September 20, 2024
  • September 20, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • ஹீரோவைப் பார்த்து எழுதிய கதைதான் ‘புதிய புரூஸ்லீ’
April 30, 2018

ஹீரோவைப் பார்த்து எழுதிய கதைதான் ‘புதிய புரூஸ்லீ’

By 0 1345 Views

உலகத்தின் முதல் ஆக்‌ஷன் சூப்பர் ஸ்டாரான ‘புரூஸ்லீ’யின் தோற்றத்தில் புதுமுகம் புரூஸ் சான் நடித்திருக்கும் படம் ‘புதிய புரூஸ்லீ’

ஏஸ்.கே.அமான் பிலிம் புரக்‌ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் வந்தவாசி கே.அமான் இந்தப் படத்தைத் தயாரிக்க, புரூஸ் சானின் நாயகியாக ரஸியா என்ற புதுமுகம் நடித்திருக்கிறார். சிவசங்கர் ஒளிப்பதிவு செய்ய, ‘காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு…’ புகழ் சௌந்தர்யன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இசையமைத்திருக்கிறார்.

இத்திரைப்படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழாவில் படம் பற்றி இயக்குநர் முளையூர் ஏ.சோனை பேசியது…

“தன் குடும்பத்தை இழந்து மன ஆறுதலுக்காக நகரத்தில் உள்ள தூரத்து உறவினரான தன் மாமா வீட்டிற்கு அழைத்து வரப்படும் கிராமத்து நாயகன். அங்கு அவரது மாமாவின் பிரச்சினையை தனது ஆக்‌ஷன் திறமையால் தீர்த்துவைப்பதுதான் இந்தப் படத்தின் கதை.

‘புரூஸ்லீ’யின் தீவிர ரசிகனான எனக்கு அவரைப் போன்ற தோற்றத்தில் நாயகன் ‘புரூஸ் சானை’ பார்த்ததுமே அந்தக் கேரக்டரை மனதில் வைத்து எழுதிய கதைதான் இது. மேலும் சான், ஏற்கெனவே கராத்தேயில் இரண்டு பிளாக் பெல்ட் பெற்றவர் என்று தெரிந்ததும் எனக்கும் இன்னும் உற்சாகத்தைத் தந்தது. புரூஸ்லீயின் நடை, உடை, பாவனை.. அவர் உணர்வுகளை வெளிப்படுத்தும்விதம்.. அனைத்தையும் நான், சானிடம் இருந்து வெளிக்கொண்டு வந்திருக்கிறேன்..!”

புரூஸ் சான் பேசுகையில், “புரூஸ்லீயின் அதிதீவிர ரசிகனான நான் இறக்கும்போது அவர் புகழில் சிறிதளவாவது பெற்றிருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அத்ற்கு இந்தப்படம் துணை செய்யும்..!” என்றார் கண்கள் கலங்க.

கலங்காதீங்க லீ..! கலக்குங்க..!