ஒரு வழியாக இன்று பிகில் படத்துக்கு தணிக்கை முடிந்தது. அதில் ‘யு’ சான்றிதழ் கிடைத்ததாக ஒரு போலி சான்றிதழ் வாட்ஸ் ஆப் குரூப்களில் பரவ ஆரம்பித்தது.
ஆனால், உண்மையில் ‘யுஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறதாம். இன்னும் அது அதிகார பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் நம் காதுக்கு வந்த தகவல்கள்.
படம் ஓடும் மொத்த நேரம் 2 மணி 59 நிமிடங்களாம்.
‘யுஏ’ சான்றிதழில் உடன்பாடு இல்லாத படக்குழுவினர் ‘யு’ கேட்டபோது வன்முறை அதிகமாக உள்ல 20 நிமிடங்களுக்கு படத்தின் காட்சிகளைக் குறைக்க வேண்டுமென்று சென்சாரில் கூறியிருக்கிறார்கள். அதனால் ‘யுஏ’ வுடன் திருப்தி அடைந்து விட்டதாம் படக்குழு.
‘யுஏ’ வுக்கும் மூன்று வெட்டு இருந்ததாக சொல்கிறார்கள். விஜய் பேசும் ஒரு வசனமும், காமெடிப் பகுதியில் வரும் இரண்டு வசனங்களும் ‘சென்சார் செய்யப்பட வேண்டிய’ வார்த்தைகளாக இருக்க, மூன்று ‘கட்’ கொடுத்து அவற்றை நீக்கினார்களாம்.
அவற்றையும் வெட்டாமல் வேறு வார்த்தை போட்டு ‘டப்’ பண்ண முடியுமா என்று யோசித்து வருகிறார்களாம் பிகில் டீமில்.
இப்போது மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறது சான்றிதழ். அனுமதி கிடைத்தவுடன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்.
எது எப்படியோ, தீபாவளிக்கு ‘பிகில்’ ஊத ரெடியாகி விட்டது. மற்றதை விஜய் ரசிகர்கள் பார்த்துக் கொள்வார்கள்.