January 18, 2025
  • January 18, 2025

கட்சி ஆரம்பிக்கும் வேலைகள் 90 சதவிகிதம் முடிந்தது – ரஜினி

by on October 20, 2018 0

‘சன் பிக்சர்ஸ்’ தயாரிப்பில் ரஜினி நடிக்கும் ‘பேட்ட’ படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வருவது தெரிந்த விஷயம். இதன் படப்பிடிப்பு வாரணாசியில் நடந்து வந்தது. நேற்றுடன் படப்பிடிப்பு முடிந்த விஷய்த்தை ட்விட்டரில் தெரிவித்திருந்தார் ரஜினி. பின்னர் வாரணாசியில் இருந்து சென்னை திரும்பியவர் நிருபர்களைச் சந்தித்தார். “டிசம்பர் 12-ம்தேதி உங்கள் பிறந்தநாளன்று புதுக்கட்சி அறிவிப்பு வருமா..?” என்ற கேள்விக்கு பதிலளித்த ரஜினி, “கட்சி தொடங்கும் வேலைகள் 90 சதவிகிதம் முடிந்து விட்டன. ஆனால், என் பிறந்த நாளன்று கட்சியை […]

Read More

நெல் ஜெயராமன் குறித்த நடிகர் கார்த்தியின் நெகிழ்ச்சிக் கடிதம் – தவிர்க்காமல் படியுங்கள்

by on October 20, 2018 0

“திருவாருர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே தான் பிறந்த ஆதிரெங்கம் கிராமத்தில் வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களின் வழித்தோன்றலாய் இயற்கை விவசாய பண்ணையை உருவாக்கி யானைக்கவுனி, கருங்குருணை உள்ளிட்ட150-க்கும் மேற்பட்ட பண்டைகால பாரம்பரிய நெல் வகைகளைக் கண்டறிந்து அதனைத் தனது பண்ணையில் விளைவித்து வந்தார்.  ஆண்டுக்கொரு முறை தனது ஆதிரெங்கம் கிராமத்தில் நெல் திருவிழா நடத்தி இந்தியா முழுவதும் மட்டுமின்றி உலகத்தின் பல நாடுகளிலிருந்தும் பல்வேறு ஆய்வாளர்களைப் பங்கேற்க செய்து அவர்கள் மூலம் விவசாயிகள், இயற்கை ஆர்வலர்கள், கல்லூரி […]

Read More

5 மணி நேரத்தில் 6 மில்லியன் பார்வைகளைத் தாண்டிய சர்கார் டீஸர்

by on October 19, 2018 0

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி விஜய் நடிக்கும் ‘சர்கார்’ பட டீஸர் இன்று மாலைதான் வெளியானது. வெளியான ஐந்து மணிநேரத்தில் ஆறு மில்லியன் பார்வைகளையும், பத்து லட்சம் லைக்குகளையும், 85 ஆயிரம் கமெண்ட்டுகளையும் பெற்றது. நாளை காலைக்குள் இதன் பார்வைகள் பத்து மில்லியனைத் தாண்டிவிடும் என்று நம்பலாம். கீழே அந்த அசகாய டீஸர்…

Read More

சிவகார்த்திகேயன் மகளுடன் பாடிய பாடல் 5 கோடி பார்வைகளைக் கடந்தது

by on October 18, 2018 0

சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் மூலம் ‘கனா’ படத்தை சிவகார்த்திகேயன் தயாரிக்கும் செய்தி அனைவருக்கும் தெரிந்ததுதான். சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், மற்றும் தர்ஷன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘கனா’ படத்தின் ‘வாயாடி பெத்த புள்ள’ பாடல் யூடியூபில் 50 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. அதில் சிவகார்த்திகேயனும், அவர் மகள் ஆராதனா மற்றும் வைக்கம் விஜயலட்சுமி பாடியிருக்கிறார்கள். இதுபற்றி சிவகார்த்திகேயன் இப்படி சிலாகிக்கிறார். “சில நேரங்களில், நாம் எதிர்பாராத நல்ல விஷயங்கள் நடந்து நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். […]

Read More

சண்டக்கோழி 2 திரைப்பட விமர்சனம்

by on October 18, 2018 0

இது இரண்டாம் பாகங்களின் சீசன் என்பதால் தங்கள் பங்குக்கு இயக்குநர் லிங்குசாமியும், விஷாலும் கைகோர்த்துக் களம் இறங்கியிருக்கிறார்கள், தங்களது வெற்றிப்படைப்பான சண்டக்கோழியின் இரண்டாம் பாகத்தில். முதல் பாகம் வெளியாகி 13 வருடங்கள் கழித்து வெளியாகும் இரண்டாவது பாகப் படம் என்பதால் கொஞ்சம் அதிகமாகவே எதிர்பார்க்கிறோம். காரணம் முதல் பாகம் ஒரு ஆக்‌ஷன் படம் எப்படி இருக்க வேண்டுமோ அதன் முழுத்தன்மையுடன் வெளியாகி பாராட்ட வைத்தது.  இது முதல் பாகத்தின் தொடர்ச்சியா என்றால் “ஆமாம்…” என்றுதான் சொல்ல வேண்டும். […]

Read More

ஆண் தேவதை இயக்குநர் தாமிராவின் குமுறலைக் கேளுங்கள்…

by on October 17, 2018 0

தான் அறிமுகமான ‘ரெட்டச் சுழி’ படத்திலேயே இயக்குநர் இமயத்தையும், இயக்குநர் சிகரத்தையும் நடிக்க வைத்த பெருமைக்குரிய இயக்குநர் தாமிரா எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு ‘ஆண் தேவதை’ மூலம் மீண்டும் வெள்ளித்திரைக்குள் வந்திருக்கிறார். படம் பார்த்தவர்கள் பாராட்டியும் அவர் பட்ட… பட்டுக் கொண்டிருக்கும் வேதனைகளை அவரே சொல்கிறார். கேளுங்கள்… “ஆண் தேவதை திரையிட்ட அரங்கங்களில் படம் பார்த்த அனைவருக்கும் படம் பிடித்திருக்கிறது. திருச்சி கோவை சேலம் சென்னை ஆகிய நகரங்களில் அதிக விளம்பரம் இல்லாமலேயே படம் பெரும் வரவேற்பைப் […]

Read More
CLOSE
CLOSE