வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்ய, ப்ளூ ஸ்டார் அதன் விரிவான வணிக குளிர்சாதன தீர்வுகளை விரிவுபடுத்துகிறது..!
ப்ளூ ஸ்டார் லிமிடெட் நிறுவனமானது 2025 கோடைக்காலத்திற்கான குளிர்சாதன தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. குறிப்பாக பல்வேறு குளிர்சாதன தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. வளர்ச்சியில் வலுவான கவனம் செலுத்தி, நிறுவனம் தனது வணிக குளிர்பதன வணிகத்தை விரிவுபடுத்தவும், நாட்டில் அதிகரித்து வரும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளவும் திட்டமிட்டுள்ளது.
கமர்ஷியல் குளிர்சாதன தீர்வுக்கான விரிவான வரம்பு
80 ஆண்டுகளுக்கும் மேலான வளமான பாரம்பரியம் மற்றும் நிபுணத்துவ கள அறிவைக் கொண்ட ப்ளூ ஸ்டார் நிறுவனமானது, தோட்டக்கலை, மலர் வளர்ப்பு, வாழைப்பழம், பால், ஐஸ்கிரீம், கோழி வளர்ப்பு, பதப்படுத்தப்பட்ட உணவுகள், குயிக் சர்வீஸ் ரெஸ்டாரண்டுகள், ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் கேட்டரிங் (HoReCa), பட்டுப் புழு வளர்ப்பு, கடல்சார், மருந்து மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளுக்கும் ஏற்ற குளிர்பதன தேவைகள் சார்ந்த தயாரிப்புகள் மற்றும் தீர்வுகளை உள்ளடக்கிய பரந்த தேவைக்கான தயாரிப்புகளை உருவாக்கியுள்ளது. இந்த போர்ட்ஃபோலியோவில் டீப் ஃப்ரீசர்கள், ஸ்டோரேஜ் வாட்டர் கூலர்கள், பாட்டில் வாட்டர் டிஸ்பென்சர்கள், visi கூலர்கள்/ஃப்ரீசர்கள், குளிர்பதன அறைகள் மற்றும் பல்வேறு தொழில் சார் தேவைகளுக்கான முழுமையான குளர்பதன தீர்வுகள் அடக்கம்.
டீப் ஃப்ரீசர்கள்
ப்ளூ ஸ்டாரின் டீப் ஃப்ரீசர் தயாரிப்புகளானது -26°C வரையிலான குளிரூட்டும் செயல்திறனை வழங்குகிறது. அனைத்து காலநிலைக்கும் ஏற்றது மற்றும் மின் சேமிப்பு திறன் கொண்டது. மேலும் கூலர் மற்றும் ஃப்ரீசருக்கு இடையில் மாற்றத்தக்க குளிரூட்டும் அம்சத்தையும் கொண்டுள்ளது. டிஜிட்டல் வெப்பநிலை கண்ட்ரோலர் அம்சத்துடன் பல வண்ண வகைகளில் கிடைக்கும் இந்த ஃப்ரீசர்கள் 60L முதல் 600L வரை கொள்ளளவு கொண்டவை. தவிர, கூலர் கம் ஃப்ரீசர் 375L கொள்ளளவு கொண்டது, அதே நேரத்தில் பாட்டில் கூலர்கள் 300L முதல் 500L வரை இருக்கும், மற்றும் க்ளாஸ் டாப் டீப் ஃப்ரீசர்கள் 100L முதல் 600L வரையிலான மாடல்களில் வருகிறது. விரிவான சேமிப்பு திறன்கள், பால் பொருட்கள், ஐஸ்கிரீம், ஃப்ரோஸன் உணவுகள், உணவகங்கள், ஹாஸ்பிடாலிட்டி துறை மற்றும் பல்பொருள் அங்காடிகள் போன்ற தொழில்களில் பரந்த வாடிக்கையாளர் தளத்திற்கு சேவை செய்ய ப்ளூ ஸ்டார் பயன்படுகிறது. இந்த டீப் ஃப்ரீசர்களின் விலைகள் கவர்ச்சிகரமான ரூ.16,000/- இல் தொடங்குகின்றன.
