July 1, 2026
  • July 1, 2026

டிக் டாக் ஆபாச வீடியோ பெண்களைக் கைது செய்ய வேண்டும் – பேரரசு

by on January 4, 2022 0

ரெயின்போ புரடக்சன்ஸ் தயாரிப்பில் சார்பில் வரதராஜ் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘ பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே ‘. படத்தின் ஆடியோ ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு இயக்குநர் பேரரசு பேசினார். அவர் பேசும்போது “இங்கே வந்திருக்கும் ரோபோ சங்கர் மகளைப் பார்க்கும்போது எனக்கு அவர் பிகில் படத்தில் நடித்த பாண்டியம்மா என்ற பாத்திரத்தின் பெயர் தான் ஞாபகம் வருகிறது.சொந்தப் பெயரை […]

Read More

சமுத்திரக்கனியின் மகனும் நடிகர் இயக்குநர் ஆனார்

by on January 3, 2022 0

பிரபல நடிகரும் இயக்கனருமான சமுத்திரக்கனி யின் மகன் ஹரி விக்னேஷ்வரன் “அறியா திசைகள்” எனும் 40 நிமிட குறும்படத்தை எழுதி இயக்கி நடித்துள்ளார். வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் இளைஞன் எப்படி ஏமாற்றப்பட்டு அறியா திசைகளில் பயணிக்கிறான் என்று சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஹரி விக்னேஷ்வரன். இளைஞனாக நடிகர் – இயக்குனருமான சமுத்திரக்கனி யின் மகன் ஹரி விக்னேஷ்வரன் நடித்து இந்த குறும்படத்தை எழுதி இயக்கி உள்ளார். மிகவும் புத்திசாலித்தனமான கதை களத்தில் நறுக்கிய வசனத்துடன் கூடிய இந்தப் […]

Read More

தண்ணி வண்டி படத்தின் திரை விமர்சனம்

by on January 3, 2022 0

‘தண்ணி வண்டி ‘ என்றால் அதற்கு இரண்டு பொருள் உண்டு. நேரடியான பொருள் குடிநீரை விநியோகிக்கும் வண்டி என்பது. இன்னொரு பொருள் ஊருக்கே தெரிந்த விஷயம். ஆனால் தண்ணி வண்டி என்றதும் நமக்கு இந்த இரண்டாவது பொருள் தான் நினைவுக்கு வந்து போகும். நம் வழக்கம் அப்படி.   படத்தில் சொல்லும் தண்ணி வண்டிக்கு இரண்டு பொருளும் உண்டு. மதுரையில் வண்டியில் தண்ணீர்  விநியோகிக்கும்  நாயகன் உமாபதி கையில் காசு புழங்கினால் நண்பன் பால சரவணனுடன் சேர்ந்து […]

Read More

சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை திரை விமர்சனம்

by on January 2, 2022 0

தலைப்பை பார்த்தவுடனேயே இது ஒரு காதல் கதை என்பதை புரிந்து கொள்ள முடியும். ஆனால் படத்தின் களம் என்ன என்பதில்தான் புதுமை செய்ய நினைத்திருக்கிறார் இயக்குனர் மகேஷ் பத்மநாபன். அதற்கு ஏற்ற மாதிரியே நாயகனின் பாத்திரப் படைப்பை புதிதாக உருவாக்கியிருக்கிறார். இதுவரை ஆஸ்கர் நாயகன் ரசூல் பூக்குட்டி நடித்தைத் தவிர்த்து படங்களில் நாம் பார்த்திராத சவுண்ட் இன்ஜினியர் வேடம்தான் நாயகன் ருத்ரா ஏற்றிருப்பது. தனியார் எஃப் எம்மில் ஆர்ஜே வாக இருக்கும் நாயகி சுபிக்ஷாவுக்கு நேஷனல் ஜியாக்ரபிக் […]

Read More

ஓணான் படத்தின் திரை விமர்சனம்

by on January 2, 2022 0

இன்னொரு ராக்கி படம் போல் இருக்குமோ என்று நினைக்க வைக்கும் கொலைக் கள ஆரம்பம். நாயகன் திருமுருகன் சதாசிவம் தன் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை கொடூரமாக கொள்வதுபோல் டைட்டில் போடும்போது காட்சிகள் விரிகின்றன. தொடர்ந்து மனைவி குழந்தைகளைக் கொன்றதற்காக அவர் கைது செய்யப்பட்டதாக நாளேட்டில் செய்தியும் வருகிறது.  படங்களில் காமெடியனாக நாம் பார்த்திருக்கும் காளி வெங்கட் இந்தப் படத்தின் முதல் காட்சியில் உடலெங்கும் ரத்த விளாறாக காவல் நிலையத்தில் வந்து சரணடைகிறார். அவர் சொல்லும் கதையில் […]

