January 23, 2025
  • January 23, 2025

பரியேறும் பெருமாளை விட தாக்கம் ஏற்படுத்தும் முந்திரிக்காடு – சீமான்

by on July 28, 2019 0

ஆதி திரைக்களம் தயாரிப்பில் மு.களஞ்சியம் இயக்கியுள்ள படம் முந்திரிக்காடு. நேற்று இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் அய்யா நல்லக்கண்ணு பேசியதிலிருந்து… “இந்தப்படம் ஆரம்பிக்கும் போது இருந்ததை விட இப்போது தமிழ்நாட்டில் ஆணவக்கொலைகள் அதிகமாக நடக்கிறது. படம் பார்க்கத்தானா? அதில் கற்றுக்கொள்ள வேண்டும். இந்தப்படத்தின் நல்ல கருத்துக்கள் மக்களிடம் சென்று சேர வேண்டும். இந்தப்படம் வெளிவந்த பின் ஆணவக்கொலைகள் குறையவேண்டும்..!” இயக்குநர் ராஜு முருகன் – “பெத்தவன் நாவலை மு.களஞ்சியம் ‘முந்திரிக்காடு’ என்ற பெயரில் படமாக்கி […]

Read More

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி ஹீரோவாகிறார்

by on July 27, 2019 0

விண்னைதாண்டி வருவாயா, கோ, நீதானே என் பொன்வசந்தம், யாமிருக்க பயமே உள்ளிட்ட பல வெற்றி படங்களை RS இன்போடெய்ன்மெண்ட் சார்பாக தயாரித்த தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தற்போது எதார்த்த இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றை மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றார். பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்த நடிகர் சூரி இப்படத்தில் முதன்முறையாக கதாநாயகனாக நடிக்கின்றார். குடும்பமாக அனைவரும் ரசித்து பார்க்கும்படி இப்படம் நகைச்சுவை விருந்தாக அமையுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இப்படத்தின் மற்ற நடிகர் […]

Read More

கென்னடி கிளப் படத்தில் பாரதிராஜாவுக்கு தேசிய விருது கிடைக்கும் – சுசீந்திரன்

by on July 27, 2019 0

சுசீந்திரன் இயக்கத்தில் பாரதிராஜா, எம்.சசிகுமார் நடித்திருக்கும் ‘கென்னடி கிளப்’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை (27-07-2019) நடைபெற்றது. அதில் இயக்குநர் சுசீந்திரன், சசிகுமார், பாரதிராஜா பேசியதிலிருந்து… சுசீந்திரன் – “நல்லுச்சாமி பிக்சர்ஸ் சார்பில் இது எங்களுடைய மூன்றாவது படம். என் அப்பாவிற்கு விளையாட்டு பிடிக்கும். அதை வைத்து படமெடுக்க வேண்டும் என்றுதான் ‘வெண்ணிலா கபடி குழு’ எடுத்தேன். இப்படத்தில் நடித்தற்காக பாரதிராஜாவிற்கு தேசிய விருது கிடைக்கும். படப்பிடிப்பில் ஒவ்வொரு காட்சியிலும் அவரிடம் வசனங்களைக் கொடுத்து […]

Read More

கர்நாடக மாநில முதல்வராக பதவியேற்றார் எடியூரப்பா

by on July 26, 2019 0

கர்நாடகாவில் குமாரசாமி தலைமையில் நடந்து வந்த காங்கிரஸ் – ஜனதா தளம் (எஸ்) கூட்டணி அரசில் கூட்டணி கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அரசுக்கு ஆபத்து ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி தலைமையிலான அரசு தோல்வி அடைந்தது. அதில் அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் பெறப்பட்டதை அடுத்து குமாரசாமி முதல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் இன்று காலை ஆளுநர் வஜூபாய் […]

Read More

A1 படத்தின் திரை விமர்சனம்

by on July 26, 2019 0

சந்தானம் படத்துக்கு எதற்காகப் போகிறோமோ அதை நன்றாகவே திருப்திப்படுத்தி அனுப்புகிற கதைக்களமும், அதைத் திறம்படக் கொடுத்திருக்கும் திரைக்கதையும் படத்தின் பலம். வீரமிக்க ஒருவரை மணக்க விரும்பும் பிராமணப் பெண்ணான நாயகி தாரா அலிசா, சந்தானத்தை அப்படி ஒரு மோதலில் பார்க்கிறார். அப்பாவின் விரதத்துக்காக தீர்த்தம் வாங்கிவர கோவிலுக்கு வந்த சந்தானம் நெற்றியில் நாமமும் போட்டிருக்க, அவரை பிராமணர் என்று புரிந்து க்பொள்ளும் தாரா அவர்மீது காதல் கொள்கிறார். ஆனால், சந்தானம் பிராமணர் இல்லை என்று தெரிந்ததும் காதலை […]

