வெற்றிமாறன் உதவி இயக்குநர் இயக்கும் படத்தில் ஜிவி பிரகாஷ்
இந்த புதிய படத்தின் மூலம் இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த மதிமாறன் புகழேந்தி இயக்குனராக அறிமுகமாகிறார். ஜிவி. பிரகாஷுக்கு ஜோடியாக ‘சீமதுரை’, ’96’, ‘பிகில்’ படங்க:ளில் நடித்திருக்கும் வர்ஷா பொல்லம்மா நடிக்க இருக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் வாகை சந்திரசேகர் மற்றும் அறிமுக நடிகர் குணா நடிக்கிறார்கள்.
ஜிவி. பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு…
Read More
கதை வழக்கு போட்டவருக்கு காப்பான் தரும் பதிலடி
லைகா நிறுவனத் தயாரிப்பில் கே.வி.ஆனந்த் இயக்க சூர்யா நாயகனாக நடித்திருக்கும் படம் ‘காப்பான்’. இதில், சூர்யாவுடன் சாயிஷா ஜோடியாக மோகன்லால், பொமன் இரானி, ஆர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பட்த்தின் கதைப்படி இந்தியப் பிரதமராக மோகன்லாலும், அவருடைய பாதுகாப்பு அதிகாரியாக சூர்யாவும் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் திரைக்கதையை கே.வி.ஆனந்த், பட்டுக்கோட்டை பிரபாகர் இணைந்து எழுதியதாக தெரிவித்திருந்தனர்.
வருகிற 20 ஆம் தேதி படம் வெளியாக இருக்க ‘காப்பான்’ படத்தின் கதை தன்னுடையது என ஜான் சார்லஸ் என்பவர் சில…
Read More
ஜெ தொடர் – கௌதம் மேனனுக்கு தீபக் எச்சரிக்கை
நேற்றே இந்த செய்தி தொடர்பான நம் சந்தேகத்தை வெளியிட்டிருந்தோம். ஜெ பற்றி கௌதம் மேனன் இயக்கும் ‘குயீன்’ தொடர் ஜெயலலிதா பற்றியதாக இருந்தும் தொடர் தரப்பில் வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில் ‘ஒரு பிரபல அரசியல்வாதியின் கதை’ என்று மட்டுமே குறிப்பிடுகிறார்கள். அது ஏன்..” என்று.
இன்று அத்ற்கான விளக்கம் கிடைத்து விட்டது. ஏற்கனவே ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்க இயக்குநர் ஜி.பி.விஜய்…
Read More
ஆம்பள ஐட்டம் – ஜிவி பிரகாஷை விளாசும் கீச்சர்கள்
ஏற்கனவே ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தில் நடித்து அதுவரை இசையமைப்பாளராகவும், நடிகராகவும் சேர்த்துவைத்த அத்தனை நல்ல பெயரையும் கெடுத்துக் கொண்டவர் ஜி.வி.பிரகாஷ்.
இப்போது மீண்டும் ஒருமுறை தன் பெயரை தானே கெடுத்துக் கொள்ள முனைந்திருக்கிறார். அவர் அடுத்து நடிக்கவிருக்கும் அரைடஜன் படங்களில் ஒன்று ‘பேச்சலர்’. அதன் முதல் பார்வையை இன்று தமிழ்பற்றுள்ள கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
அந்த முதல் பார்வை ஜி.வி.பிரகாஷை மட்டுமல்லாது ஹர்பஜன் பெயரையும் சேர்த்து கெடுத்து விட்டது. டென்ஷனான…
Read More
ஜெ பெயரை சொல்ல என்ன தயக்கம் கௌதம் மேனனுக்கு
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இயக்குநர் விஜய் ஒரு பக்கம் ‘தலைவி’ என்று எடுக்கும் முயற்சியிலிருக்க, இன்னொரு பக்கம் கௌதம் மேனன் அதே ‘ஜெ’வின் பையோபிக் ஒன்றை சீரியலாக எடுத்து விடுகிறார்.
