November 24, 2024
  • November 24, 2024
Breaking News
  • Home
  • கல்வி
  • என்இசி மற்றும் இன்டெல் உடனான ஏவிஐடி (விஎம்ஆர்எப்) கல்வி நிறுவனத்தின் புரிந்துணர்வு ஒப்பந்தம்
February 6, 2023

என்இசி மற்றும் இன்டெல் உடனான ஏவிஐடி (விஎம்ஆர்எப்) கல்வி நிறுவனத்தின் புரிந்துணர்வு ஒப்பந்தம்

By 0 720 Views
  • NEC கார்பரேஷன் இந்தியா மற்றும் இன்டெல்® டெக்னாலஜி இந்தியா நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் AVIT, VMRF (DU) கல்வி நிறுவனங்கள்
  •  
  • AI/ML, IOT, சைபர் பாதுகாப்பு, ஸ்மார்ட் மொபிலிட்டி, FPGA தீர்வுகள் மற்றும் உயர்திறன் கம்ப்யூட்டிங் ஆகிய பிரிவுகளில் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான கற்றலை ஏதுவாக்குவது இதன் குறிக்கோள்
  •  
  • மேற்குறிப்பிடப்பட்ட பிரிவுகளில் ஆராய்ச்சி வசதி நிலைகளை நிறுவவும் மற்றும் நேரடி பயிற்சியை ஏதுவாக்கவும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் உதவும்.
  •  
  • ● NEC வெக்டார் இன்ஜின் (VE) சிஸ்டத்தால் முன்னெடுக்கப்படும் ஆய்வகம் மற்றும் இன்டெல்® உன்னாட்டி தர மைய ஆய்வகங்களுடன் சேர்ந்து AVIT-ன் தொழில்நுட்ப உட்கட்டமைப்பை இது வலுப்படுத்தும்.
  •  
  • ● பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் & கலை மற்றும் அறிவியல் ஆகியவற்றில் இன்டெல்® மற்றும் NEC உடன் இணைந்து கூட்டுச் சான்றாக்கத்துடன்கூடிய விரிவான கல்வி செயல்திட்டங்களையும் இது வழங்கும்.

சென்னை, 6 பிப்ரவரி 2023: AVIT, அறுபடை வீடு இன்ஸ்டிடியூட் ஆஃப் (நிகழ்நிலைப் பல்கலைக்கழகமான விநாயகா மிஷன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் ஒரு கல்வி நிறுவனம்), NEC கார்பரேஷனின் ஒரு துணை நிறுவனமான NEC கார்பரேஷன் லிமிடெட் பிரைவேட் இந்தியா மற்றும் இன்டெல்® டெக்னாலஜி இந்தியா ஆகியவற்றுடன் ஒத்துழைப்பு உடன்பாடு மேற்கொள்ளப்பட்டிருப்பதை ஒரு அறிவித்திருக்கிறது. தொழில்நுட்ப கல்வி கற்கவிருக்கும் மாணவர்களுக்கு விரிவான கல்வி செயல்திட்டத்தை வழங்குவதே இதன் நோக்கம்.

ஒரு பிரத்யேக AI/ML, மையமாகக் கொண்ட HPC ஆய்வகம் மற்றும் இன்டெல்® உன்னாட்டி தரவை ஆய்வகத்தை நிறுவுவதன் மூலம் பல்வேறு தொழில்பிரிவுகளில் தங்களது முழு சாத்தியத்திறனை மாணவர்களும், ஆராய்ச்சியாளர்களும் எட்டுவதற்கு உதவுகிற ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU), AVIT மற்றும் NEC கார்பரேஷன் இந்தியா மற்றும் இன்டெல்® ஆகியவை கையெழுத்திட்டிருக்கின்றன.

எஜு லேட்டரல் ஃபவுண்டேஷனின் வழியாக இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது. இன்டெல்® மற்றும் NEC கார்பரேஷன் உடனான இந்த முக்கிய கூட்டாண்மை செயல்பாடு இந்தியாவில் இவ்வகையினத்தில் முதன்முறையாக மேற்கொள்ளப்படுகிறது.

இன்டெல் ® NEC கூட்டாக வழங்கும் சான்றிதழ்களுடனும், உத்தரவாதமுள்ள ரடர்ன்ஷிப் மற்றும் பணியமைவிட அமர்வு ஆகிய வசதிகளுடன் பொறியியல் & தொழில்நுட்பம் மற்றும் கலை மற்றும் அறிவியல் செயல்திட்டத்தில் விரிவான கல்விசார் செயல்திட்டங்களை இது வழங்குகிறது.

