July 4, 2026
  • July 4, 2026

சக்திவேலன் சார்தான் எல்லோருக்கும் லக்கி சேம்ப்.! – நடிகை சரஸ் மேனன்

by on February 21, 2024 0

அறிமுக இயக்குநர் ஷெரீஃப் இயக்கத்தில் வைபவ், தான்யா ஹோப், நந்திதா ஸ்வேதா, சரஸ் மேனன், சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் பலர் நடித்திருக்கும் திரைப்படம் “ரணம் அறம் தவறேல்”. அரோல் கரோலி இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பாலாஜி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். மது நாகராஜ் தயாரித்திருக்கும் இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழுவினர் மற்றும் திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன் பேசும் போது, வெளிநாட்டில் வேலை செய்து […]

Read More

அனைத்து தரப்பு மக்களை ஒன்றிணைக்கும் முதல் HYPER LOCAL சமூக வலைதளம் KYN App

by on February 20, 2024 0

அமைச்சர் மாண்புமிகு. Dr.பழனிவேல் தியாகராஜன் அவர்கள் KYN செயலியைத் தொடங்கி வைத்தார்…  சென்னை, பிப்ரவரி 20,2024 : KYNHOOD TECHNOLOGIES நிறுவனம் சார்பில், புதிய சமூக வலைதளமான KYN அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. HYPER-LOCAL முறையில் உருவாகியுள்ள இந்த செயலி, சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றிணைக்கும் முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மாண்புமிகு. Dr.பழனிவேல் தியாகராஜன் அவர்கள் இன்று KYN செயலியைத் தொடங்கி வைத்தார். KYN என்பதன் விரிவாக்கம் – […]

Read More

‘ஹாட் ஸ்பாட்’ படம் மூலம் சமுதாயப் பிரச்சினையை அலச வரும் ‘அடியே’ பட இயக்குனர்

by on February 18, 2024 0

கலையரசன் – சாண்டி மாஸ்டர், ஆதித்யா பாஸ்கர், கெளரி கிஷன், அம்மு அபிராமி, ஜனனி ஐயர் நடிக்கும் ஹாட்ஸ்பாட்..திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு… கே ஜே பி டாக்கீஸ் மற்றும் 7 வாரியார் பிலிம்ஸ் பட நிறுவனங்கள் சார்பில் கே ஜே பாலமணி மார்பன் மற்றும் சுரேஷ்குமார் இணைந்து “ஹாட் ஸ்பாட்” என்ற புதிய படம் தயாரிக்கிறார்கள். சிக்ஸர் எண்டெர்டைன்மெண்ட் சார்பில் தயாரிப்பாளர் தினேஷ் அவர்கள் வெளியீடுகிறார்.. ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த திட்டம் இரண்டு மற்றும்  ஜிவி […]

Read More

மேடம் வெப் ஆங்கிலப்பட விமர்சனம்

by on February 17, 2024 0

Sony Spiderman Universe (SSU) இல் -நான்காவது படமிது. இதில் நாயகி டகோட்டா ஜான்சன், கதை நாயகியாகிறார். இவர் படத்தில் ஏற்றி ருக்கும் கசான்றா வெப் கேரக்டரும் கூட மார்வெல் காமிக்சில் இடம் பெற்ற ஒரு பாத்திரம்தான். மற்றபடி கதை என்று பார்த்தால் ஒரு விபத்தினை தொடர்ந்து ஒரு சில அதிசய சக்திகள் டகோட்டா ஜான்சனுக்குக் கிடைக்கிறது. அவசர கட்ட சிகிச்சைகளில் நிபுணத்துவம் பெற்ற இவர், ஒரு விபத்தினை அடுத்து , எதிர்காலத்தை முன்னரே அறிகின்ற ஒரு […]

Read More

சிசிஎல் (Celebrity Cricket League) சென்னை ரைனோஸ் அணியினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

by on February 16, 2024 0

இந்தியத் திரைப்பட நட்சத்திரங்கள் பங்கேற்கும் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் (Celebrity Cricket League) தொடர் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது..! இந்த ஆண்டு இப்போட்டியில் கலந்துகொள்ளும், சென்னை ரைனோஸ் அணியினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர்..! செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்கில், சென்னை ரைனோஸ், மும்பை ஹீரோஸ், கர்நாடகா புல்டோசர்ஸ், தெலுங்கு வாரியர்ஸ், போஜ்புரி தபாங்ஸ், பெங்கால் டைகர்ஸ், கேரளா ஸ்டிரைக்கர்ஸ், பஞ்சாப் தி ஷெர் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன‌ர்.  திரை நட்சத்திரங்கள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி […]

