April 19, 2025
  • April 19, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • நெஞ்சுக்கு நீதி படம் வெற்றி பெற பிளக்ஸ் வைத்த காவலர் மீது வழக்குப் பதிவு
May 20, 2022

நெஞ்சுக்கு நீதி படம் வெற்றி பெற பிளக்ஸ் வைத்த காவலர் மீது வழக்குப் பதிவு

By 0 493 Views

உதயநிதி நாயகனாக நடித்து அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் இன்று வெளியாகி இருக்கிறது நெஞ்சுக்கு நீதி. இந்த படத்தை முதல்வர் ஸ்டாலின் பார்த்துப் பாராட்டி இருந்தார்.

அவரே வாழ்த்தி விட்ட பிறகு நாமும் வாழ்த்தினால் என்ன என்று நினைத்தாரோ என்னவோ, இந்தப் படத்துக்கு வாழ்த்து தெரிவித்து பெரம்பலூர் பாலக்கரையைச் சேர்ந்த காவலர் கதிரவன் என்பவர் ப்ளக்ஸ் வைத்து விட்டார்.

இது சோஷியல் மீடியாவில் பேசு பொருளான நிலையில் பெரம்பலூர் போலீஸார் அவர்மீது வழக்குபதிவு செய்திருக்கிறார்கள். மருத்துவ விடுப்பில் இருக்கும் காவலர் கதிரவன் ப்ளக்ஸ் வைத்ததால் அவர்மீது தமிழ்நாடு திறந்தவெளி அழகை சிதைக்கும் சட்டம் செக்சன் 4ன் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாக மாவட்ட காவல்துறை அலுவலகம் தகவல் தெரிவித்திருக்கிிறது.