Read More

பா இரஞ்சித் முன்னெடுக்கும் பண்பாட்டு முயற்சிகளுக்கு விசிக துணை நிற்கும் – தொல் திருமாவளவன் 

by on January 2, 2022 0

இயக்குனர் பா.இரஞ்சித் தனது நீலம் பண்பாட்டு மையம் சார்பில் பல்வேறு பண்பாட்டு நிகழ்வுகளை ஒருங்கிணைத்து வருகிறார். அவற்றுள் மிக முக்கியமான ஒன்று “மார்கழியில் மக்களிசை” ஆகும். ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் சென்னையில் நடைபெற்று வந்த இந்நிகழ்வு, இந்த ஆண்டு கோவை, மதுரை, சென்னை ஆகிய பெருநகரங்களில் நடைபெற்றது. கோவை மற்றும் மதுரையில் ஒரு நாளும், சென்னையில் 8 நாட்களும் மிகவும் கோலாகலமான எளிய உழைக்கும் மக்களின் இசைத்திருவிழாவாக இது நடைபெற்று முடிந்திருக்கிறது. முத்தாய்ப்பாக கடந்த டிசம்பர் 31-ஆம் […]

Read More

தீர்ப்புகள் விற்கப்படும் படத்தின் திரை விமர்சனம்

by on January 1, 2022 0

பாலியல் வன்முறை செய்தவர்களை பழி வாங்கும் கதைகள் இந்திய படங்களில் நிறையவே வந்துள்ளன. அவற்றில் காமுகர்களை பிடித்துவந்து கொல்வதில் தொடங்கி அவர்களின் ஆணுறுப்பை அறுப்பது வரை பலவிதமான கதைகள் இங்கே சொல்லப்பட்டு இருக்கின்றன. இப்படிப்பட்ட கதைகள் எல்லாமே சட்டப்படி தவறானவை என்றாலும் அவை மக்களிடம் வரவேற்பு பெறுவதற்கு காரணம், சட்டப்படி அப்படிப்பட்ட குற்றத்துக்கு நீதி மன்றம் சென்றால் நீதி தாமதப்படுவதும் மறுக்கப்படுவதும்தான். அப்படியே தாமதப்பட்டு நீதி கிடைத்தாலும் அதன் தண்டனை மிகவும் குறைவானதாகவே இருக்கிறது. ஆனால் பாலியல் […]

Read More

அர்னால்டும் ஜாக்கி சானும் தமிழ் பேசி வரும் அயர்ன் மாஸ்க்

by on December 31, 2021 0

ஜாக்கி சான், அர்னால்ட் இருவரும் இணைந்து நடித்த “அயர்ன் மாஸ்க்” படம் வெளியீடு வலிமை’க்கு பிறகு வருகிறது! சீனா, ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் பெரும் வசூலை வாரிக் குவித்த “அயர்ன் மாஸ்க்” ஆங்கிலப் படம், தமிழ் மக்களின் உள்ளத்தை வாரிக் குவிக்க தமிழில் வருகிறது! வெறித்தனமான சண்டைக் காட்சிகளும், மகிழ்ந்து சிரிக்க காமெடி காட்சிகளும் அரங்கத்தை அதிர வைக்கப் போகிறது. 49.1 பில்லியன் பட்ஜெட்டில் உருவான பிரமாண்டமான படம்.! டிராகனை அழித்து, மகாராணியை காப்பாற்ற ஜாக்கி […]

Read More

லேபர் திரைப்பட விமர்சனம்

by on December 31, 2021 0

‘இருந்தால் வேலை… இல்லாவிட்டால் சாலை’ என்று வாழும் அன்றாடக் கூலித் தொழிலாளர்களின் வாழ்க்கை எப்படி நம்பிக்கையால் மட்டுமே கட்டப்படுகிறது என்பதை கட்டிடத் தொழிலாளர்களின் வாழ்வியலாகவே சொல்லி ஒளிப்பதிவும் செய்து இயக்கி இருக்கிறார்  சத்யபதி. அதனாலேயே பல சர்வதேச விழாக்களில் தேர்வாகவும், தேர்வாகி விருதுகளையும் வென்றுள்ளது படம். மக்கள் மனங்களை வெல்லுமா பார்க்கலாம். கட்டிட மேஸ்திரியாக வேலை செய்யும் முத்து தன் மகன் தன்னைப்போல் கஷ்டப்படாமல் பட்டம் பெற்று இன்ஜினீயராக ஆக வேண்டும் என்று விரும்புவது ஒரு பக்கம் […]

Read More
CLOSE
CLOSE