October 16, 2025
  • October 16, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • பிஸ்கோத் படத்துக்கு U சர்டிபிகேட் – படம் தீபாவளி ரிலீஸ்?
November 6, 2020

பிஸ்கோத் படத்துக்கு U சர்டிபிகேட் – படம் தீபாவளி ரிலீஸ்?

By 0 676 Views

ஆர்.கண்ணன் மசாலா பிக்ஸ் நிறுவனத்துக்காக தயாரித்து அவரே இயக்கியிருக்கும் படம் பிஸ்கோத். படத்தின் தலைப்பே சொல்லிவிடும் இது ஒரு முழு நீள நகைச்சுவை படம் என்று.

சந்தானம் நாயகனாக நடித்திருக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக தாரா அலிஷா பெரி நடித்திருக்கிறார். மற்றும் மொட்ட ராஜேந்திரன், மனோகர் உள்ளிட்ட காமெடி நடிகர்கள் பலரும் பட்டைய கிளப்பி இருக்கிறார்கள்.

அத்துடன் இந்தப் படத்தில் ஒரு இடைவெளிக்குப் பின் தமிழ் பட உலகின் பழம்பெரும் நாயகி சவுகார் ஜானகி நடித்திருக்கிறார் என்பது ஹைலைட்.

தெலுங்கிலிருந்து தமிழுக்கு ஆர். கண்ணனே கொண்டுவந்த இசையமைப்பாளர் ரதன் இந்தப் படத்துக்கும் இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் பாடல்கள் சமீபத்தில் ஜுக் பாக்ஸ் ஆக யூட்யூப் தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.

இந்நிலையில் இன்று இந்த படத்துக்கான தணிக்கை நடைபெற்றது. அதில் எல்லோரும் குடும்பத்துடன் பார்க்கும் வண்ணம் யு சான்றிதழ் அளிக்கப்பட்டிருக்கிறது.

வரும் பத்தாம் தேதி எல்லா தியேட்டர்களும் திறக்க இருக்கும் நிலையில் பிஸ்கோத் படம் சென்சார் முடிந்து தயாராக இருப்பதால் இந்த தீபாவளி வெளியீடு பட்டியலிலேயே இது இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆக தீபாவளிக்கு சந்தானத்தின் காமெடி ட்ரீட் களை கட்டும் என்று தெரிகிறது.