November 22, 2024
  • November 22, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • அயலி பெண்களின் உரிமையையும் அதிகாரத்தையும் சொல்கிறது – சிங்கம் புலி
February 18, 2023

அயலி பெண்களின் உரிமையையும் அதிகாரத்தையும் சொல்கிறது – சிங்கம் புலி

By 0 269 Views

இந்தியாவின் முன்னணி  வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ஜீ5 தளம் தொடர்ந்து பல வெற்றிப்படைப்புகளை தந்து வருகிறது. இத்தளத்தில் சமீபத்தில் ஜனவரி 26, 2023 வெளியான “அயலி”  இணையத் தொடர் பெரும்  பாராட்டுக்களைக் குவித்து வெற்றி பெற்றுள்ளது. தமிழ்  ஓடிடி உலகில் புதிய சாதனை படைத்திருக்கும் இத்தொடர் 50 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. 4 வாரங்களைக் கடந்தும், பார்வையாளர்களின் விருப்பத் தேர்வாக முன்னணியில் உள்ளது. இந்த வெற்றியினை படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களுடன் இணைந்து கொண்டாடினர்.

Senior Vice President   ZEE5 கௌசிக் நரசிம்மன் பேசியதாவது…
“அயலி எங்களது தளத்தில் வெளியான மற்றுமொரு படைப்பல்ல, இது எங்கள் மனதிற்கு  நெருக்கமான மறக்க முடியாத படைப்பு. ஜீ5 லிருந்து நாங்கள் இந்த தொடரைச் செய்ததற்காக மிகவும் பெருமைப்படுகிறோம். ஒட்டு மொத்த அயலி குழுவிற்கும் எனது பாராட்டுகள்.”

Associate Director,  Original Content, ZEE5 Tamil  ஷியாம் திருமலை  பேசியதாவது…

“அயலியை நாங்கள் எப்படித் தேர்வு செய்தோம் என்று பலர் எங்களிடம் கேட்கிறார்கள். இப்படி ஒரு அருமையான ப்ராஜெக்ட்டை மிஸ் செய்திருந்தால் நாங்கள் மிகவும் வருத்தப்பட்டிருப்போம்  என்று பதில் சொல்லிக்கொண்டே இருந்தேன். இதை நல்ல தொடரைப் பிரமாண்ட வெற்றியடையச் செய்த பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களுக்கு எனது நன்றிகள்.”

Estrella Stories தயாரிப்பாளர் குஷ்மாவதி, பேசுகையில்..,
“அயலியை மாபெரும் வெற்றியடையச் செய்த பத்திரிகைகள் மற்றும் ஊடகத் துறையினர் அனைவருக்கும் நன்றி. ‘அயலி’ வெளியீட்டின் போது, ஜீ5 இல் இது ஒரு முத்திரை பதிக்கும் தொடராக இருக்கும் என்று கூறியிருந்தோம். இன்று, அயலி அதை நிரூபித்ததைக் கண்டு நான் மகிழ்ச்சியும், பெருமையும்,  அடைகிறேன். இப்படி ஒரு படைப்பை உருவாக்குவதற்கான வாய்ப்பை வழங்கிய ஜீ5 க்கு நன்றி. அருமையான தொடரை உருவாக்கிய இயக்குநர் முத்துக்குமாருக்கு நன்றி” என்றார்.

நடிகை தாரா  பேசுகையில்..,
“அயலி போன்ற ஒரு நல்ல படைப்பில்  நான் ஒரு பகுதியாக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும், ஜீ5 குழுவினருக்கும் நன்றி. இந்த தொடர்  எனக்கு ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது” என்றார்.

நடிகர் ‘அருவி’ மதன் பேசுகையில்,
“எனது கதாபாத்திரம் பார்த்தவர்களின்  தந்தையின் சாயலைப் பிரதிபலிப்பதாகப் பலர் பாராட்டினார்கள் அது மிகப்பெரும்  மகிழ்ச்சியைத் தந்தது. அயலியை மாபெரும் வெற்றியடையச் செய்த பத்திரிகைகளுக்கும் ஊடகங்களுக்கும் நன்றி.  இந்தத் தொடரை மாற்றி, திரையரங்குகளில் பார்வையாளர்கள் பார்த்து மகிழும் வகையில் ஒரு திரைப்படமாக வெளியிடுமாறு ஜீ5 தளத்தைக் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

நடிகர் பிரகதீஸ்வரன் பேசுகையில்,

“அயலி’ தொடரை உருவாக்குவதற்கு உறுதுணையாக இருந்த ஜீ5 தளத்தின் விவேக் சார், ஒளிப்பதிவாளர் ராம்ஜி மற்றும் மணிகண்டன் சாருக்கு நன்றி. இந்தத் தொடரின் வெற்றிக்கு இந்த மூன்று நபர்களும் முக்கிய காரணமாக இருந்துள்ளனர்” என்றார்.

