களஞ்சியம் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சாம்பியன்’.
நடுத்தர மக்களின் வாழ்வியலோடு இணைந்த, வட சென்னை மக்களின் கால்பந்து விளையாட்டை அதன் அத்தனை இயல்புகளோடும் மக்களின் வாழ்வியலை கலந்து இப்படத்தை உருவாக்கியுள்ளார் சுசீந்திரன்.
விஷ்வா இப்படத்தில் நாயகனாக அறிமுகமாகியுள்ளார். மிருணாளினி, சௌமிகா ஆகிய இருவரும் நாயகிகளாக நடித்துள்ளனர். மனோஜ், நரேன், ஸ்டண்ட் சிவா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை வெளியீட்டில் பிரபலங்கள் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தியதிலிருந்து…
டி.ராஜேந்தர் பேசியதாவது…
“தமிழ் நாட்டில் தமிழில் தான் பேர் வைக்க வேண்டும் என்று அடமாக இருந்தவர் பாரதிராஜா. அவரைப்போல் நானும் இருந்தேன். தமிழில் பேர் வைக்க வேண்டும் என்று நாங்கள் பட்ட பாடு போதும். இனி வரும் தலைமுறை பிழைத்து கொள்ளட்டும்.
விஷ்வா விஷ் பண்ண வாவென அழைத்தார் அதனால் வாழ்த்த வந்தேன். ஒவ்வொரு இயக்குநருக்கும் ஒரு அடையாளாம் இருக்கு. சுசீந்திரனுக்கும் ஒரு அடையாளம் இருக்கு வெண்ணிலா கபடி குழு. அந்தப்படம் போல் இந்தப்படமும் ஜெயிக்கும்..!”
அமைச்சர் விஜய பாஸ்கர் பேசியதாவது…
“வெளியே மழை, உள்ளே கலை. இந்த கலை விழாவிற்கு அழைத்ததற்கு நண்பர் ஆர்.கே.சுரேஷ் அவர்களுக்கு நன்றி. எனக்கு விருப்பமானவர்கள் இந்த மேடையில் இருக்கிறார்கள். பாரதிராஜா, டி. ராஜேந்தர் படங்கள் எனக்கு பிடிக்கும். இவர்கள் இருக்கும் மேடையில் நானும் கலந்து கொண்டது பெருமை. சுசீந்திரன் தரமான படங்கள் தரும் கலைஞர். இப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்..!”
நாயகி சௌமிகா பேசியது…
“ஷூட்டிங் முதல் நாள் எப்பவும் எனக்கு தூக்கமே வராது. பயமா இருக்கும் ஆனா ஷூட்டிங்கில் இயக்குநர் ரொம்பவும் பொறுமையா சொல்லி தருவார். அவரால்தான் நான் நன்றாக நடித்திருக்கிறேன். எல்லோரும் என்னிடம் அன்பாக இருந்தார்கள்..!”
நாயகி மிருணாளினி ரவி பேசியது…
“சுசீந்திரன் சார் ரொம்ப ஃபிரண்ட்லியா இருப்பார். அவர் படத்துல நடிக்கும்போது, நமக்கு பிடிச்ச டீச்சரோட கிளாசுக்கு போய்ட்டு வர்ற மாதிரி போய் நடிச்சுட்டு வந்துடலாம். விஷ்வா லவ்லியான பையன். ஆனா ஷூட்டிங் ஸ்பாட்ல ரொம்ப ஆர்வமா இருப்பார். சரியா செய்யனும்னு துடிப்பா இருப்பார். இந்தப்படத்தில் நடிச்சது சந்தோஷமான அனுபவமா இருந்தது..!”
பாரதி ராஜா பேசியது…
“நானும் டி ராஜேந்தர் மாதிரி பேசாம வந்துடலாம்னு வந்தேன் அவனே பேசிட்டான். அப்புறம் நமக்கு என்ன பேசலாம். அவன் எமோஷனல் மேன். அவனை எனக்கு பிடிக்கும். என்னையும் அவனுக்கு பிடிக்கும்.
சுசீந்தரன் எனக்கு பிடித்த கலைஞன். ‘பாண்டிய நாடு’ படத்தில் முதலில் நான் நடிக்க ஒத்துக்கல, இப்ப போய் எதுக்கு நடிச்சுக்கிட்டுனு நினைச்சேன். ஆனா அது எனக்கு ஒரு கம்பேக்கா இருந்தது. சுசீந்திரன் படம் எல்லாமே நல்லாத்தான் இருக்கும். அவன் படம் பார்த்து படம் எப்படி இருக்கும்னு சொல்ல தேவையில்ல அவன பார்த்தே சொல்லிடலாம்..!”
நாயகன் விஷ்வா பேசியது…
“இந்த மேடை நெருக்கமானது. எனக்காக எல்லாரும் வந்திருக்கீங்க அதுக்கு நன்றி. என்னோட அப்பாதான் எல்லாத்துக்கும் காரணம். இந்தப்படமே ஒரு அப்பா மகன் கதைதான். அது மாதிரி நிஜ வாழ்விலும் என்ன சின்ன வயசுலருந்து எழுப்பி, குளிப்பாட்டி, ஸ்கூல் கூட்டிப்போய் இப்படி ஒவ்வொன்னும் பார்த்து பார்த்து செஞ்சவர் அவர் தான்.
அப்புறம் சுசி சார் அவர் தான் இந்தப்படம் உருவானதற்கு முக்கியமான காரணம். உங்களுக்கு நன்றி. இதுக்கு மேல என்ன சொல்லனும்னு தெரியல நன்றி சார். என்ன வாழ்த்திய… இந்த இடத்துக்கு கொண்டு வந்த அனைவருக்கும் நன்றி..!”
இயக்குநர் சுசீந்திரன் பேசியது…
“இந்தப்படத்தில் பாடகர் கார்த்தியை அறிமுகப்படுத்தியது மொத்த படக்குழுவுக்கும் பெருமை. அவர் தான் உண்மையான சாம்பியன். அரோல் கொரோலி ரொம்ப அருமையான பின்ணணி இசை தந்திருக்கார். மனோஜ்க்கு இந்தப்படம் ஒரு கம்பேக்கா இருக்கும்,
நான் அறிமுகப்படுத்தினதிலேயே சிறந்த நடிகரா விஷ்வா வருவார். கடுமையான உழைப்பாளி தனுஷ் மாதிரினு அவர பத்தி சொல்லிருக்கேன். அவர் மாதிரி கண்டிப்பா பெரிய இடத்தை அடைவார். இந்தப்படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் நன்றி..!”