September 16, 2024
  • September 16, 2024
Breaking News
April 28, 2018

காலா இசை வெளியீடு பற்றிய தனுஷ் அறிவிப்பு

By 0 1242 Views

தனுஷ் தயாரிப்பில் ரஜினி நடித்து பா.இரஞ்சித் இயக்கியிருக்கும் ‘காலா’ ஏப்ரலில் வெளியாகவிருந்து பின்னர் வேலை நிறுத்தத்தினால் தள்ளிப்போய் இப்போது ஜூன் மாதம் 7-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அதற்கு முன்பாக நடந்தேற வேண்டிய ‘காலா’ படத்தின் இசை வெளியீடு எப்போது இருக்கும் என்ற கேள்விக்கு விடையாக அமைந்திருக்கிறது தனுஷ் இன்று வெளியிட்டிருக்கும் ட்வீட்.

அதில் ‘காலா’ படத்தின் இசை வெளியீடு மே மாதம் 9-ம் தேதி வெளியாகும் என்று அதில் அறிவித்திருக்கிறார் அவர். சந்தோஷ் நாராயணன் இப்படத்துக்கு இசைத்திருக்கிறார். ஏற்கனவே ரஜினிக்கு அவர் இசையமைத்த ‘கபாலி’ பாடல்கள் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கவே ‘காலா’வின் பாடல்களுக்கான எதிர்பார்ப்பும் கூடியிருக்கிறது.

வாங்க காலா, இசையோட கூலா..!