VMRF (DU)-ன் துணை வேந்தர், டாக்டர். P.K. சுதிர் இந்நிகழ்வின்போது கூறியதாவது:

“கலவையான கல்விசார் கட்டமைப்புகளை உருவாக்குவதே எதிர்காலத்தில் பிரபலமாக இருக்கும், வன்பொருள் மற்றும் மென்பொருள் பயன்பாடுகளிலும் உருவாகிவரும் தொழில்நுட்ப புத்தாக்கத்தில் உலகத்தரத்தில் எமது மாணவர்களுக்கு NEC இந்தியா மற்றும் இன்டெல்® ஆகிய நிறுவனங்களோடு சேர்ந்து பயிற்சியளிப்பதில் நாங்கள் நம்பிக்கைக் கொண்டிருக்கிறோம். இந்த பட்டப்படிப்பு செயல்திட்டம் முழுவதிலும் நிஜ பிரச்சனைகளை தீர்க்கும் தீர்வுகளுக்கு பயிற்சியளிப்பதுடன், குறித்த காலஅளவுகளில் திறன்களுக்கான சான்றிதழ்களை வழங்கி இச்செயல்திட்டத்தை நாங்கள் மேற்கொள்ளவிருக்கிறோம். எதிர்காலத்தில் தொடர்ந்து மாற்றம் காணக்கூடிய பணியமைவிடத்தில் திறம்பட செயல்பட அறிவு மற்றும் திறன்கள் கொண்ட சிறப்பான தொழில்நுட்ப பணியாளர்களாக உருவெடுக்க எமது மாணவர்களை இது உருவாக்கும் உலகில் என்று நாங்கள் நம்புகிறோம்.”

NEC கார்பரேஷன் இந்தியா நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு தளத்தின் பொது மேலாளர் மற்றும் தலைமை அலுவலர் திரு. தீபக் ஜா, இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படுவது குறித்து கூறியதாவது

 “இந்த கூட்டு சான்றிதழ் கல்வித்திட்டங்கள், தொழில்துறைக்கு உகந்தவாறு தயார் நிலையிலுள்ள தொழில்முறை பணியாளர்களை உருவாக்கும் கல்விசார் கருத்தாக்கங்கள், மிக நவீன மென்பொருள் தொழில்நுட்பங்கள் மற்றும் தீர்வுகள் ஆகியவற்றோடு பயிலும் குறிப்பிட்ட கல்விப் பிரிவில் நிபுணத்துவம் ஆகியவற்றை மாணவர்கள் சிறப்பாக கற்றுக்கொள்வார்கள். இந்தியாவுக்கா இந்தியாவில் செயற்கை நுண்ணறிவை (AI) உருவாக்குவது, தொழில்துறை கல்வி நிறுவனங்களுக்கிடையில் கூட்டாண்மைகள் மற்றும் இளைய தலைமுறையினரின் திறனை உயர்த்துதல் ஆகியவற்றின் மீது சிறப்பு கவனம் கொண்டிருக்கும் ஒன்றிய அரசின் பட்ஜெட் 2023 உருவாக்கப்பட்டிருக்கும் நிலையில் எதிர்கால தொழில்நுட்ப திறனுள்ளவர்களாக மாணவர்களை அதற்கான அறிவை வழங்குவது மற்றும் திறனை பகிர்வதில் எங்களது பொறுப்புறுதியை நாங்கள் இதன் மூலம் வலுப்படுத்தவிருக்கிறோம்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வழியாக, வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பங்கள் மீது நமது இளைய தலைமுறையினரை சுய சார்புள்ளவர்களாக ஆக்கமுடியும் என்று நாங்கள் நம்புகிறோம் மற்றும் எதிர்பார்க்கிறோம்.”

தரவு பகுப்பாய்வியல், உயர் செயல்திறனுள்ள கம்ப்யூட்டிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவை தொடர்ந்து ஒருங்கிணைகிற மற்றும் வளர்ச்சி கண்டுவருகிற நிலையில் ஒரு புதிய எதிர்காலத்தை எதிர்கொள்ள இந்த உலகம் தயாராகிவருகிறது.

இந்த கூட்டாண்மையின் வழியாக தீர்வுகளை வடிவமைக்கவும் மற்றும் புதிய, வளர்ந்துவரும் தொழில்நுட்பங்கள் மீது சிறப்பான அறிவைப் பெற மாணவர்களுக்கு உதவுவதே NEC இந்தியாவின் நோக்கமாகும்; அதே வேளையில் தொடர்ந்து மாற்றம் கண்டுவரும் இச்செயல்களத்தின் மீது நிபுணத்துவத்தை மாணவர்கள் அடைவதற்கும் இது உதவும்.

