March 28, 2023
  • March 28, 2023
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • லண்டனில் சிக்கிய தம்பி மீண்டு வர மாஸ்டர் மாளவிகா கவலை
April 28, 2020

லண்டனில் சிக்கிய தம்பி மீண்டு வர மாஸ்டர் மாளவிகா கவலை

By 0 477 Views

விஜய் ரசிகர்களுக்கெல்லாம் மாஸ்டர் எப்போது ரிலீஸாகும் என்ற கவலை. ஆனால், மாஸ்டர் நாயகி மாளவிகா மோகனனுக்கோ தன் தம்பி எப்போது வீட்டுக்கு வருவான் என்ற கவலை.

இப்போது கொரோனா ஊரடங்கால் வீட்டிலேயே முடங்கி இருக்கும் மாளவிகா தனது தம்பி ஆதித்யா லண்டனில் சிக்கித்தவிப்பதாக வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

“படிப்பதற்காக லண்டன் சென்ற என்னோட பிரதர் கொரோனா ஊரடங்கால் நாடு திரும்ப முடியாமல் அங்கு சிக்கிட்டார். இதனால் அவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டும் இருக்கார்.

கல்லூரி வளாகத்திற்கு வெளியே வாடகை குடியிருப்பில் வசிக்கிறார். ஒரு படுக்கையுடன் கூடிய சின்ன ரூம் அது. அவனுடன் பயிலும் பிற நாடுகளைச் சேர்ந்த பல மாணவர்கள் வெளியேறியதால், அவன் தனியாக இருக்கான்.

லண்டனில் கொரோனா பாதிப்பு மோசமாக உள்ளதால், அது அவரை மனரீதியாக பாதித்துள்ளது. ஆதித்யாவின் அறையில் சமைக்க எந்தவிதமான வசதிகளும் இல்லை, உணவகங்களிலிருந்து உணவை ஆர்டர் செய்வது பாதுகாப்பானதாக இல்லை.

கடந்த ஒரு மாதமாக, டப்பாக்களில் அடைக்கப்பட்ட உணவுகளை சாப்பிட்டு வாரார். இதனால் அவரது மன மற்றும் உடல் ஆரோக்கியம் குறித்து கவலையாக இருக்குது.

இந்தப் பிரச்சனை எப்போ முடியும்னு தெரியவில்லை. மே 3-க்குப் பிறகாவது ஆதித்யாவால் இந்தியா திரும்ப முடியுமா? என்பதும் தெரியலை.

இது தொடர்பாக லண்டனில் உள்ள இந்திய தூதரகத்துக்கு அவர் பலமுறை மெயில் அனுப்பியும் சரியான பதில் வரலை…” இன்று தெரிவித்திருப்பதை பார்த்த அவரது ரசிகர்கள் கவலை க்குள்ளாகி இருக்கிறார்கள்.

மாளவிகா பிரதர் சீக்கிரம் மீண்டு வரட்டும்..!