August 30, 2025
  • August 30, 2025
Breaking News

Currently browsing விமர்சனம்

மஹாவதார் நரசிம்மா திரைப்பட விமர்சனம்

by by Jul 26, 2025 0

கேப்டனின் நரசிம்மா மட்டுமே பார்த்து வளர்ந்த இளைய வயதினருக்கு உண்மையான தசாவதார கதையான நரசிம்மரின் அவதார காரணத்தை காட்சி வடிவில் விளக்கி இருக்கும் படம்.

அதிலும் இன்றைய தலைமுறைக் குழந்தைகளுக்கு பிடித்த வடிவில் 3டி அனிமேஷன் மூலம் வந்திருக்கும் இந்தப் படம் எந்த அவெஞ்சர்ஸ் படத்தை விடவும் கற்பனை வளம் மிகுந்தது. 

மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களில் இந்தக் கதைக்கு ‘ வராக அவதாரம்’ மற்றும் ‘நரசிம்மாவதாரம் ‘ என்று இரண்டு அவதாரங்கள் தேவைப்பட்டிருக்கின்றன.

இரணிய கசிபு மற்றும் அவரது தம்பி…

Read More

மாரீசன் திரைப்பட விமர்சனம்

by by Jul 25, 2025 0

முதலில் மாரீசன் என்றால் யாருக்குப் புரியும்..? ஓரளவுக்கு இராமாயணம் அறிந்தவர்கள் மட்டுமே அதை கண்டுபிடிக்கலாம்.

அப்படி ராமாயணம் தெரியாதவர்களுக்காக நாம் சொல்லும் சின்ன முன் கதை.

ராவணன் சீதையைக் கவர்வதற்காக மாரீசன் என்கிற மாயாவியை அனுப்ப, அந்த மாரீசன் மாயமான் வேடம் கொண்டு சீதையின் கவனத்தைக் கவர, அதை துரத்திக்கொண்டு ராமன் காட்டுக்குள் போகும் போதுதான் ராவணன் சீதையைக் கடத்துகிறான். 

ஆக வெளி உலகத்திற்கு அப்பாவி மான் போல தோற்றமளிக்கும் மாரீசன், உண்மையில் ஒரு அரக்கன் என்பதுதான் அதன் பொருள்….

Read More

ஹரிஹர வீரமல்லு திரைப்பட விமர்சனம்

by by Jul 24, 2025 0

இருப்பவர்களிடமிருந்து எடுத்து இல்லாதவர்களுக்கு உதவும் ராபின் ஹுட் பாணி படங்கள் வந்து நீண்ட காலமாகிறது. அப்படி ஒரு படமாக வந்திருக்கிறது இது.  ஆனால் அது மட்டும் தான் கதையா என்றால் இல்லை…
 
‘மக்களின் சேவகன்’ என்று அறியப்படும் திருடனாக… படத்தில் நாயகன் பவன் கல்யாண் நடித்திருக்கிறார். எனவே, அவர் பெரிதும் நம்பும் சனாதன தர்மங்களை தூக்கிப்பிடிக்கும் சாதனமாகவும் இந்தப் படம் ஆகி இருப்பதில் எந்த வியப்பும் இல்லை.
 
அவரது எல்லா செயல்களுமே மக்களின் நன்மைக்காகவே நடக்கிறது. அதுவும் அடக்குமுறைக்குட்பட்ட…

Read More

பன் பட்டர் ஜாம் திரைப்பட விமர்சனம்

by by Jul 20, 2025 0

கல்லூரி மாணவரான நாயகன் ராஜுவின் அம்மா சரண்யா பொன் வண்ணனுக்கு, தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் தோழி தேவதர்ஷினியின் மகள் ஆதியாவை தன் மகனுக்கு திருமணம் செய்து வைக்க ஆசை.

ஆனால், ஆதியாவோ விஜே பப்புவை காதலிக்க, ராஜுவோ தனது சக மாணவி பவ்யா ட்ரிகாவை காதலிக்கிறார்.

இது ஒரு பக்கம் இருக்க, ராஜுவின் உற்ற நண்பன் மைக்கேல் தன் காதலில் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக ராஜுவின் நட்பில் இருந்து விலகிச் செல்கிறார்.

இத்தனை குழப்பங்களுக்குள் ராஜுவின் காதலும், சரண்யா…

Read More

சென்ட்ரல் திரைப்பட விமர்சனம்

by by Jul 20, 2025 0

சென்னையின் குறிப்பிடத்தக்க அடையாளங்களில் ஒன்று சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன். ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான பயணிகள் பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் வந்திறங்கும் இடமாக இது இருக்கிறது. 

கதை நடக்கும் களம் அங்கேதான் என்றாலும் படத்தின் நாயகன் காக்கா முட்டை விக்னேஷ் வந்து இறங்குவது கோயம்பேடு மார்க்கெட்டில் தான். 

அரியலூரில் இருந்து இவர் கிளம்பிய நேரம் பார்த்து பஸ் கிடைக்காமல் போகவே கோயம்பேடு மார்க்கெட் வரும் ஒரு வேனைப் பிடித்து சென்னை வந்து சேர்கிறார். வந்து சேர்ந்த நோக்கம் பள்ளி இறுதித் தேர்வு…

Read More

யாதும் அறியான் திரைப்பட விமர்சனம்

by by Jul 19, 2025 0

‘ அறியான் ‘ என்று ஒரு படம் வந்தது – அதற்குப்பின் ‘ பயம் அறியான்’ என்றொரு படம் வந்தது. இப்போது இந்த ‘ யாதும் அறியான்..!’ 

