November 27, 2024
  • November 27, 2024
Breaking News

Currently browsing விமர்சனம்

ஆலகாலம் திரைப்பட விமர்சனம்

by by Apr 4, 2024 0

நஞ்சிலேயே கொடியது ஆலகாலம் என்கிறது புராணம். அதைத் தலைப்பில் வைத்து புதுமுக இயக்குனர் ஜெயகிருஷ்ணா என்ன சொல்லப் போகிறார் என்பதுதான் படம் பார்க்கும் முன் நம் முன் எழுந்த கேள்வியாக இருந்தது. 

ஆனால் படம் பார்த்து முடிந்ததும் நமக்கு ஏற்பட்ட அனுபவமே வேறு.

ஜெய கிருஷ்ணா இந்தப் படத்தை முதல்முறையாக இயக்க மட்டும் செய்யவில்லை – தயாரிப்பாளரும் படத்தின் நாயகனும் அவரேதான். 

விஷ சாராயத்துக்கு கணவன் பலியாக, மகனைப் படிக்க வைத்து பெரிய ஆளாக்க வேண்டும் என்கிற வைராக்கியத்தில் ஜெயகிருஷ்ணாவின்…

Read More

கள்வன் திரைப்பட விமர்சனம்

by by Apr 4, 2024 0

காடுகளை அழிப்பதால் விலங்குகளுக்கும், அவற்றால் மனிதர்களுக்கும் விளையும் பிரச்சினைகள் எல்லோரும் அறிந்தவைதான். அந்தப் பிரச்சினைக்குள் உணர்ச்சிமயமான ஒரு காதல்/பாசக் கதையையும் வைத்து சொல்லியிருக்கிறார் இயக்குனர் பிவி ஷங்கர்.

கொங்கு மண்டலத்தில் நடக்கும் கதை. காட்டுப்பகுதியில் இருக்கும் ஊரில் அடிக்கடி யானைகள் வந்து மனிதர்களைக் கொல்வது வாடிக்கையாக இருப்பதில் கதை தொடங்குகிறது. 

வாழ்வாதாரம் குறைவாக இருக்கும் அந்த ஊரில் திருடிப் பிழைப்பவர்களாக ஜிவி பிரகாஷும், தீனாவும் வருகிறார்கள். அப்படி திருடப் போன ஒரு வீட்டில் நாயகி இவனா…

Read More

பூமர் அங்கிள் திரைப்பட விமர்சனம்

by by Mar 30, 2024 0

படத்தில் யோகி பாபு நாயகனாக நடிக்கிறார் என்றதும் அவர்தான் பூமர் அங்கிளாக நடிக்கப் போகிறார் என்று நீங்கள் கற்பனை செய்து கொள்ள வேண்டாம்.

முதலில் பூமர் அங்கிள் என்றால் யார் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். உலகின் சூப்பர் ஹீரோக்களான ஸ்பைடர் மேன், பேட்மேன், ஹல்க் போன்றவர்களைப் போலவே இந்தியாவில் சக்திமான் என்று ஒரு சூப்பர் ஹீரோ இருந்தார் இல்லையா..? அவர்தான் இப்போது வயதாகி பூமர் அங்கிள் ஆகிவிட்டார்.

அந்த வேடத்தில் நடிப்பவர் எம்.எஸ்.பாஸ்கர் ஆனால், இந்தக் கதையை…

Read More

நேற்று இந்த நேரம் திரைப்பட விமர்சனம்

by by Mar 28, 2024 0

ஷாரிக் ஹசன், திவாகர் குமார், நிதின் ஆதித்யா, அரவிந்த், ஹரிதா, மோனிகா ரமேஷ், காவ்யா அமீரா உள்ளிட்ட விஸ் காம் முடித்த இளைஞர் குழு ஒன்று ஊட்டிக்கு சுற்றுலா செல்கிறது.

சென்ற இடத்தில் ஷாரிக்கைக் காணவில்லை என்று அரவிந்த் போலீசுக்கு சொல்ல, விசாரணை வளையத்துக்குள் வருகிறது இளைஞர்கள் குழு.

தொடர் விசாரணையில் ஷாரிக் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற முடிவுக்கு இன்ஸ்பெக்டர் வர, இறுதி நாள் விசாரணையின் போது புகார் கொடுத்த அரவிந்தையும் காணவில்லை. இப்படியாக போகிற மர்டர் மிஸ்டரி கதை…

Read More

வெப்பம் குளிர் மழை திரைப்படம் விமர்சனம்

by by Mar 28, 2024 0

பூமி நீர் வெப்பத்தால் மேகமாகிறது. பின் அது குளிர்ந்து மழையாகிறது. இந்த இயற்கையின் தத்துவத்தை மனித வாழ்க்கையுடன் ஒப்பிட்டு ஒரு உணர்வுமயமான கதையைச் சொல்லி இருக்கிறார் இயக்குனர் பாஸ்கல் வேதமுத்து.

பொதுவாகவே ஒரு படத்தின் தயாரிப்பாளரைதான் அந்தப் படத்தின் ஹீரோ எனலாம். காரணம் தயாரிப்பாளர் இல்லை என்றால் அந்தப் படமே இல்லை.

