December 2, 2024
  • December 2, 2024
Breaking News
April 30, 2018

காலா பட செம்ம வெயிட்டு பாடல் நாளை வெளியீடு

By 0 1179 Views

தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்துக்காக பா.இரஞ்சித் இயக்கி சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து ஜூனில் வெளியாகவிருக்கும் காலா படத்தின் இசை வெளியீடு இந்த மாதம் 9-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று தனுஷ் தன் ட்விட்டர் பக்கத்தில் நாள மாலை 7 மணிக்கு காலா படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார். 

‘செம்ம வெயிட்டு’ என்று தொடங்கும் இந்தப்பாடலை இப்போதே வரவேற்க ரஜினி ரசிகர்கள் தயாராகிவிட்டார்கள் என்பதற்கான சான்று இதுதான் இப்போதைய நிலவரப்படி டிரெண்டிங்கில் நம்பர் ஒன்னாக இருந்து வருகிறது. பாடலைக் கேட்டுவிட்டு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுக்கும், பாடலைப்பாடிய அருண்ராஜாகாமராஜுக்கும் பாராட்டுகள் குவியலாம்.

அந்தப் பாராட்டு ‘செம்ம வெயிட்டா’கவும் இருக்கலாம்..!