வையும் சொல்ல முயன்றிருக்கிறார்...