ஆனால், இந்தப் படத்தில் தயாரிப்பாளர் திரவ் , உண்மையிலேயே படத்துக்கு ஹீரோவாகவும் ஆகி இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் பாடல்களை எழுதி, படத்தை எடிட் செய்து, ஒலிக்கலவையில் பங்கெடுத்து……

Read More

Godzilla x Kong : The New Empire ஆங்கிலப் பட விமர்சனம்

by by Mar 27, 2024 0

இது 2021 ஆம் ஆண்டு வெளியான காட்ஸில்லா vs காங் படத்தின் தொடர்ச்சியாகும்.

அத்துடன் காட்ஸில்லா வரிசையில் 38வது படமாகவும், கிங் காங் வரிசையின் 13வது படமாகவும் அமைகிறது.!

ஆடம் விங்கார்ட் இயக்கியுள்ள இந்த படத்தில் காட்ஸில்லா மற்றும் காங் ஒரு மர்மமான ஹாலோ எர்த் அச்சுறுத்தலுக்கு எதிராக இணைகிறார்கள்,

அந்த ஹலோ எர்த்துக்கு நாயகி ரெபக்கா ஹால் மற்றும் குழுவினர் பயணம் செய்யும் வேளையில் டைட்டன்ஸ் மற்றும் ஸ்கல்…

Read More

இடி மின்னல் காதல் திரைப்பட விமர்சனம்

by by Mar 27, 2024 0

நூற்றாண்டு கால சினிமாவில் இதுவரை ஒரு சேட்டிடம் கடன் பட்டவர்கள்தான் அவதிப்படுவதாக கதைகள் வந்திருக்கின்றன. முதல்முறையாக இந்தக் கதையில் ஒரு சேட், ரவுடியிடம் கடன் வாங்கி, படாத பாட்டு செத்துப் போகிறார். அவருடைய வாரிசு படும் பாடுதான் கதை.

சில நாட்களில் அமெரிக்கா செல்லவிருக்கும் நாயகன், சிபி தன் காதலி பாவ்யா ட்ரிக்காவுடன் காரில் சென்று கொண்டிருக்கும் போது அசந்தர்ப்பமாக ஒருவர் மீது காரை ஏற்றி விடுகிறார். அதில் அந்த மனிதர் இறந்து போக இருவரும் பதற்றம்…

Read More

ஹாட் ஸ்பாட் திரைப்பட விமர்சனம்

by by Mar 26, 2024 0

இந்தப் பட ட்ரெய்லர் வெளியான நாளிலிருந்து பரபரப்பைக் கிளப்பிய படம். காரணம் வேறொன்றுமில்லை – பாலியல் விஷயங்களை பட்டவர்த்தனமாக சொல்லும் படமாக பார்க்கப்பட்டதுதான்.

இப்போது திரைக்கு வருகிறது. எப்படி இருக்கிறது படம்?

நான்கு கதைகளை அந்தாலஜி போல் சொல்கிறார் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக். அவர் இயக்குனராகவே நடிக்க, இந்த படத்தின் தயாரிப்பாளர் தயாரிப்பாளராகவே நடிக்க அவரிடம் கதை சொல்ல வரும் விக்னேஷ் கார்த்திக் ஒரு நான்கு கதைகளை சொல்கிறார் அவ்வளவுதான் படம்.

அவற்றில் இரண்டு ரொம்பவும் மலிவான ரசனை உள்ள…

Read More

ரெபல் திரைப்பட விமர்சனம்

by by Mar 23, 2024 0

மாவட்டமோ, மாநிலமோ, நாடோ அதன் எல்லைப் பகுதியில் வாழும் மக்களுக்கு எப்போதும் பிரச்சினைதான்

அப்படி இந்தியா, மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டதற்குப்பின், தமிழ்நாட்டுக்கு கன்னியாகுமரியை விட்டுக் கொடுத்த கேரளா, மூணார் பகுதியை விட்டுக் கொடுக்க மறுத்ததால் அந்தப் பகுதியில் வாழும் தமிழர்கள் மலையாளிகளால் என்ன விதமான துயரங்களுக்கு ஆளானார்கள் என்று சொல்லும் கதை.

அதை எண்பதுகளில் நடப்பதாக ஒரு உண்மை சம்பவத்துடன் இணைத்து புனை கதையாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் நிகேஷ் ஆர் எஸ்.

மூணார் பகுதியில் தேயிலைத் தோட்டத்தில் கூலித் தொழிலாளிகளாக…

Read More

அமிகோ கேரேஜ் திரைப்பட விமர்சனம்

by by Mar 17, 2024 0

மோட்டார் வாகனங்களைப் பழுதுபார்க்கும் இடத்துக்கு கேரேஜ் என்று பெயர் – அது தெரியும். ஆனால், அமிகோ கேரேஜ் என்றால் என்ன..?

பிரெஞ்சு மொழியில் அமிகோ என்றால் நண்பர்கள் என்று பொருளாம். நண்பர்கள் கூடும் இடமாக ஒரு கேரேஜ் இருப்பதால் அதற்குப் பொருத்தமான பெயர் என்று  வைத்திருக்கிறார்கள்.

ஒரு தலைப்புக்கே இவ்வளவு யோசித்து இருக்கிறாரே… அப்படியானால் கதைக்கு எவ்வளவு யோசித்து இருப்பார் இயக்குனர் பிரசாந்த் நாகராஜன் என்றுதானே நீங்கள் யோசிக்கிறீர்கள்..? அதையும் பார்த்துடுவோம் வாங்க..!

Read More