October 14, 2026
  • October 14, 2026

சொத்து வரி உயர்வை திரும்பப் பெற வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

by on April 4, 2022 0

தமிழக அரசின் சொத்து வரி உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சொத்து வரியை உயர்த்தி உள்ள திமுக அரசின் முடிவு கடும் கண்டனத்திற்குரியது. முந்தைய அரசு 100 விழுக்காடு வரை சொத்து வரியை உயர்த்தியபோது அதனைக் கண்டித்து போராடிவிட்டு, தற்போது 150 விழுக்காடு வரையில் சொத்து வரியை அதிகரிக்கச் செய்திருக்கும் திமுக அரசின் நிலைப்பாடு எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.  தற்போதைய சொத்து வரி உயர்வானது, வீட்டு வாடகையில் எதிரொலித்து, […]

Read More

ஆர்யா நடிக்கும் கேப்டன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

by on April 4, 2022 0

நடிகர் ஆர்யா, டெடி மற்றும் சார்ப்பட்டா பரம்பரை போன்ற தொடர்ச்சியாக அழுத்தமான கதையம்சங்கள் கொண்ட, பிளாக்பஸ்டர் திரைப்படங்களை வழங்கியதன் மூலம் புகழின் உச்சத்தை எட்டியுள்ளார். அவரது நடிப்பில் அடுத்ததாக வரவிருக்கும் கேப்டன் படத்திற்கு வர்த்தக வட்டாரங்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றன. “டெடி” என்ற பிரமாண்டமான படத்திற்குப் பிறகு ஆர்யா-சக்தி சௌந்தர் ராஜன் ஜோடி மீண்டும் இணைந்து செயல்படுவதால், இப்படம் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தயாரிப்பாளர்கள் தற்போது இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர், […]

Read More

போதை பார்ட்டியில் போலீசிடம் சிக்கிய விஜய் சேதுபதி பட ஹீரோயின்

by on April 3, 2022 0

ஐதராபாத் பஞ்சரா ஹில்ஸ் பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் போதைப் பொருட்களைப் பயன்படுத்தி, நள்ளிரவு பார்ட்டி நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. ஐதராபாத் போலீசார், ஞாயிறன்று அதிகாலை அங்கு அதிரடியாக நுழைந்து சோதனை செய்தனர். அப்போது, 90 இளைஞர்கள், 38 இளம் பெண்கள் மற்றும் பப் ஊழியர்கள் உள்பட சுமார் 150 பேர் சிக்கினர். அனைவரும் தொழிலதிபர்கள் சினிமா மற்றும் அரசியல் பிரமுகர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அவர்கள் அதிக அளவில் போதைப் பொருள் […]

Read More

‘நெசவு 2022’ கைத்தறி கண்காட்சியை ஜவுளித் துறை இணையமைச்சர் தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ் தொடங்கி வைத்தார்

by on April 3, 2022 0

ஜவுளித் துறை இணையமைச்சர் தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ் சென்னையில் தனது அமைச்சகம் தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகளில் சனிக்கிழமை கலந்து கொண்டார். அப்போது ‘நெசவு 2022’ (NESAVU 2022) கைத்தறி கண்காட்சியை அமைச்சர் தொடங்கி வைத்தார். இந்திய கைத்தறித் தயாரிப்புகள் மற்றும் கைவினைத்திறனை ஊக்குவிக்கும் முயற்சியில், மத்திய குடிசைத் தொழில் கழகம் (CCIC) நெசவாளர்கள் மற்றும் மாஸ்டர் நெசவாளர்களால் கைவினைப் பொருட்களைக் கொண்ட ‘நெசவு 2022’ – ஒரு கைத்தறி கண்காட்சியை நடத்துகிறது.  சென்னை, அண்ணாசாலை, நந்தனம், டெம்பிள் […]

Read More

செல்ஃபி திரைப்பட விமர்சனம்

by on April 3, 2022 0

தன்பிள்ளை ஒரு பொறியாளராகவோ, மருத்துவராகவோ ஆக வேண்டும்  என்பது இன்றைய பெற்றோர்களின் கண்மூடித்தனமான கனவு. அதற்காக எப்பாடுபட்டாவது சேர்த்த பணத்தை நம்பிக் கொடுத்து ஏமாறுவது ஒரு பக்கம். அந்த பலவீனத்தையே பயன்படுத்திக்கொண்டு தனியார் கல்லூரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் ‘மேனேஜ்மென்ட் சீட்’டுக்கு கணக்கில்லாத ரேட் வசூலித்துக் கொள்ளையடிப்பது இன்னொரு பக்கம்.   இதில் மூன்றாவது பக்கம் ஒன்றும் இருக்கிறது. மேற்படி பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் மருத்துவராகவோ பொறியாளராக வரவேண்டும் என்று தாங்களாகவே கனவுகண்டு அதைப் பிள்ளைகள் மேல் அவர்களின் […]

