January 25, 2026
  • January 25, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

குறை சொன்னவர்களுக்கு எந்த பதிலும் சொல்லவில்லை – விஜய் சேதுபதி

by by Jul 15, 2022 0

தமிழ் ஓடிடி தளத்தில் கோலோச்ச ஆரம்பித்திருக்கும் ஆஹா ஓடிடி தளத்தின் அடுத்த அதிரடி வெளியீடாக, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் “மாமனிதன்” திரைப்படம் ஜூன் 14 ஆம் தேதி வெளியாகியுள்ளது. இப்படத்தை இப்போது 155 நாடுகளில் ஆஹா ஓடிடி தளத்தின் வழியாக கண்டுகளிக்கலாம். இதனை ஒட்டி படக்குழுவினர் கலந்துகொண்ட பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வினில்…

இயக்குநர் சீனு ராமசாமி பேசியதாவது…

கலாப்பிரியாவின் கவிதை ஒன்று இருக்கிறது காயங்களோடு இருப்பவனை விரட்டி கொத்தும் காக்கையை பற்றியது. அப்படி காயத்தோடு…

Read More

கார்கி திரைப்பட விமர்சனம்

by by Jul 15, 2022 0

எல்லோருக்குமே அவரவர்களின் அப்பாக்கள்தான் ஹீரோ. அப்பா எந்த தப்பும் செய்ய மாட்டார் என்பதுதான் அனைத்து குழந்தைகளின் கருத்தாகவும் இருக்கும். நமக்கு ஒன்று என்றால் வந்து நிற்பார் அப்பா… அவருக்கு ஒன்று என்றால் குழந்தைகள் எப்படி துடித்துப் போவோம்..?

அதுவும் அவர்மேல் கொடும் பழி சுமத்தப்பட்டால்..? அவருக்குப் பிறந்தது மகனோ மகளோ அவர்கள் எப்படி அவரை மீட்க போராடுவார்கள் என்பதுதான் இந்த கதையின் மையப்புள்ளி.
 
இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்ற 60 வயது முதியவராக வரும்…

Read More

நடிகர் பிரதாப் போத்தன் உடல் நலக்குறைவால் மரணம்

by by Jul 15, 2022 0

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் எழுத்தாளர் என பன்முகங்களை கொண்டு இந்திய சினிமாவின் தன்னிகரற்ற திரை பிரபலமாக வலம் வந்தவர் பிரதாப் போத்தன்.

பாலுமகேந்திரா இயக்கிய “அழியாத கோலங்கள்” திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நடிகராக அறிமுகமாகி வறுமையின் நிறம் சிவப்பு, பன்னீர் புஷ்பங்கள் உள்பட 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார் பிரதாப்.

மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார்.

சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது, சிறந்த அறிமுக இயக்குநர் படத்திற்கான இந்திரா காந்தி விருது,…

Read More

மை டியர் பூதம் திரைப்பட விமர்சனம்

by by Jul 14, 2022 0

அலாவுதீன் அற்புத விளக்கு காலத்தில் இருந்து பூதங்கள் மனிதர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருவதாக இலக்கியங்களும் திரைப்படங்களும் சொல்லிக்கொண்டு வருகின்றன. அந்த வகையில் வந்திருக்கும் லேட்டஸ்ட் பூதம் தான் ‘ கர்க்கிமுகி ‘.

டைட்டிலையும் பூதத்தின் கதை இது என்பதையும் பார்த்தவுடன் இது சிறுவர்களுக்கான படம் என்பது புரிந்து போகும். ஒரு பூதத்துக்கும் சிறுவனுக்குமான பிணைப்புள்ள கதை இது. இப்படி சாதாரணமாக சொல்லிவிட்டால் இது சாதாரணமான கதையாகவே புரியும் ஆனால் அதற்கு முன்னும் பின்னுமாக சுவாரஸ்யத்தை நுழைத்து…

Read More

மஹா படத்துக்கு ஆதரவாக இருந்த சிம்புவுக்கு நன்றி – ஹன்சிகா மோத்வானி

by by Jul 14, 2022 0

Etcetera Entertainment சார்பில் திரு மதியழகன் மற்றும் Malik Streams Corporations (Production & Distribution) சார்பில் தத்தோ அப்துல் மாலிக், முகம்மது ஜுபையர் மற்றும் ராசிக் அஹமத் ஆகியோர் தயாரிப்பில் நடிகை ஹன்ஷிகா மோத்வானி முதன்மை பாத்திரத்தில் நடிக்க, அவரது 50 வது திரைப்படமாக உருவாகியுள்ள படம் “மஹா”. இயக்குநர் U.R. ஜமீல் இயக்கத்தில் நடிகர் STR சிம்பு மிக முக்கியமான கேமியோ பாத்திரத்தில் நடிக்க, நடிகர் ஶ்ரீகாந்த் திருப்புமுனை பாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஒரு பரபர…

Read More

படைப்பாளன் திரைப்பட விமர்சனம்

by by Jul 12, 2022 0

இன்றைக்கு சினிமாத் துறையில் இருக்கும் பெரும் பிரச்சினையே கதைத் திருட்டுதான். ஒரு தாயைப் போல ஒரு கருவை உருவாக்கி அதைப் பல காலம் மனத்தில் தாங்கி அது திருடு போய் விடும்போது அந்தப் படைப்பாளனுக்கு எந்த விதமான வலியைத் தரும் என்பதுதான் கதையின் லைன்.