Read More

கொளஞ்சி திரைப்பட விமர்சனம்

by on July 26, 2019 0

கிராமத்தில் ஒரு பகுத்தறிவுவாதி வாழ்ந்தால் அவர் இந்த சமூகத்தில் எப்படியெல்லாம் எதிர்கொள்ளப்படுவாரோ அப்படி வாழ்ந்து வருகிறார் சமுத்திரக்கனி. மனைவி, இரண்டு மகன்கள் என்று வாழ்ந்து வருபவருக்கு ஆறாவது படிக்கும் மூத்த மகனின் முரட்டுத் தனத்தால் எப்போதும் பிரச்சினை. அவர்கள் இருவருக்குமான இடைவெளியும் அதை அவர்கள் எப்படி எதிர்கொண்டார்கள் என்பதும்தான் கதை. ஊருக்கெல்லாம் அறிவு தரும் ஒரு வாத்தியாருக்கு முட்டாள் மகன் ஒருவன் இருந்தால் அவர் எப்படியெல்லாம் பிரச்சினைகளை எதிர்கொள்வாரோ அப்படி ஆகிறது சமுத்திரக்கனிக்கு. தான் நேர்மையாக, உண்மையானவனாக […]

Read More

ரசிகர்களால் அரசியலுக்கு இழுக்கப்படும் நடிகர்

by on July 25, 2019 0

விமல், ஓவியா நடிப்பில் வெளியான ‘களவாணி 2’ மூன்றாவது வாரமாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.   சற்குணம் இயக்கியிருந்த இந்தப்படத்தில் வில்லனாக இருந்தாலும் நேர்மையுடன் வந்த ‘பப்ளிக் ஸ்டார்’ துரை சுதாகர் ஏற்றிருந்த வேடம் ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்தது. அவரது கதாபாத்திரம் செண்டிமெண்ட் நிறைந்த நேர்மையான மனிதராக சித்தரிக்கப்பட்டிருந்ததால், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. அதிலும் களவாணித்தனம் செய்து தேர்தலில் வெற்றி பெறும் விமல் மீது ரசிகர்கள் கோபப்பட்டாலும், இயல்பில் நல்லவரான துரை சுதாகர் கதாபாத்திரம் இறுதியில் பேசும் வசனத்திற்கு கைதட்டுகள் […]

Read More

400 + திரையரங்குகளில் சந்தானத்தின் A1

by on July 25, 2019 0

‘தில்லுக்கு துட்டு 2’ படத்தைத் தொடர்ந்து சந்தானத்தின் நடிப்பில் வெளியாக  இருக்கும் படம் ‘A1′. அக்கியூஸ்ட் 1 என்பதன் சுருக்கமான இப்படத்தை அறிமுக இயக்குநர் ஜான்சன்  இயக்க, அறிமுக தயாரிப்பாளர் எஸ்.ரான் நாராயணன் சர்க்கிள் பாக்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கிறார்.   இப்படத்தில் எப்போதும் போல சந்தானத்தின் காமெடி சரவெடியாக வெடித்தாலும், இதுவரை சந்தானம்  ஹீரோவாக நடித்த படங்களில் இது சற்று வித்தியாசமான கதைக்களம் கொண்ட படம் என்பதோடு,  இப்படத்தின் மூலம் முதல் முறையாக இசையமைப்பாளர் சந்தோஷ் […]

Read More

விஜய் சேதுபதியால் முத்தையா முரளிதரனுக்கு பெருமையா?

by on July 25, 2019 0

இலங்கையைச் சேர்ந்த உலகப்புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை டார் மோஷன் பிக்சர்ஸ் படமாகத் தயாரிக்கிறார்கள்.  இதில் முரளிதரன் வேடத்தில் நடிக்க இருக்கிறார் விஜய் சேதுபதி. எம்.எஸ் ஸ்ரீபதி இப்படத்தை எழுதி இயக்க உள்ளார். தமிழில் உருவாகும் இந்தப்படம், உலகின் பல மொழிகளில் வெளியிடப்பட இருக்கிறது. இந்தப்படம் பற்றி முத்தையா முரளிதரன் கூறும்போது… “எனது வாழ்வின் கதையைப் படமாகத் தயாரிக்கும் தார் மோஷன் பிக்சர்ஸ் உடன் சேர்ந்து பணியாற்றுவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இப்படத்தை 2020 ஆம் […]

Read More
CLOSE
CLOSE