January 23, 2026
  • January 23, 2026
Breaking News
March 30, 2019

சேரனின் திருமணம் ஏப்ரல் 12ல் மறு வெளியீடு

By 0 1054 Views
மார்ச் மாத துவக்கத்தில் இயக்குனர் சேரன் நடித்து இயக்கிய ‘திருமணம்’ திரைப்படம் வெளியானது.
 
கதாநாயகனாக உமாபதி ராமையா, நாயகியாக காவ்யா சுரேஷ் நடித்திருக்க, முக்கிய வேடங்களில் இயக்குனர் சேரன், தம்பி ராமையா, எம். எஸ். பாஸ்கர், சுகன்யா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
 
குடும்ப உறவுகள், நடைமுறை வாழ்வின் யதார்த்தங்கள்,  சென்டிமெண்ட் என நல்ல கதை களமும்,  அருமையான விமர்சனங்களும் கிடைத்த போதும், மாணவமணிகளுக்கு தேர்வுகள் இருந்ததால் மக்கள் பெருமளவில் வரவியலாத நிலையிருக்க, திரையிடுவதற்கு போதுமான திரையரங்குகளும் கிடைக்காததால் பல இடங்களில் திரையிட முடியவில்லை.
 
பல்வேறு தரப்பினரின் வேண்டுகோளுக்கிணங்கவும், திரையரங்குகளின் மேலான  ஒத்துழைப்போடும், இத்திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 12ம் தேதி, 75 திரையரங்குகளில் மறு வெளியீடு செய்யப்படுகிறது.
 
வரவேற்கிறோம்..!