நடிகை லவ்லின் சந்திரசேகர் பேசுகையில்,
“ ‘அயலி’ தொடரை  வெற்றிப்படைப்பாக மாற்றிய பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கு நன்றி. இத்தொடரைப் பார்த்தவர்கள் இதனுடன் நன்றாக ஒன்ற  முடிந்தது எனக்கூறினார்கள். அது மகிழ்ச்சியைத் தந்தது. இந்த கதாபாத்திரத்தை எனக்கு வழங்கிய முத்துக்குமார், சார், குஷ்மாவதி மேடம் மற்றும் ஜீ5 ஆகியோருக்கு நன்றி. இந்த படைப்பில்  நல்ல செய்தி உள்ளது. இப்படியான நல்ல  தொடரின் ஒரு பகுதியாக இருந்ததற்காக நான் பெருமையாக உணர்கிறேன்” என்றார்.

எழுத்தாளர் சச்சின் கூறியதாவது,
”ஓடிடி தளம் தமிழில் அறிமுகமாகும்போது மேம்போக்கான கேளிக்கை கொண்ட கதைகளைத் தேர்வு செய்தது, ஆனால் இப்போது அயலிக்குக் கிடைத்துள்ள வரவேற்பு புது பெஞ்ச்மார்க்கை உருவாக்கியுள்ளது, எமோஷன் கலந்த குடும்ப கதை அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் சேர்ந்துள்ளது, அவர்களின் அன்றாட வாழ்வில் ஒப்பிடும் அளவிற்கு இது அமைந்துள்ளது, ஜீ5 நிறுவனத்தின் கௌசிக் சார், விவேக் சார், ஷாம் சார் மற்றும் தயாரிப்பாளர் குஷ்மாவதி அவர்களுக்கு நன்றி, மேலும் ஒளிப்பதிவாளர் ராம்ஜி மற்றும் ஒட்டு மொத்த குழுவுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தொடரைப் பற்றி நல்ல ரீவியூ எழுதிய பத்திரிக்கை ஊடக நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

படத்தொகுப்பாளர் கணேஷ் சிவா பேசுகையில்,
“விலங்கு வெளியாகி ஒரு வருடம் ஆகிறது. விலங்கு மற்றும் அயலி போன்ற சிறப்பான படைப்புகளில் என்னையும் ஒரு பகுதியாக மாற்றியதற்காக ஜீ5 குழுவிற்கு நன்றி. இந்தத் தொடரிற்குக் கிடைத்த  வரவேற்பு பெரும்  மகிழ்ச்சியைத் தந்துள்ளது. அயலிக்கு ஒரு பெரிய ரீச் கிடைக்க உதவிய பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கு நன்றி. ஒளிப்பதிவாளர் ராம்ஜி சார் மற்றும் இசையமைப்பாளர் ரேவா ஆகிய இருவரும் தான்  இந்த தொடரின்  வலுவான தூண்கள். இந்தத் தொடரில் பணியாற்ற  வாய்ப்பை வழங்கிய ஜீ5  இன் கௌசிக் சார் மற்றும் படக்குழுவிற்கும் நன்றி” என்றார்.

நடிகை காயத்ரி பேசுகையில்,
“ அயலியை ஊக்குவித்து ஆதரித்த பத்திரிகை-ஊடக நண்பர்களுக்கு நன்றி. இந்தத் தொடரில் பணிபுரிவது படக்குழுவில் உள்ள அனைவருக்கும் முழு வாழ்நாள் திருப்தியைக் கொடுத்துள்ளது. இந்தத் தொடரை இவ்வளவு பரந்த அளவில்  பிரபலப்படுத்திய ஜீ5 க்கு நன்றி . முதல் நாள் படப்பிடிப்பிலிருந்து இந்தத் தொடரைப் பற்றி முழு குழுவினரும் பாஸிடிவாகவே உணர்ந்தோம், அது இப்போது மக்களிடத்திலும் பிரதிபலித்துள்ளது. உங்கள் அனைவருக்கும் நன்றி” என்றார்.