ஸ்டோரேஜ் வாட்டர் கூலர்
குளிர்ந்த நீர் தேவைகளானது அதிகரித்து வரும் நிலையில், ப்ளூ ஸ்டாரின் ‘ஸ்டோரேஜ் வாட்டர் கூலர்ஸ்’ தயாரிப்பானது கல்வி நிறுவனங்கள், கார்ப்பரேட் அலுவலகங்கள் மற்றும் வணிக நிறுவனங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. வேகமான குளிர்விப்புக்கான ஸ்ட்ரடி கம்ப்ரசர் ( sturdy compressor) அம்சம், உணவு தர ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் நீர் தொட்டிகள், சுற்றுச்சூழலுக்கு உகந்த குளிர்பதனப் பொருட்கள் மற்றும் பெரிய ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் வாட்டர் ட்ரே உடன் கூடிய ஸ்பீட் டிரைனேஜ் சிஸ்டம் ஆகியவற்றைக் கொண்ட இந்த கூலர்கள் ஆண்டு முழுவதும் எந்த வித பழுதுமின்றி தொடர் செயல்பாட்டுக்கு ஏற்றது. 15L முதல் 120L வரை கொள்ளளவில் கிடைக்கும் எப்பது குறிப்பிடத்தக்கது.
பாட்டில் வாட்டர் டிஸ்பென்சர்கள்
ப்ளூ ஸ்டாரின் பாட்டில் வாட்டர் டிஸ்பென்சர்கள் சூடான, குளிர்ந்த மற்றும் சாதாரண நீர் விநியோகத்தை வழங்கும் பல்வேறு மாடல்களில் வருகின்றன. இந்த சாதனமானது உணவு தரம் வாய்ந்த ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் தொட்டி, குறைந்த மின் நுகர்வு ஆகியவற்றை கொண்டுள்ளது. அதோடு, கூடுதல் பாதுகாப்பிற்காக சூடான நீர் குழாயில் வரும் வரும்போது சைல்ட்-லாக் அம்சமும் கொண்டுள்ளது. கீழே பொறுத்தப்படும் டிஸ்பென்சர் எளிதான வாட்டர் ஸ்டோரேஜ் மற்றும் நீர் நிரப்புவதற்கான வசதியையும் வழங்குகிறது. இதனால், அதிக எடையைத் தூக்க வேண்டிய தேவையும் இருக்காது.
விசி கூலர்கள்/ஃப்ரீசர்கள்
இந்த விசி கூலர்ஸ் (visi coolers) ஆனது குளிர்பானங்கள் மற்றும் உணவுப் பொருட்களை பாதுகாத்து வைப்பதற்கு மட்டுமல்லாமல், சில்லறை விற்பனை நிலையங்கள், உணவகங்கள் மற்றும் வணிக இடங்களில் கண்கவரும் வடிவமைப்புடன் கூடிய காட்சிப் பொருளாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த தயாரிப்பானது சீரான கூலராக செயல்படுகிறது. உட்புற எல்இடி விளக்குகள், மாறும் காலநிலைக்கு ஏற்ப சுற்றுப்புற வெப்பநிலை சார்ந்து இயங்குதல் மற்றும் பிராண்டை எடுத்துக்காட்டும் விதத்தில் பின்புற அமைப்பும் கொண்டுள்ளது. விசி கூலர்கள் தயாரிப்பானது 50L முதல் 1200L வரையிலான மாடல்களில் உள்ளன. அதே நேரத்தில் விசி ஃப்ரீசர்கள் ஆனது 450L கொள்ளளவில் கிடைக்கிறது. இதுவும் சீரான குளிர்ச்சி, சுப்பீரியர் இன்சுலேஷன்க்கு ஏற்ற Low-E அம்சம், க்ளியர் விசிபிலிட்டி மற்றும் frost-free டிஸ்ப்ளே அகிய அம்சங்களைக் கொண்ட double-glazed டெம்பர்டு கிளாஸ் டோர் ஆகியவற்றையும் கொண்டுள்ளது.
