August 31, 2025
  • August 31, 2025
Breaking News
March 8, 2022

மனைவியை விவாகரத்து செய்தார் இயக்குனர் பாலா

By 0 779 Views

இயக்குநர் பாலாவும், அவர் மனைவி முத்து மலரும் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்றிருக்கிறார்கள்.

இருவரும் கடந்த 4 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், கடந்த மார்ச் 5-ம் தேதியன்று இருவரும் சட்டபூர்வமாக, சுமூகமான முறையில் விவாகரத்து பெற்றுள்ளார்கள்.

இயக்குநர் பாலாவுக்கும், முத்துமலருக்கும் கடந்த 5.7.2004 அன்று மதுரையில் திருமணம் நடந்தது. 17 வருடங்கள் தம்பதிகளாக வாழ்ந்த இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

கடந்த சில வருடங்களாகவே பாலாவும், அவரது மனைவியும் பிரிந்து வாழ்வதாகவும், பாலாவின் மனைவி முத்து மலர் சிங்கப்பூரில் செட்டிலாகிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

ஆனால் இது பற்றி பாலா எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் இருந்தார். இந்த நிலையில் இவர்களின் விவாகரத்து செய்தி உறுதியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பாலா. தமிழ் சினிமாவில் இதுவரையிலும் சொல்லப்படாத மனிதர்களின் கதைகளைக் கொடுத்த வகையில் பல மாநில இயக்குநர்களாலும் கவரப்பட்டவர்.

அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்திருக்கும் இந்த விஷயம் அவரது நலம் விரும்பிகளுக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களும் பெருத்த அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.