January 25, 2026
  • January 25, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • தமிழ் தெரியாமல் பிரபுதேவாவுடன் நடித்து அசத்திய அமீரா தஸ்தூர்
October 9, 2021

தமிழ் தெரியாமல் பிரபுதேவாவுடன் நடித்து அசத்திய அமீரா தஸ்தூர்

By 0 485 Views

அழகு தேவதை அமீரா தஸ்தூர் நடிகர் பிரபுதேவாவுக்கு ஜோடியாக “பஹீரா” படத்தில் நடித்துள்ளார்.

பிரபுதேவாவுடன் இணைந்து நடிப்பது, அவருக்கு இயல்பிலேயே மிகக்கடினமாக இருந்தது. அவற்றையெல்லாம் கடந்து, தற்போது தனது கதாப்பத்திரத்தை சிறப்பாக செய்ததாக முன்னணி நடிகரான பிரபுதேவா மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோரிடமிருந்து, பெரும் பாராட்டுக்களை குவித்தது அவருக்கு திரைவாழ்வில் கிடைத்த பொன்மகுடமாகும்.

இதனை குறித்து இயக்குநர் ஆதிக் கூறுகையில்…
அமீரா தஸ்தூர் இப்படத்தில் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழ் மொழி அவருக்கு முழுதாக தெரியாதென்றாலும், மாஸ்டர் ( பிரபுதேவா) உடன் அழுது நடிக்கும் உணர்ச்சிகரமான காட்சியில் தனது அற்புதமான நடிப்பு திறமையை வெளிப்படுத்தி, அசத்தியுள்ளார். அவர் கண்டிப்பாக சினிமாவில் மிகப்பெரிய இடத்தை பிடிப்பார் என்றார்.

சென்னயில் நடைபெற்ற மிகப்பிரமாண்டமான விழாவில், இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது.

உலகமெங்கும் வெளியான டிரெய்லர் வரவேற்பைப் பெற்றுள்ளது.