குளிர்சாதன அறைகள்
ப்ளூ ஸ்டாரின் குளிர்சாதன அறை தீர்வுகளானது சமீபத்திய தொழில்நுட்பம் மற்றும் தரமான பொருட்களைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளன. இது பல்வேறு வெப்பநிலை உணர்திறன் தேவைகளைப் பூர்த்தி செய்ய அதிநவீன அம்சங்களை வழங்குகிறது. ஒருங்கிணைந்த குளிர்சாதன அறை தீர்வுகளானது முன்-பொறியியல் செய்யப்பட்ட PUF இன்சுலேட்டட் பேனல்களுடன் ஹெர்மீடிக், செமி-ஹெர்மீடிக் மற்றும் ரேக் குளிர்பதன அமைப்புகளையும் வழங்குகின்றன. தவிர, நிறுவனமானது இன்வெர்ட்டர் அடிப்படையிலான குளிர்பதன யூனிட்டுகள், கிடங்கு மற்றும் லாஜிஸ்டிக் துறைக்கான குளிர்பதன தீர்வுகள் மற்றும் குளிர்சாதன அறைக்கான வலுப்படுத்த IoT அமைப்புகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
பிற குளிர்பதன பொருட்கள்
நிறுவனமானது ரீச்-இன் சில்லர்ஸ் & ஃப்ரீசர்ஸ், பிளாஸ்ட் ஃப்ரீசர்ஸ், பேக் பார் சில்லர்ஸ், அண்டர்கவுண்டர்ஸ், ஐஸ் மெஷின்கள் மற்றும் சாலடெட்டுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான சமையலறை சார்ந்த குளிர்பதன தீர்வுகளையும் வழங்குகிறது. தனிப்பட்ட மற்றும் தொழில்துறை சார்ந்த இடங்களுக்கு ஏற்ற வகையில் 50L மினி பார் தயாரிப்பானது சிறியதாகவும், திறன் கொண்டதாகவும், நேர்த்தியாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ப்ளூ ஸ்டாரின் ஹெல்த்கேர் குளிர்பதன தீர்வுகள் மருத்துவ மற்றும் மருந்து சேமிப்பின் தேவைகளைப் பூர்த்தி செய்யும். இந்த தயாரிப்பில் மருந்தக குளிர்சாதன பெட்டிகள், ultra-low வெப்பநிலை ஃப்ரீசர்ஸ், ice-lined குளிர்சாதன பெட்டிகள் மற்றும் தடுப்பூசி டிரான்ஸ்போர்ட்டர்கள் ஆகியவை பல்வேறு மருத்துவ மற்றும் மருந்து சேமிப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன.
சூப்பர் மார்க்கெட் வணிகத்துக்கான குளிர்பதன தயாரிப்புகளில் 4 அடி முதல் 12 அடி வரையிலான அளவுகளில் மல்டிடெக் சில்லர்கள் மற்றும் ஃப்ரீசர்கள் உள்ளன, அவை பிளக்-இன் மற்றும் ரிமோட் வகைகளில் கிடைக்கின்றன. இந்த தயாரிப்புகள் மல்டிபிளெக்சிங் அம்சங்கள் மற்றும் ஆற்றல் சேமிப்புக்கான நைட் கர்டன்ஸ் (night curtains) போன்ற மேம்பட்ட அம்சங்களை வழங்குகின்றன. கூடுதலாக, பேஸ்ட்ரி ஷோகேஸ் பெட்டிகள் மூடுபனியைத் தடுக்க டபுள்-கிளாஸ் மற்றும் ஹீட்டிங் வயர் அம்சங்களுடன் வருகின்றன.
உற்பத்தி தடத்தை விரிவுபடுத்துதல்
ப்ளூ ஸ்டாரின் முழு அளவிலான டீப் ஃப்ரீசர்கள் மற்றும் வாட்டர் கூலர்களும் நிறுவனத்துக்கு சொந்தமான வாடா மற்றும் அகமதாபாத்தில் உள்ள அதிநவீன தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படுகின்றன, இது ‘மேக் இன் இந்தியா, மேக் ஃபார் தி குளோப்’ முயற்சியை எடுத்துக்காட்டுகிறது. வாடா தொழிற்சாலையானது 3L டீப் ஃப்ரீசர்கள் மற்றும் 1L வாட்டர் கூலர்களின் நிறுவப்பட்ட உற்பத்தி திறனைக் கொண்டுள்ளது, அதே நேரத்தில் அகமதாபாத்தில் அமைக்கப்பட்டுள்ள தொழிற்சாலையானது 1 லிட்டர் யூனிட் டீப் ஃப்ரீசர்களுக்கான பிரத்யேக திறனைக் கொண்டுள்ளது. வாடா-வில் அமைக்கப்பட்டுள்ள குளிர்சாதன அறை தயாரிப்புக்கான பேனல்கள், evaporating யூனிட்ஸ் மற்றும் கண்டன்சிங் யூனிட்டையும் உற்பத்தி செய்கிறது.
