சின்னத்திரையில் ஜென்டில்மேன் என்று பெயரெடுத்த நடிகர் வேணு அரவிந்த் இதுவரை எந்த தவறான செய்திகளுக்கும் உட்படாதவர்.
இவர் இப்போது அப்பலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறாராம்.
சிறிது நாள் முன்பு அவருக்கு பக்கவாதம் தாக்கி இருக்கிறது. அதிலிருந்து மீள்வதற்குள் கொரோனா தாக்க பின்பு நிமோனியா வந்திருக்கிறது. அதன் பின்பு மூளையில் கட்டி வந்ததாம். அதை அறுவை சிகிச்சை செய்து அகற்றியிருக்கிறார்கள்.
இந்த நிலையில் இப்போது தீவிர சிகிச்சை பிரிவில் பிசியோதெரபி பயிற்சிகளில் இருக்கிறாராம். நல்ல மனசுக்காரர் நலம் பெற்று…
Read More
நடிகர் ராம் பொத்தினேனி நாயகனாக நடிக்கும் #RAP019 படத்தை N.லிங்குசாமி இயக்குகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார்.
ஆதி பின்னிஷெட்டி, நதியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இப்படத்தின் தமிழக உரிமையை ‘MasterPiece’ நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஶ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் சார்பாக ஸ்ரீனிவாசா சித்தூரி அவர்களின் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்புக்கு இயக்குனர் இமயம் பாரதிராஜா வருகை தந்தார்.
படம் உருவாகும் விதத்தை…
Read More
உலகின் தலைசிறந்த 25 இசையமைப்பாளர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியாகியது. அதில் நம் இசைஞானி இளையராஜாவுக்கு 9 ஆம் இடம் கிடைத்துள்ளது.
இந்திய படங்கள் மட்டுமல்லாது உலகப் புகழ் பெற்ற பில்லார்மோனிக் கம்பெனிக்கு இசைத்ததன் காரணமாக மேஸ்ட்ரோ பட்டம் பெற்று உலகின் கவனத்தைக் கவர்ந்தார் இளையராஜா.
இன்றைக்கு ஹாலிவுட்டின் உலகப் புகழ் பெற்ற படங்களுக்கு இசையமைத்த ஜெர்ரி கோல்ட்ஸ்மித்் மற்றும் கிறிஸ்டபர் நோலன் படங்களுக்கு வழக்கமாக இசையமைக்கும்…
பிரபுதேவா நடிப்பில் இயக்குனர் சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் எளிய முறையில் பூஜையுடன் துவங்கியது.
‘ஹர ஹர மஹாதேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, ‘கஜினிகாந்த்’, ‘இரண்டாம் குத்து’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கும் இப்பெயரிடப்படாத திரைப்படத்தில் பிரபுதேவா கதையின் நாயகனாக நடிக்க, அவருடன் நடிகைகள் வரலட்சுமி சரத்குமார் மற்றும் ரைசா வில்சன் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள்.
தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆங்கிலம் கன்னடம் மலையாளம் மராட்டி என பன்மொழி படங்களுக்கு இசையமைத்து, உலகத் திரைப்பட வரலாற்றிலேயே மிக அதிக படங்களுக்கு இசையமைத்தவர் என்ற சாதனையை தக்க வைத்திருக்கும் இசைஞானி இளையராஜா இசையில் உருவாகும் படம் “நினைவெல்லாம் நீயடா”.
லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு தயாரிக்கும் இந்த படத்தை, சிலந்தி, ரணதந்த்ரா (கன்னடம்), அருவா சண்ட ஆகிய படங்களை இயக்கிய ஆதிராஜன் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார். கதாநாயகனாக பிரஜன்…
Read More
சினிமாத்துறையில் பல சங்கங்கள், சினிமாத் தொழிலாளர்களின் நலனுக்காக இயங்கி வந்தாலும், சில சங்கங்களில் சில போலியான நிர்வாகிகளினால், பல தொழிலாளர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இவற்றை எதிர்த்து குரல் கொடுப்பதோடு, சினிமா தொழிலாளர்களுக்காவும், தொழில்நுட்ப கலைஞர்களுக்காகவும் தன்னலம் பாராமல் குரல் கொடுக்கும் சில பிரபலங்கள் இவர்களுடைய அரசியல் சூழ்ச்சியினால் பல்வேறு பாதிப்புகளை எதிர்கொள்ள நேருடுகிறது. அந்த வகையில், பிரபல திரைப்பட கலை இயக்குநரும், நடிகருமான வீரசமர், தனது கலை இயக்குநர்கள் மற்றும் தொழிலாளர்களின் நலுனுக்காக குரல்…
Read More