March 22, 2025
  • March 22, 2025
Breaking News
September 10, 2019

அஜித் மகளின் அதிரடியான அறிவிப்பு…

By 0 1247 Views

‘என்னை அறிந்தால்’, ‘விஸ்வாசம்’ என்று அஜித்துடன் இரண்டு படங்களில் அவருக்கு மகளாக நடித்திருக்கும் அனிகா சுரேந்திரன் அதனாலேயே பிரபலமானார்.

அஜித்தின் மகளாகவே அனிகாவை அஜித்தின் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். அனிகாவும் அஜித்தை ‘பப்பா’ (அப்பா) என்றே கூறி வருகிறார்.

இந்நிலையில் ‘நேர் கொண்ட பார்வை’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அஜித்தின் அடுத்த படத்தையும் எச்.வினோத்தே இயக்கவிருக்க, அதில் காவல் அதிகாரியாகவும், பாசமிகு தந்தையாகவும் அஜித் நடிக்கவிருக்கிறார்.

Anikha Surendar

Anikha Surendar

அவரது மகளாக நடிக்கவிருப்பது அனிகாவேதான். இந்த உண்மையை படக்குழுவினர் வெளியே தெரிவிக்காத நிலையில் அனிகாவே தன் ட்விட்டரில் ஆர்வமிகுதியால் அதிரடியாக அறிவித்து விட்டார்.

‘அஜித் 60’ படத்தில் தான் ஒப்பந்தமான செய்தியை தன் ட்விட்டரில் ‘அஜித் 60′[-ல் அப்பாவுடன் நடிக்கிறேன்…. மூன்றாவது முறையாக… பூம்..! என்று தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார் அனிகா.

ஆனால், ‘என்னை அறிந்தால்…’ படத்தில் சிறுமியாயிருந்த அனிகா ‘மள மள’வென்று வளர்ந்து வருவதால் ‘அஜித் 60’-ல் அவர் ‘தல’யின் டீன் ஏஜ் மகளாக வருவார் என்று எதிர்பார்க்கலாம். 

ஆக, ‘விஸ்வாசம்-2’ தயாராகுது..!

அனிகாவின் ட்வீட் கீழே…