தமிழில் தலைப்புக்கு அத்தனை பஞ்சமா இயக்குனர் பெருமக்களே? யாம் அறியோம் பராபரமே..!

தலைப்புக்கே மெனக்கெடாதவர்கள் படத்தை எப்படி எடுத்து இருப்பார்கள் என்கிற எதிர்பார்ப்புடன் (!) தான் படத்தைப் பார்க்க ஆரம்பிக்கிறோம். 

10, 15 நிமிடங்களுக்குள் முடியக்கூடிய ஒரு குறும்படத்தை ஒன்றே முக்கால் மணி நேரத்திற்கு நெடும்படமாக நீட்டித்திருக்கிறார் இயக்குனர் எம்.கோபி..!

இந்தப் படத்தின்…

Read More

சட்டமும் நீதியும் (Zee 5 ஒரிஜினல்) சீரிஸ் விமர்சனம்

by by Jul 18, 2025 0

சட்டம் எல்லோருக்கும் பொதுவானது என்கிறோம். ஆனால் அதில் பெறப்படும் நீதி அப்படி எல்லோருக்கும் பொதுவானதாக இருக்கிறதா என்பதுதான் இந்தக் கதையின் வாயிலாக இதன் எழுத்தாளர் சூரியபிரதாப் சமுதாயத்தின் முன் வைக்கும் கேள்வி.

தலைப்பைப் போலவே இதன் முழுக் கதையும் நீதிமன்றத்தையும் ஒரு வழக்கையும் சுற்றியே வருகிறது.

நீதிமன்ற வளாகத்துக்குள் ஒரு ஓரமாக மேசை நாற்காலியைப் போட்டுக்கொண்டு நோட்டரி பப்ளிக்காக இருந்து வருகிறார் கதையின் நாயகன் சரவணன். நீதிமன்றத்துக்குள் வழக்காடும் வழக்கறிஞர் எவரும் அவரை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை என்றாலும்…

Read More

டிரெண்டிங் திரைப்பட விமர்சனம்

by by Jul 17, 2025 0

மனித மனம் வக்கிரங்கள் நிறைந்தது. அடுத்தவர் வாழ்க்கைக்குள் எட்டிப்பார்த்து அவர்களின் உணர்ச்சிகளைக் களவாடும் எண்ணம்தான் இன்றைக்கு உலகமெங்கும் டிரெண்ட் ஆக இருக்கிறது.

அதை வைத்தே இன்றைய ஆன்லைன் யுகம் யூடியூப் முதற்கொண்டு எல்லாவற்றிலும் டிரெண்டிங் ஆக்குவதற்காக எந்த எல்லைக்கும் சென்று கொண்டிருக்கும் ஆபத்தை ஒரு அபாய சங்காக ஊதி இருக்கிறார் இயக்குனர் சிவராஜ்.என்.

ஆனால், அதையும் இன்றைய டிரெண்டிங் நிலையிலேயே ‘ பிக்பாஸ்” பாணியில்  சொல்லி இருப்பதுதான் இப்படத்தின் ரசிக்கத்தக்க அம்சம்.

காதல் மணம் புரிந்த கலையரசனும், பிரியாலயாவும் யூடியூபில்…

Read More

ஜென்ம நட்சத்திரம் திரைப்பட விமர்சனம்

by by Jul 17, 2025 0

வழக்கமான பேய்ப் பட டெம்ப்ளேட்டில் எடுக்கப்பட்டிருக்கும் படம். ஆனால் இதில் ஆவி எடுக்கும் உயிர்களை விட வில்லன் எடுக்கும் உயிர்கள் அதிகம். 

எல்லாவற்றுக்கும் பணம்தான் காரணம் என்று கடைசியில் அதற்கு மொக்கையான ஒரு காரணமும் சொல்கிறார் இயக்குனர் பி.மணிவர்மன் .

நாயகனாக தமன் ஆக்ஷன், அவருக்கு இயக்குனராகும் கனவு இருக்கிறது, அதே அளவுக்கு அவர் கண்டிஷனும் போடுவதால் இன்னும் வாய்ப்பு கிடைக்காமல் சுற்றித் திரிகிறார்.

கூடவே மால்வி மல்கோத்ராவுடனான நட்பும், காதலும் கூட இருக்கிறது. 

இவர்களின் நண்பர்கள் டீமில் மைத்ரேயா, ரக்ஷா…

Read More

கெவி திரைப்பட விமர்சனம்

by by Jul 16, 2025 0

கொடைக்கானலுக்கு கீழ் சில கிலோமீட்டர் தள்ளி இருக்கும் பகுதிதான் ‘ வெள்ள கெவி’. இங்கு வாழும் பழங்குடியின மக்களை டோலி தூக்க வைத்துதான் வெள்ளைக்காரர்கள் கொடைக்கானலையே கண்டுபிடித்தார்கள் என்ற முத்தாய்ப்புடன் ஆரம்பிக்கிறது படம். 

சரி… அதற்கு என்ன என்கிறீர்களா?

ஆனால், அப்போதிருந்து அந்த கெவி பகுதி மக்களின் வாழ்வாதாரமும், வாழ்வதற்கான வசதிகளும் கற்காலத்திலேயேதான் இருக்கின்றன. 5 வருடங்களுக்கு ஒரு முறை ஓட்டு போட்டு ஒரு எம்எல்ஏ வை தேர்ந்தெடுத்தாலும் இவர்கள் பகுதிக்கு சாலை மற்றும் மருத்துவம் உள்ளிட்ட எந்த…

Read More