நடிகர் லிங்கா பேசுகையில், “அயலியின் ஒவ்வொரு எபிசோடையும் பாராட்டுவதில் பத்திரிகைகளும், ஊடக நண்பர்களும் மகத்தான பணி செய்துள்ளனர். அயலிக்கு உங்களிடம் இருந்து கிடைத்த அன்பையும் மரியாதையும் கண்டு நான் வியப்படைகிறேன். மிக்க நன்றி. இந்த படத்தில் ஒரு பகுதியாக இருக்க இந்த வாய்ப்பை வழங்கிய எனது இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் ZEE5 குழுவிற்கு நன்றி” என்றார்.

நடிகர் ஶ்ரீனிவாசன் பேசுகையில்,
”இந்த தொடரில் பல முக்கியமான கதாபாத்திரங்களை உயிர்ப்புள்ளதாக இயக்குநர் முத்துக்குமார் உருவாக்கியுள்ளார். அது அயலியின் வெற்றிக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது. இந்த கதாபாத்திரங்கள் அனைத்தும் இன்னும் பத்து வருடங்களுக்கு ரசிகர்கள் மனதில் நிலைத்திருக்கும். லவ்லின் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். மேலும் அனைத்து நடிகர்களும் சிறப்பாகப் பணி புரிந்துள்ளனர், மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற அயலியை உருவாக்கிய Zee5 குழுவிற்கு நன்றி” என்றார்.

நடிகை அபி நக்ஷத்ரா பேசியதாவது,
”என்னுடைய நடிப்பை ஏற்றுக் கொண்ட பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கு நன்றி. என்னைத் தமிழ் செல்வி கதாபாத்திரமாக ஏற்றுக் கொண்ட ரசிகர்களுக்கும் இந்த செய்தியை மற்றவர்களிடமும் கொண்டு சேர்த்ததற்கும்  நன்றி. எனக்குப் பக்கபலமாக இருந்த இயக்குநர் முத்துக்குமார் சாருக்கும் மொத்த டெக்னிகல் குழுவிற்கும் எனது நன்றி” என்றார்.

நடிகர் சிங்கம்புலி கூறியதாவது,
“அயலியை ஊக்குவித்து அதை மக்களிடையே கொண்டு சேர்த்த பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களின் பணி எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது. பெண்களின் அதிகாரத்தை அவர்களது உரிமையையும் உரக்கச் சொல்லி இருக்கிறது இந்த அயலி. என்னையும் இந்த வெற்றி தொடரில் பங்களிக்க வாய்ப்பளித்த தயாரிப்புக் குழுவிற்கும் ஜீ5 தளத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இயக்குநர் முத்துக்குமார் மற்றும் எழுத்தாளர் சச்சின் மற்றும் படக்குழுவினர் சரியான திட்டத்தை வகுத்து அதைச் சுமுகமாக நிறைவேற்றி வெற்றி கண்டுள்ளனர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்” என்றார்.

இயக்குநர் முத்துக்குமார் கூறியதாவது,
”இந்த கதையை நம்பிய ஒட்டு மொத்த குழுவுக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மற்றும் முழு மனதோடு இதனை ஏற்றுக் கொண்ட பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கும் எனது நன்றிகள். இதில் நடித்துள்ள அத்தனை நடிகர்களுக்கும் நன்றி. இந்த படத்தில் சிறு சிறு காட்சிகளில் நடித்தாலும் முழு ஈடுபாட்டுடன் அர்ப்பணித்து நடித்தனர்.

தயாரிப்பாளரான Zee5 குழு இதனை முழுதாக நம்பியதால் மட்டுமே இந்த வெற்றி சாத்தியமானது. இந்த தொடரில் வரும் சின்ன சின்ன விஷயங்களைக் கூட நுட்பமாகத் தேர்வு செய்து அதைப் பலரிடமும் கொண்டு சென்ற பத்திரிகை ஊடக நண்பர்களைப் பாராட்டி நன்றி கூறுகிறேன்” என்றார்.