August 16, 2026
  • August 16, 2026

நடிகர் சங்க நடிகர் நலனுக்கு ஐசரி கணேஷ் 10 லட்சம் உதவி

by on March 24, 2020 0

நடிகர் சங்கத்தின் முன்னாள் அறக்கட்டளை உறுப்பினர் பூச்சி முருகன் சிறப்பு அலுவலருக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அதில், “நடிகர் சங்கத்தில் 90 சதவீத உறுப்பினர்கள் அன்றாடம் நடைபெறும் சினிமா படப்பிடிப்புப் பணிகளையே நம்பி இருப்பவர்கள். இவர்கள் வேலை நிறுத்தத்தால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள மற்ற தொழிலாளர்களுக்கு உதவும் பொருட்டு தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் பெப்சி சார்பில் இன்று பெரிய நடிகர்களிடம் உதவி கேட்டு கோரிக்கை விடுக்கப்பட்டு உதவிகளும் வந்துகொண்டிருக்கின்றன. அதுபோலவே நமது சங்கம் […]

Read More

சூர்யா கார்த்தி சிவகுமாரைத் தொடர்ந்து பெப்ஸிக்கு சிவகார்த்திகேயன் உதவி

by on March 23, 2020 0

கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த வாரம் முதல் மார்ச் 31ம் தேதி வரை படப்பிடிப்புகள் நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டதன் விளைவாக சினிமா சங்கங்களின் கூட்டமைப்பான பெப்ஸியைச் சேர்ந்த சுமார் 25,000 தொழிலாளர்கள் வேலையின்றி முடங்கியுள்ளனர். அவர்களில் 15,000 பேரின் வாழ்வாதாரம் அன்றாடம் படப்பிடிப்பு நடந்தால் மட்டுமே என்று இருக்க, டிவி தொடர்களின் படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டு விட மிகவும் பாதிப்படைந்து இருக்கிறார்கள். இதனால் பெப்சி அமைப்பின் தலைவரான ஆர்.கே.செல்வமணி இன்று நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் சினிமாவினால் வளர்ச்சி […]

Read More

நிரம்பி வழியும் வெளியூர் பஸ்கள் – நம்பிக்கை தரும் அமைச்சர்

by on March 23, 2020 0

கொரோனா முன் எச்சரிக்கை காரணமாக மாநிலம் முழுவதும் நாளை மாலை முதல், 144 தடை உத்தரவு அமலாகிறது. இதனால் சென்னையிலிருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளால் கோயம்பேடு பேருந்து நிலையம் நிரம்பி வழிகிறது. பயணிகள் பலரும் பஸ்களில் இடம் கிடைக்காமல் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த பேட்டி விபரம்: “சென்னையில் இருந்து நாளை மாலை வரை, வெளிமாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். ஆகையால் பயணிகள் கவலைப்பட தேவையில்லை. சென்னை மாநகரப் […]

Read More

கொரோனா விழிப்புணர்வு கவிதை போட்டி ரூ 50000 பரிசுகள்

by on March 23, 2020 0

நமது மத்திய,மாநில அரசுகள் கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து, மக்களை மீட்க போர்க்கால நடவடிக்கை  எடுத்து வரும் நிலையில் , முழுக்க முழுக்க, மக்களிடம் அது சார்ந்த விழிப்புணர்வை மேலும் தூண்டும் விதமாக கட்டில் திரைப்படக்குழு, கரோனா விழிப்புணர்வு கவிதைப்போட்டியை அறிவித்திருக்கிறது…. 12 வரிகளுக்கு மிகாமல் கவிதை எழுதி, kattiltamilfilm@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மார்ச் 31(2020) ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்குள் அனுப்பவும். முதல் பரிசு : 25,000 இரண்டாம் பரிசு : 15,000 மூன்றாம் பரிசு : […]

Read More

சென்னை ஈரோடு காஞ்சிபுரம் மாவட்டங்களை தனிமைப்படுத்த உத்தரவு

by on March 22, 2020 0

இன்று 22 மார்ச் 2020 அன்று சுய ஊரடங்கை கடைபிடிக்க பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்ததைத் தொடர்ந்து இன்று நாடுமுழுவதும் மக்கள் வெளியே வராமல் வீட்டுக்குள்ளே முடங்கினர்.   இந்நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக இன்று பீகார் மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில் தலா ஒருவர் பலியாகியதை அடுத்து இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 370-ஐ தாண்டியுள்ளது.   இதனால் மத்திய அரசு கொரோனாவால் பாதித்த நாட்டில் உள்ள 75 மாவட்டங்களில் தேவைப்பட்டால் ஊரடங்கு […]

Read More

திரைப்பட நடிகர் கதை வசனகர்த்தா இயக்குனர் விசு காலமானார்

by on March 22, 2020 0

நாடக மேடை தொடங்கி நடிப்பது மட்டும் அல்லாது எழுத்தாளர், இயக்குனர், டிவி தொகுப்பாளர் என பன்முகம் கொண்டவர் விசு. 1945ஆம் ஆண்டு திருநெல்வேலி களக்காட்டில் பிறந்த விசுவின் முழுபெயர் M.R விஸ்வநாதன். நாடக மேடைகளில் புகழ்பெற்ற இவர் சினிமாவில் இயக்குநர் கே.பாலசந்தரிடம் துணை இயக்குனராக பணியாறினார். அப்போது சிறுசிறு கதாபாத்திரத்தில் நடிக்கத் தொடங்கினார். விசு நடித்த முதல்படம் ரஜினியின் ‘தில்லு முல்லு’ அந்த படத்தில் வசனமும் எழுதிய இவர் டப்பிங்கும் செய்துள்ளார். மேலும் அவரே கதை வசனம் […]

Read More

அய்யப்பனும் கோஷியும் தமிழில் சரத்குமாரும் சசிகுமாரும்

by on March 22, 2020 0

சமீபத்தில் நடிகர் ப்ரித்வி ராஜ் மற்றும் பிஜு மேனன் இணைந்து நடித்து வெளியான மலையாளப் படம் ‘அய்யப்பனும் கோஷியும்’. கேரள, தமிழ் நாட்டின் எல்லைப் பகுதியில் சந்தித்துக் கொள்ளும் இருவருக்கிடையே நடக்கும் ஈகோ உள்ளிட்ட சண்டையை மிகவும் வித்யாசமான கோணத்தில் காண்பிக்கும் இந்த திரைப்படத்திற்கு இருமாநிலத்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை ஃபைவ் ஸ்டார் கதிரேசன் வாங்கியிருப்பது தெரிந்த விஷயம். அதில் நடிக்கப்போவது யார் என்ற கேள்வி அனைவரின் மனதிலும் […]

Read More
CLOSE
CLOSE