Read More

சிவகார்த்திகேயன் பிறந்தநாளில் கமலஹாசன் தயாரிப்பில் நடிக்கும் படத் தலைப்பு அறிவிக்கப் பட்டது

by on February 16, 2024 0

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேசனல் (RKFI), மற்றும் சோனி பிக்சர்ஸ் இண்டர்நேசனல் ப்ரொடக்ஷன்ஸ் (SPIP) இணைந்து தயாரிக்கும், பெரிதும் எதிர்பார்க்கப்படும் #SK21 திரைப்படத்தின் பெயரை, நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்தநாளையொட்டி அறிவித்துள்ளார்கள். இத்திரைப்படத்தின் பெயர் 16, பிப்ரவரி 2024 அன்று வெளியிடப்பட்ட சுவாரசியமான டீசரின் வழியாக தெரிவிக்கப்பட்டது. இந்தத் திரைப்படத்திற்கு, “அமரன்” என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதனை, உலகநாயகன் கமல்ஹாசன், சோனி பிக்சர்ஸ் இண்டர்நேசனல் ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் திரு. ஆர்,மகேந்திரன் ஆகியோர் தயாரிக்க, இவர்களுடன் இணை-தயாரிப்பாளராக வக்கில் கானின் காட் […]

Read More

இனி டைரக்ஷன் கிடையாது நடிப்பில் மட்டும் கவனம் – ஜெய் ஆகாஷ் முடிவு

by on February 16, 2024 0

ஜெய் விஜயம் வெற்றி விழாவில் திரையுலகினர் பங்கேற்பு ஜெய் ஆகாஷு க்கு வெற்றி கேடயம் பரிசு..! ஏ கியூப் மூவிஸ் ஆப் சார்பில் ஜெய் ஆகாஷ் ஹீரோவாக நடித்து தயாரித்திருப்பதுடன் ஜெய் சதீசன் நாகேஸ்வரன் என்ற தனது நிஜப் பெயரில் இயக்கிய படம் ஜெய் விஜயம். இதில் கதாநாயகியாக அக்ஷயா கொண்டமுத்து நடித்துள்ளார். அட்சயாராய், ஏ சி பி ராஜேந்திரன் உள்ளிட்ட ஏராளமான புதுமுகங்கள் நடித்திருக்கின்றனர். பால் பாண்டி. ஒளிப் பதிவு செய்துள்ளார். சதீஷ் குமார் இசையமைத்துள்ளார். […]

Read More

எப்போதும் ராஜா திரைப்பட விமர்சனம்

by on February 16, 2024 0

சினிமா வானம் சூப்பர் ஸ்டார், சுப்ரீம் ஸ்டார், மெகா ஸ்டார்களால் மட்டும் முடிவடைவதில்லை. இவர்களுடன் பவர் ஸ்டார், பப்ளிக் ஸ்டார், பவுடர் ஸ்டார்களும் அவ்வப்போது வந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் வந்திருக்கிறார் ‘விண் ஸ்டார்’. அவர்பெயரையும் சேர்த்துக் கொண்டால் ‘விண் ஸ்டார் விஜய்’. தமிழ் சினிமாவில் ஹீரோக்கள் காக்கிச்சட்டை போட்ட கதைகள் தோற்றதில்லை என்ற உண்மையைப் புரிந்து கொண்டு தானும் ஒரு காக்கி சட்டைக்கு ஆர்டர் கொடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியிருக்கிறார் விண் ஸ்டார். அத்துடன் அவரது […]

Read More

சைரன் திரைப்பட விமர்சனம்

by on February 16, 2024 0

நம் சாலைகளில் இரண்டு சைரன்களின் ஒலிதான் அடிக்கடி நம் காதுகளில் கேட்கும். ஒன்று போலீஸ் வாகனத்தின் சைரன் ஒலி. இன்னொன்று ஆம்புலன்ஸின் சைரன் ஒலி. இந்த இரண்டு சைரன்களுக்கும் உரசல் வந்தால் என்ன ஆகும்..? அது எப்படி வந்தது..? என்று யோசித்து முழுமையான சென்டிமென்ட் கலந்த ஒரு கமர்ஷியல் படத்தைத் தந்திருக்கிறார் அறிமுக இயக்குனர் ஆண்டனி பாக்கியராஜ். நாயகன், “ஜெயம் ரவியா அது..?” என்று கேட்கும் விதத்தில் இதுவரை இல்லாத கெட்டப்பாக ‘சால்ட் அண்ட் பெப்பர்’ லுக்கில் […]

Read More

உண்மையான குழந்தையின் எடையைக் கட்டிக்கொண்டு கர்ப்பிணியாக நடித்த மிர்னா

by on February 14, 2024 0

சேபியன்ஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீராம் சிவராமன், விக்ரம் ஸ்ரீதரன் எழுதி தயாரித்திருக்கும் படம் ‘பர்த் மார்க்’ (Birth Mark). இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் விக்ரம் ஶ்ரீதரன். ‘டான்ஸிங் ரோஸ்’ ஷபீர் ஹீரோவாக நடிக்க, நாயகியாக ‘ஜெயிலர்’ புகழ் மிர்னா ஜோடி சேர, பி.ஆர்.வரலட்சுமி, தீப்தி, இந்திரஜித், பொற்கொடி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு உதய் தங்கவேல் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இனியவன் பாண்டியன் படத்தொகுப்பு செய்ய, ராமு தங்கராஜ் கலை இயக்குநராக […]

Read More
CLOSE
CLOSE