October 17, 2025
  • October 17, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • பிகில் வெறித்தனம் 37 பேர் கைது – கலவர பூமியான கிருஷ்ணகிரி வீடியோ
October 25, 2019

பிகில் வெறித்தனம் 37 பேர் கைது – கலவர பூமியான கிருஷ்ணகிரி வீடியோ

By 0 733 Views
கிருஷ்ணகிரியில் இன்று அதிகாலை ‘பிகில்’ திரைப்படம் வெளியிடத் தாமதமானதால் கொதிப்படைந்த ரசிகர்களின் வெறித்தனத்தால் ஐந்து ரோடு ரவுண்டானாவில் வைக்கப்பட்டிருந்த சிக்னல்கள் கண்காணிப்பு கேமராக்கள் போலீசாரின் ஒலிபெருக்கிகள், தீபாவளியை முன்னிட்டு போலீசார் அமைத்திருந்த கட்டைகளால் ஆன உயர மேடை ஆகியவை முற்றிலுமாக சேதம் அடைந்தன .
 
ரவுண்டானாவில் நகராட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டி உடைத்து நொறுக்கப்பட்டது .பல்வேறு கடைகளின் பேனர்கள் கிழித்து எறியப்பட்டன .தீ வைத்து எரிக்கப்பட்டன.
 
சாலையோர வியாபாரிகள் பிழைப்புக்காக வைத்திருந்த பானைகள் மற்றும்  பொருட்களை உடைத்து சேதப்படுத்தினார்கள் . இதையடுத்து அதிவிரைவு படை போலீசார் அங்கு வந்து விஜய் ரசிகர்களை லேசான தடியடி நடத்திக் கலைத்தனர் .
 
இந்த சம்பவம் தொடர்பாக ஓசூர் மற்றும் சூளகிரி பகுதியை சேர்ந்த 37 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 
கீழே கலவர வீடியோ…