நிலையான தொழில்நுட்பங்கள்
எரிசக்தி திறன், நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் அக்கறை ஆகியவற்றில் முன்னணியில் இருக்கும் ப்ளூ ஸ்டாரின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (R&D) மற்றும் தயாரிப்பு மேம்பாட்டுக் குழுக்கள் ஆகியவை வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட வடிவமைப்புகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த தயாரிப்புகளில் கவனம் செலுத்துகின்றன. இந்த நிறுவனம் குறைந்த GWP குளிர்பதனப் பொருட்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த இன்சுலேஷன் முகவர்களைப் பயன்படுத்துகிறது. இந்தியாவில் இதுவே முதல் முறை. தவிர, பசுமையான தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதற்காக இந்திய அரசாங்கத்தால் நிறுவனம் தொடர்ந்து அங்கீகரிக்கப்படுகிறது. டீப் ஃப்ரீசர்களை உற்பத்தி செய்யும் வாடா தொழிற்சாலையானது இந்திய பசுமை கட்டிட கவுன்சிலால் பிளாட்டினம் சான்றளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு உள்கட்டமைப்பு
NABL-அங்கீகாரம் பெற்ற டீப் ஃப்ரீசர் சோதனை ஆய்வகங்கள் மற்றும் AHRI-சான்றளிக்கப்பட்ட சோதனை ஆய்வகங்கள் உள்ளிட்டவற்றுடன் ப்ளூ ஸ்டார் நிறுவனமானது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு உள்கட்டமைப்பை கணிசமாக மேம்படுத்தியுள்ளது. தவிர, நிறுவனமானது ஏராளமான காப்புரிமைகள் மற்றும் வடிவமைப்பு பதிவுகளை தாக்கல் செய்துள்ளது. மேலும் இந்த வரிசையில் அடுத்தடுத்த செயல்பாடுகளையும் கொண்டு வருகிறது. வலுவான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு மூலம், ப்ளூ ஸ்டார் புதிய தயாரிப்பு மேம்பாடுகளில் அதிநவீன உலகளாவிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தயாரித்து வருகிறது.
விநியோகம் மற்றும் சேவை வலையமைப்பை விரிவுபடுத்துதல்
ப்ளூ ஸ்டாரின் 2100 விற்பனை மற்றும் சர்வீஸ் சேனல் பார்ட்னஸ் 900 நகரங்களில் குளிர்பதனப் பொருட்களை விற்பனை செய்தல், நிறுவுதல் மற்றும் பராமரித்தல் ஆகியவற்றில் பயிற்சி பெற்றுள்ளனர். இந்த நிறுவனம் ஏர் கண்டிஷனிங் மற்றும் வணிக குளிர்பதனம் ஆகிய இரண்டிற்கும் இந்தியாவின் முன்னணி விற்பனைக்குப் பிறகான சர்வீஸ் வழங்குநராகவும் உள்ளது, 24/7 வாடிக்கையாளர் ஆதரவு, விரைவன சர்வீஸ், மொபைல் அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவம் ஆகியவற்றை உள்ளடக்கிய கோல்ட் ஸ்டாண்டர்ட் திட்டத்தை வழங்குகிறது. இந்த நிறுவனம் அதன் வாடிக்கையாளர் சேவை திறன்களை மேலும் மேம்படுத்த அதன் சேவை உள்கட்டமைப்பு மற்றும் CRM மென்பொருளில் குறிப்பிடத்தக்க முதலீடுகளைச் செய்து வருகிறது.
எதிர்கால வாய்ப்புகள்
ப்ளூ ஸ்டார் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பி. தியாகராஜன் கூறுகையில், “ஐஸ்கிரீம் OEMகள், QSR சங்கிலிகள், HoReCa துறை, விரைவு வர்த்தகம், உணவு சில்லறை விற்பனை மற்றும் சுகாதாரப் பராமரிப்பு ஆகியவற்றின் தேவையால் வணிக குளிர்பதனத் துறை வலுவான வளர்ச்சியைக் காண்கிறது. அதுவும், உணவுத் துறையில் வீட்டினைத் தாண்டி வெளியே மேற்கொள்ளப்படும் நுகர்வுகளில் வளர்ந்துவரும் டிரெண்டினை எடுத்துக்காட்டுகிறது. புதுமையான ஆற்றல் திறன் கொண்ட மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த தயாரிப்புகளை வழங்குவதன் மூலம் எங்கள் சந்தைத் தலைமையை மேம்படுத்த நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். எங்கள் தயாரிப்புகளை மேம்படுத்தவும் செயல்பாடுகளை நெறிப்படுத்தவும் டிஜிட்டல்மயமாக்கல் மற்றும் IoT தொழில்நுட்பங்களில் குறிப்பிடத்தக்க முதலீடுகளைச் செய்துள்ளோம். வரவிருக்கும் கோடைக்காலம் மற்றும் பல்வேறு தயாரிப்பு வரம்பைக் கொண்டு, இந்த நிதியாண்டிலும் அதற்குப் பிறகும் எங்கள் வளர்ச்சி வாய்ப்புகள் சிறப்பானதாக இருக்கும் நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம்.” என்றார்.
கூடுதல் தகவலுக்கு, ப்ளூ ஸ்டார் லிமிடெட்டின் மார்கெடிங் (கூலிங் மற்றும் சுத்திகரிப்பு உபகரண தயாரிப்புகள் ) மற்றும் கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் துணைத் தலைவர் கிரிஷ் ஹிங்கோரானியை தொடர்பு கொள்ளவும். மின்னஞ்சல்: girishhingorani@bluestarindia.com தொலைபேசி: +91 22 66684000/ +91 9820415919