ஆனால், அதற்கான அறிவிப்பில் ‘ஜெ’ பற்றிய எந்தக் குறிப்பும் இல்லாமல் ‘ஒரு பிரபல அரசியல்வாதி’யின் கதை என்று மட்டுமே குறிப்பிடுகிறார்கள். ‘குயின்’ என்று தலைப்பிடப்பட்ட அந்த சீரியல் பற்றி இன்று வெளியான தகவல் குறிப்பில்…
‘குயின்’ சீரியலின் கதை நாமறிந்த ஒரு பிரபல அரசியல்…
Read More
அஞ்சலியை வச்சுக் காமெடி பண்ணப் போறாங்க…
அஞ்சலியுடன் யோகி பாபு மற்றும் விஜய் டி.வி.புகழ் ராமர் நடிக்கும் புதிய நகைச்சுவைப் படத்தின் படப்பிடிப்பு இன்று எளிய பூஜையுடன் தொடங்கியது. சோல்ஜர்ஸ் பேக்டரி சார்பில் உருவாகும் இப்படம் குறித்து தயாரிப்பாளர் சினீஸ்…
விலா நோகச் சிரிக்க வைக்கும் நகைச்சுவைக் காட்சிகளும், விறுவிறுப்பு குறையாத காட்சிகளும் நிறைந்த கதையாக இதை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் கிருஷ்ணன் ஜெயராஜ். முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடிகை அஞ்சலியை இந்தப் படத்தில் ரசிகர்கள் பார்க்கலாம். அஞ்சலியின் திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையை இப்படம் ஏற்படுத்தும்.
யோகி…
Read More
அஜித் மகளின் அதிரடியான அறிவிப்பு…
‘என்னை அறிந்தால்’, ‘விஸ்வாசம்’ என்று அஜித்துடன் இரண்டு படங்களில் அவருக்கு மகளாக நடித்திருக்கும் அனிகா சுரேந்திரன் அதனாலேயே பிரபலமானார்.
அஜித்தின் மகளாகவே அனிகாவை அஜித்தின் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். அனிகாவும் அஜித்தை ‘பப்பா’ (அப்பா) என்றே கூறி வருகிறார்.
இந்நிலையில் ‘நேர் கொண்ட பார்வை’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அஜித்தின் அடுத்த படத்தையும் எச்.வினோத்தே இயக்கவிருக்க, அதில் காவல் அதிகாரியாகவும், பாசமிகு தந்தையாகவும் அஜித் நடிக்கவிருக்கிறார்.
சிங்கிள் டேக் மலையாள நடிகையின் சிறப்பு
சீமான் மற்றும் ஆர்கே சுரேஷ் இருவரும் கதையின் நாயகர்களாக நடிக்கும் படத்தில் பிரபல மலையாள நடிகை அனு சித்தாரா ‘அமீரா’ என்கிற டைட்டில் கேரக்டரில் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு கூத்துப்பட்டறை ஜெயகுமார் வினோதினி மற்றும் பலர் இதில் நடித்து வருகின்றனர்.
சீமானிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ரா.சுப்ரமணியன் என்பவர் இந்த படத்தை இயக்கி வருகிறார்.
தென்காசி, சென்னையில்…
Read More
பா.இரஞ்சித் இயக்கத்தில் குத்துச்சண்டை வீரராக ஆர்யா
ஆர்யாவுக்கு ‘மகாமுனி’ நல்லதொரு கம்பேக் தந்திருக்கும் நிலையில் அவர் அடுத்து ‘டிக் டிக் டிக்’ சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ‘டெடி’ படத்தில் நடித்து வருகிறார்.
அடுத்து அவர் நடிக்கவிருப்பது பா.இரஞ்சித்தின் இயக்கத்தில் என்று ஒரு தகவல் கசிந்திருக்கிறது. அதில் அவர் குத்துச்சண்டை வீரராக நடிக்க இருக்கிறாராம்.
பா.இரஞ்சித்தின் பேவரிட் இடமான வட சென்னையில் வைத்தே இந்தப்படம் ஷூட் செய்யப்படவிருக்கிறதாம். ‘குரங்கு பொம்மை’ படத்தைத் தயாரித்த ஸ்ரேயா ஸ்ரீ மூவீஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கவிருக்கிறார்களாம்.
ஏற்கனவே வட சென்னை குத்துச்சண்டையை வைத்து…
Read More