October 15, 2025
  • October 15, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • தமிழ் சினிமாவில் இப்படி ஒரு போலீஸ் கதையா – பாரதிராஜா பெருமிதம்
December 23, 2021

தமிழ் சினிமாவில் இப்படி ஒரு போலீஸ் கதையா – பாரதிராஜா பெருமிதம்

By 0 517 Views

இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் பிராங்ளின் ஜேக்கப் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ரைட்டர்.

நேற்று இயக்குனர் பாரதிராஜா மற்றும் பாக்கியராஜ் இருவரும் ரைட்டர் படம் பார்த்தபிறகு இயக்குனர் பிராங்ளினை வெகுவாக பாராட்டினார்.

தமிழ் சினிமாவில் இப்படி ஒரு போலீஸ் கதை புதுமையாக இருக்கிறது, எனக்கு ரொம்ப பெருமையாக இருக்கிறது இளைய தலைமுறையினரிடமிருந்து இப்படிப்பட்ட படங்கள் வருவதைப்பார்க்கும்பொழுது தமிழ் சினிமா இன்னும் வளமானதாக மாறுகிறது.

எப்போதும் அதிகமாக பேசி நடிக்கும் சமுத்திரக்கனி இந்தபடத்தில் அதிகம் பேசாமல் மிக அழகாக நடித்திருக்கிறார். நான் ரசித்தேன்.

இயக்குனர் பா.இரஞ்சித் தரமான படங்கள் தயாரிப்பதன் மூலம் நல்ல இயக்குனர்களை இந்த தமிழ்சினிமாவுக்கு தந்துகொண்டிருக்கிறார் அவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களும் அன்புகளும் என்றார்.