கொரானோ வைரஸ் தகவல் வந்தாலும் வந்தது. சீனாவிலிருந்து இந்தியாவுக்கு வந்துடுச்சு… கேரளாவுக்குள்ள வந்துடுச்சு… தமிழ்நாட்டுக்குள்ள வந்துடுச்சு… உங்க வீட்டு வாசல்ல நிக்குது… என்றெல்லாம் ஏகப்பட்ட வதந்திகள்.
இது ஒருபக்கம் என்றால், வேண்டாதவர்களை காயப்படுத்தவும், அப்பாவிகளை வம்புக்கு இழுக்கவும் கூட இந்த கொரானோ பயன்பட்டு வருவதுதான். அப்படி, தான் உண்டு… தன் போண்டா உண்டு என்று இருந்த காமெடி நடிகர் போண்டா மணி ‘கொரோனோ வைரஸா’ல் பாதிக்கப் பட்டுள்ளதாக ஒரு YouTube சேனலில் யாரோ தவறான தகவலை பரப்பியுள்ளனர்.
Bonda Mani Not affected by Korano Virus
இதைப் பார்த்து பதறிப்போய் “இது முற்றிலும் வதந்தி! நான் நலமாகவுள்ளேன். படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறேன்..! என்னைப் பற்றி தவறாக வரும் பொய் செய்தியை யாரும் நம்ப வேண்டாம்..!’ என போண்டா மணி கேட்டுக்கொண்டிருக்கிறார்.
அடுத்து போண்டா சாப்பிட்டால் கொரானோ வைரஸ் தாக்கும் என்று யாரும் அறிவிக்காமலிருக்கட்டும்..!
ஐயோ தாங்க முடியலை ப்பா..!
Related