அவ்வப்போது ஏற்படும் அறிவியல் முன்னேற்றங்கள் மற்றும் தொழில்நுட்ப மாற்றங்களும் திரைப்படத் துறைக்கு ஒரு வகையில் லாபமாக இருந்து வருகின்றன எனலாம். அந்த வகையில் படங்களுக்கு இருந்து வந்த வழக்கமான ஏரியா விற்பனைகளைத் தாண்டி இடையே வந்த சேனல்களில் ஒளிபரப்பு உரிமை ஒரு நல்ல வருமானத்தைத் தந்து வந்தது.
இப்போதையை நிலையில் எல்லா சேனல்களும் எல்லாப் படங்களையும் வாங்கும் நிலை மாறி நிறைய கட்டுப்பாடுகள் வந்துவிட, அந்த வருமானம் அடைபட்டுப் போகும் நிலையில் புதிதாக உள்ளே வந்த ‘நெட்ப்ளிக்ஸ்’,…
Read Moreசினிமாவைப் பொறுத்த அளவில் ஹீரோக்களுக்கும், ஹீரோயின்களுக்கும்தான் ராஜ உபசாரம் கிடைக்கும். அவர்களின் முகப்பொலிவு மாறிவிடக் கூடாதென்பதற்காக நேரத்துக்கு உறக்கம், பிடித்த உணவு, பேமென்ட் செட்டில்மென்ட் என்று எல்லா அம்சங்களிலும் அவர்களே முன்னுரிமை பெறுகிறார்கள்.
ஆனாலும், படங்களில் நடிப்பதுதான் கஷ்டமான வேலை என்ற அளவில் நேரம் கிடைத்தால் ரெஸ்ட் எடுக்கவும், உற்சாகத்தைக் கூட்டிக் கொள்ளவும் வெளிநாடு பறந்து விடுவார்கள்.
வெளிநாடு செல்வதை ஒரு வேலையாகவே செய்து வரும் நடிகைகளுள் முக்கியமானவர் த்ரிஷா. இப்போது படங்கள் எதுவும் கையில் இல்லை என்பதுடன்,…
Read More‘யாழ்’ என்றதுமே இது இலங்கைத் தமிழரைப் பற்றிய பதிவு என்பது புலனாகிறது. அதுவும் ஒரு வகையில் உண்மைதான். ஈழப்போர் உச்சகட்டத்தை எட்டுவதற்கு முந்தைய காலக்கட்டத்தில் யாழ்ப்பாணத்தில் இரண்டு மணி நேரத்தில் மூன்று இடங்களில் ஆறு பேர் சந்திருக்கும் வாழ்க்கைப் பிரச்சினைகள்தான் களம்.
ஆனால், அது மட்டுமே கதையல்ல. கதையின் அடிநாதம், உலகெங்கும் போர் பூமியில் புதைத்து வைக்கப்பட்டிருக்கும் நிலக்கண்ணி வெடிகளைப் பற்றிய கவலை.
இந்தக் களத்தில் யாழ் நிலத்தில் பதித்து வைக்கப்பட்டிருக்கும்…
Read Moreதமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்குமிடையில் முல்லைப்பெரியாறு அணைக்கட்டுப் பிரச்சினை இருக்கிறதல்லவா..? இந்த நீர்ப்பங்கீட்டுப் பிரச்சினையின் மூலத்தைச் சுருக்கி அதுவே ஒரு கேணித் தண்ணீர்ப்பிரச்சினையாக இருந்தால் எப்படி இருக்கும் என்று ஒரு கற்பனை செய்து பார்த்திருக்கிறார் இயக்குநர் எம்.ஏ.நிஷாத்.
கேரளத்துக்காரரான இவர் இயக்கினால் படம் கேரளாவுக்கு ஆதரவாகத்தான் இருக்கும் என்று நினைத்துவிட வேண்டாம். மனசாட்சியுள்ள மனிதரான நிஷாத் அப்படி ஒருதலைப்பட்சமாக நடந்து கொளாமல் ‘கேணி’யளவு ஈரமுடையவராகவே இருக்கிறார் இந்தப்படத்தில்.
படத்தின் கதை இதுதான். கேரள – தமிழ்நாட்டு எல்லையில் இருக்கும் கிராமத்தில் கணவரின்…
Read Moreகடைசிப் பக்கம் கிழிந்த நாவலுக்கு ஒரு பரபரப்புண்டு… கிளர்ச்சியுண்டு…கடைசியில் என்னதான் நடந்திருக்கும்..? என்கிற எதிர்பார்ப்பு அடங்கமறுக்கும் அலையாய் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும். இந்த உணர்வை அடிநாதமாக வைத்து ஒரு ‘ஆந்தாலஜி’ கேப்ஸ்யூலுக்குள் ஆறு கதைகளை… அதுவும் ‘ஹாரர்’களைப் படைத்திருக்கிறார்கள்.
உலகெங்கும் ‘ஆந்தாலஜி’ எங்கிற தொகுப்புத் திரை வடிவம் எதிர்பார்ப்பைவிட குறைவான வெற்றியையே தந்திருக்க, அதை வைத்து எப்படி வெற்றியடையலாம் என்ற நவீன சிந்தனையின் விளைவுதான் இந்த முயற்சி எனலாம்.
அதற்கத்தான் ஆறு கதைகளையும் அடுத்தடுத்து முழுமையாகச் சொல்லாமல் மேற்படி ‘கடைசிப்…
Read More‘ரெட்ஜயன்ட்’ தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக, சீனுராமசாமி இயக்கும் ‘கண்ணே கலைமானே’ படம் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. வேலைநிறுத்தத்துக்கு முன்னதாகவே படப்பிடிப்பை முடித்து விட்டக் களிப்பில் இருக்கும் சீனு ராமசாமிக்கு இன்னொரு மகிழ்ச்சியும் சேர்ந்திருக்கிறது.
படத்தில் உதயநிதியின் ஜோடியாக நடித்திருக்கும் தமன்னா இயக்குநர் சீனு ராமசாமியைக் குறித்து வாசித்திருக்கும் பாராட்டுப் பத்திரம்தான் அந்த மகிழ்ச்சிக்குக் காரணம். சீனுராமசாமி ஏற்கனவே இயக்கி விஜய் சேதுபதி ஹீரோவான ‘தர்மதுரை’ படத்திலும் தமன்னாதான் நாயகி என்பது தெரிந்திருக்கும்.
இந்த இரண்டு படங்களின் இயக்குநர்…
Read More