Read More

பீஸ்ட் டிரெயிலர் பிடிக்காததால் தியேட்டர் நாசம் – நடவடிக்கை எடுக்க கோரிக்கை

by on April 3, 2022 0

விஜய் நடிக்க நெல்சன் திலிப்குமர் இயக்கத்தில் உருவாகிவரும் பீஸ்ட் படத்தின் ட்ரைலர் நேற்று வெளியானது. எப்போது வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட கொண்டிருந்த டிரைலர் நேற்று வெளியானதில் விஜய் ரசிகர்கள் பெரும் உற்சாகமடைந்தனர். நேற்று வெளியான பீஸ்ட் பட ட்ரெய்லர் உலகெங்கிலும் வரவேற்பு பெற்று யூடியூப் சேனலில் பல கோடி பேர் அதனை பார்த்திருந்தும் அந்த ட்ரெய்லர் பற்றிய எதிர்மறையாக மாறுபட்ட கருத்தும் இன்னொரு பக்கம் உலா வருகிறது பீஸ்ட் பட ட்ரெய்லரை நேற்று சில தியேட்டர்களிலும் திரையிட்டனர். […]

Read More

ரவிதேஜாவின் ‘டைகர் நாகேஸ்வரராவ்’ படப்பிடிப்பு உகாதி அன்று தொடங்கியது

by on April 3, 2022 0

‘மாஸ் மகாராஜா’ ரவி தேஜா, ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’, பட தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வால், இயக்குநர் வம்சி ஆகியோரின் கூட்டணியில் பான் இந்தியா திரைப்படமான ‘டைகர் நாகேஸ்வரராவ்’ படத்தின் படப்பிடிப்பு இன்று கோலாகலமாக தொடங்கியது. ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தின் தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வால் தயாரிப்பில் உருவாகும் பிரம்மாண்டமான திரைப்படம் ‘டைகர் நாகேஸ்வரராவ்’. இந்த திரைப்படத்தின் தொடக்க விழா மாதப்பூரிலுள்ள நோவாடெல் என்னுமிடத்தில் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட விழா மேடையில் நடைபெற்றது. தெலுங்கு திரை உலகம் இதற்கு முன் […]

Read More

ஜூசி கெமிஸ்ட்ரியின் 2வது விற்பனையகம் சென்னையில் தொடக்கம்

by on April 1, 2022 0

தனிநபர்பராமரிப்பிற்கான (பர்சனல்கேர்) தயாரிப்புகளுக்காக இந்தியாவிலேயே முதன்முதலாக உருவான பிராண்டாக பெயர் பெற்றிருக்கும் ‘ஜுசி கெமிஸ்ட்ரி, சந்தையில் அதன் இருப்பை இன்னும்  வலுப்படுத்த இப்போது முனைந்திருக்கிறது. காஸ்மாஸ் V3 தரநிலையின்படி எக்கோசெர்ட் (ஃபிரான்ஸ்)   அமைப்பால் சான்றளிக்கப்பட்ட ஆர்கானிக் தயாரிப்புகளின் முழுத்தொகுப்பை இந்த பிராண்டு கொண்டிருக்கிறது. கோயம்புத்தூரில் தனது விற்பனையகத்தை வெற்றிகரமாகத் தொடங்கி நடத்தி வருவதைத் தொடர்ந்து சென்னை மாநகரின் பிரபலமான பீனிக்ஸ் மார்ட்  சிட்டி மாலில் ஏப்ரல் 2 ஆம் தேதியிலிருந்து தனது 2வது விற்பனையகத்தை இந்த பிராண்டு […]

Read More

டாணாக்காரன் லொகேஷனை 40 நகரங்களில் தேடிய இயக்குனர்

by on April 1, 2022 0

டிஸ்னி + ஹாட்ஸ்டார், தமிழ் ஓடிடி தளத்தில் இணையற்ற திறமையுடன், அதன் மிகப்பெரிய பொழுதுபோக்கு அம்சங்களுடன் தனக்கென தனி முத்திரையை பதித்துள்ளது. துல்லியமாக சொல்வதானால், இந்த முதல் தர ஓடிடி இயங்கு தளம், தமிழ் பார்வையாளர்களுக்கு வரப்பிரசாதமாக, ‘பிளாக்பஸ்டர்’ கதைகளின் மையமாக மாறியுள்ளது. கடந்த காலங்களில் அற்புதமான பொழுதுபோக்குகளை வழங்கிய டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், தற்போது இயக்குனர் தமிழ் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள “டாணாக்காரன்” படத்தை, திரைப்பட ஆர்வலர்களுக்காக ஏப்ரல் 8, 2022 அன்று […]

Read More
CLOSE
CLOSE