ஆனால், அதை ஒரு டாக்குமெண்டரி போல சொல்லாமல் ஒரு சஸ்பென்ஸ் ஹாரராகத் தந்திருக்கிறார் இயக்குனர் தியான் பிரபு.

இசிஆரில் ஆள் அரவம் இல்லாத இடங்களில் கட்டப்பட்டிருக்கும் விடுதிகளும், பங்களாக்களும் அவற்றில் யார் வசிக்கிறார்கள்?…

Read More

பூஜா பலேகரின் திறமைகளை பார்த்து வியந்தேன் – ராம் கோபால் வர்மா

by by Jul 11, 2022 0

ARTSEE MEDIA PRODUCTION மற்றும் INDO / CHINESE CO PRODUCTION நிறுவனங்கள் தயாரிப்பில், பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா இயக்கத்தில் இந்தியாவின் முதல் மார்ஷியல் ஆர்ட்ஸ் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் Ladki. நாயகியை மையமாக வைத்து உருவாகும் இப்படம் தமிழில் பொண்ணு என்ற பெயரில் வெளியாகிறது. மார்ஷியல் ஆர்ட்ஸ் வீராங்கனை பூஜா பலேகர் முதன்மை பாத்திரத்தில், சண்டை காட்சிகளில் அசத்தியுள்ளார். விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, இன்று சென்னையில் நடைபெற்றது.

இவ்விழாவினில்..

ராம் கோபால்…

Read More

சூர்யா ஜோதிகாவைப் பார்த்ததும் எனக்கு பேச்சு வரவில்லை – சாய் பல்லவி

by by Jul 11, 2022 0

பிளாக்கி ஜெனி & மை லிஃப்ட் புட் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், நடிகர் சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் பெருமையுடன் வழங்கும் திரைப்படம் கார்கி. இப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடித்துள்ளார்.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகை சாய் பல்லவி, இயக்குனர் கவுதம் ராமசந்திரன், நடிகை தயாரிப்பாளர் ஐஸ்வர்யலட்சுமி, 2D ராஜசேகர், சக்தி பிலிம் பேக்டரி சக்தி வேலன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து…

Read More

தோர் – லவ் அன்ட் தண்டர் திரைப்பட விமர்சனம்

by by Jul 10, 2022 0

வில்லன்களைக் கடவுள் அழிப்பதெல்லாம் லோக்கல் படங்கள் என்றால் தன் சொந்தப் பிரச்சினைக்காக கடவுள்களை ஆகாத வில்லன் கடவுள்களையே ஒவ்வொருவராக போட்டுத் தள்ளுவது ஹாலிவுட் ஸ்டைல்.

இதனால் வில்லனிடமிருந்து சக கடவுள்களையும், அவனிடம் சிக்கி இருக்கும் தன் பாதுகாப்பிலுள்ள அஸ்கார்டியன் குழந்தைகளையும் அந்தக் கடவுள்களில் ஒருவரான இடிக் கடவுள் தோர் காக்க முயல்வதுதான் இந்தப்பட லைன்.

இதை சீரியசாக சொன்னால் எங்கே ரொம்ப சீரியஸாக போய்விடுமோ என்று பயந்த (!) இயக்குனர் டைக்கா வைட்டிட்டி இந்த லைனைத் தன் சிக்னேச்சராகக்…

Read More

ஃபாரின் சரக்கு திரைப்பட விமர்சனம்

by by Jul 9, 2022 0

’ஃபாரின் சரக்கு’ என்ற தலைப்பை பார்த்ததும் நல்ல சரக்குள்ள படம் என்று தான் நினைக்கத் தோன்றுகிறது இல்லையா? உள்ளூர் சரக்கு அடிப்பவர்கள் கூட ஃபாரின் சரக்கு என்றால் நாக்கை சப்பு கொட்டிக் கொண்டு வந்து விடுவார்கள். அந்த ஃபாரின் சரக்கை எப்படி கடத்துகிறார்கள் என்ற கதை போலிருக்கிறது என்றுதான் தலைப்பை பார்த்ததும் நினைக்க தோன்றுகிறது.

ஆனால் படத்தில் மருந்துக்கு கூட சரக்கு வாசனை இல்லை. இவர்கள்’ பாரின் சரக்கு ‘ என்று சொல்வது கொடுமையான குற்றவாளியாக தேடப்படும்…

Read More