January 23, 2026
  • January 23, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி படங்களுக்கு வழிவிட்ட அதர்வா படம்
December 5, 2018

தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி படங்களுக்கு வழிவிட்ட அதர்வா படம்

By 0 1032 Views

நாளை மறுநாள் 21ம்தேதியன்று தியேட்டர்காரர்களுக்கு பெரும் நெருக்கடி இருக்கப் போகிறது. தனுஷின் ‘மாரி 2’, விஜய் சேதுபதியின் ‘சீதக்காதி’, விமலின் ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ படங்கள் வெளியாகவிருக்க, இவற்றுடன் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவான ‘கனா’ படமும் களம் இறங்குகிறது.

இந்தப்படங்களுக்கு முன்னாலேயே முடிவடைந்து தயாரிப்பாளர் சங்கத்திடம் வெளியிட அனுமதி பெற்று வெளியீட்டுத் தேதியும் அறிவித்த அதர்வாவின் ‘பூமராங்’ படமும் 21ம் தேதியன்று வெளியாகவிருந்தது.

ஆனால், இப்போது ஒருவாரம் தள்ளி 28ம்தேதி அந்தப்படம் வெளியாகுமென்று படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான ஆர்.கண்ணன் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதிலிருந்து… “டிசம்பர் 28ஆம் தேதி பூமராங் படம் வெளியாக இருப்பதில் எங்கள் ஒட்டு மொத்த குழுவும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறோம்.

காரணம், குறிப்பாக இந்த படத்தில் மூன்று வித்தியாசமான தோற்றங்களில் நடிக்க மிகவும் கடின முயற்சிகள் எடுத்த அதர்வா முரளிக்கு இது ஒரு வெற்றிப்படமாக அமைய வேண்டும். மேகா ஆகாஷ் மற்றும் இந்துஜா ஆகியோரின் உழைப்புக்கும் தகுந்த அங்கீகாரம் கிடைக்க வேண்டும்.

மட்டுமல்லாமல் இந்தப் படம் மிகச்சிறப்பாக உருவாக எனக்கு மொத்த குழுவும் பக்க பலமாக இருந்தது ஒரு திரைப்பட தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

ஒவ்வொருவரும் அவரவர் படங்களின் வெற்றிக்குதான் உழைக்கிறார்கள். இதில் தனுஷ், விஜய் சேதுபதி, விமலின் படங்களும் சரி, சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள படமும் சரி வெற்றி பெற்றால்தான் அவரவர் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும். எல்லோருடைய படங்களும் வெற்றி பெற்றாக வேண்டும். இதனால் எங்கள் வெற்றியை ஒரு வாரம் தள்ளிப் போட்டுக்கொள்வதில் எங்களுக்கு எந்தவித இழப்பும் இல்லை.

எங்கள் கடின உழைப்புக்கான புத்தாண்டு பரிசாக இதை நாங்கள் ஏற்றுக்கொள்ளவிருக்கிறோம்..!” 

இந்த ஆரோக்கியமான சிந்தனைக்கே படம் வெற்றியடைந்தாக வேண்டும்..!