இவ்வொப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஒரு வெக்டார் இன்ஜின் (VE) சிஸ்டமை NEC இந்தியா வழங்கும். NEC வெக்டார் இன்ஜின் (VE) மூலம் முன்னெடுக்கப்படும் ஒரு ஆய்வகத்தை நிறுவுவதன் மூலம், இக்கல்வித்திட்டத்திற்கும் மற்றும் புராஜெக்ட் நடவடிக்கைகளுக்கும் தேவைப்படுகிற தொழில்நுட்ப உட்கட்டமைப்பு வசதியினை AVIT பெறுமாறு செய்வது NEC-யின் குறிக்கோளாகும். அத்துடன், ஆராய்ச்சி வசதிகளை நிறுவி மாணவர்களுக்கு பணியாற்றுவதற்கு தேவையான நேரடி பயிற்சியை வழங்குவதற்கு இந்த உட்கட்டமைப்பு வசதிகள் பெரிதும் உதவும்.

இன்டெல்® உன்னாட்டியின் பிசினஸ் மேலாளர் திரு. கிரிஷ், தொழில்நுட்ப பிரிவுகளின் பட்டதாரிகளுக்கும் மற்றும் தகவல் தொழில்நுட்ப தொழில்துறையின் எதிர்பார்ப்புகளுக்கும் இடையே இன்றைக்கு காணப்படுகிற வளர்ந்து வரும் திறன் இடைவெளி பற்றி பேசினார் இத்திறன் இடைவெளி வளர்ந்துவரும் நிலையில் அதை நிரப்பவும் மற்றும் இந்தியாவின் அடிப்படையான உருமாற்ற பயணத்தை ஏதுவாக்கவும், பல்வேறு கல்வி நிறுவனங்களோடு சேர்ந்து பல முனைப்புத் திட்டங்களை இந்திய அரசு கடந்த பல ஆண்டுகளில் அறிமுகம் செய்திருக்கிறது.

தனது தேசிய கல்வி கொள்கையில், தொழில்துறைக்கு தொடர்புடையவாறு திறன்மிக்க தரவை மையமாகக் கொண்ட திறன்களை பட்டப்படிப்பை முடிக்கும் மாணவர்களும் மற்றும் ஆசிரியர்களும் சிறப்பாக பெறுவதற்காக உயர்கல்வியில் பாடத்திட்டத்தை மேம்படுத்துவதற்கான அவசியம் குறித்து அரசு வலியுறுத்தியிருக்கிறது.

கல்வியை சிறப்பு குறிக்கோளாக கொண்டிருக்கும் இன்டெல்®, உயர்கல்வி கற்கும் மாணவர்களுக்காக கடந்த 20 ஆண்டுகள் காலஅளவில் பல்வேறு செயல்திட்டங்களை தொடங்கியிருக்கிறது. புதிதாக தொடங்கப்பட்டிருக்கும் இன்டெல்® உன்னாட்டி செயல்திட்டம், தொழில்துறையின் எதிர்பார்ப்புகள் மற்றும் வேகமாக மாறிவரும் தேவைகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் மாணவர்கள் திறன்பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இன்டெல் நிறுவனத்தின் கல்வி செயல்திட்டத்தை இது முன்னெடுத்துச் செல்வதாக அமைந்திருக்கிறது.

இன்டெல்® உன்னாட்டி செயல்திட்டமானது, தொழில்நுட்பத்தை உள்ளடக்கும் செயல்திட்டத்தின் மீதும் மற்றும் புதிதாக வளர்ந்துவரும் தொழில்நுட்பங்கள் மீது மாணவர்களின் திறன்களை முன்னெடுப்பது மீதும் சிறப்பு கவனம் கொண்டிருக்கிறது. தரவை மையமாகக் கொண்ட திறன்களை பொறியியல் மாணவர்கள் பெறவும் மற்றும் தொழில்துறையில் பணியாற்றுவதற்கு தயார் நிலையில் உள்ளவர்களாக அவர்களை பண்படுத்தவும் வேண்டுமென்ற நோக்கத்தோடு உன்னாட்டி செயல்திட்டமானது உருவாக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதார உருமாற்றத்திற்கு முக்கியமான உந்துதலை இது வழங்கும். சிஸ்டம் ஒருங்கிணைப்பாளர்களது ஒரு வலையமைப்பின் வழியாக வேகமாக வளர்ந்துவரும் புதிய தொழில்நுட்பங்களில் இன்டெல்® உன்னாட்டி வை மையமாகக் கொண்ட ஆய்வகங்களை நிறுவ இன்டெல்® திட்டமிட்டிருக்கிறது.

இத்தொழில்துறையில் முதன்மையான ஆய்வகங்களின் மூலம் மாணவர்கள் திறனதிகாரம் பெறச்செய்யும் உன்னாட்டி ஆய்வகங்கள், இன்டெல் ® -ன் நிபுணர்களது பரிந்துரைகள் அடிப்படையிலான வன்பொருள் மற்றும் மென்பொருள் தொழில்நுட்பத்தையும் நேரடி செயல்பயிற்சிகள் உட்பட பாடத்திட்ட உள்ளடக்கத்தையும் கொண்டிருக்கும். அத்துடன், கல்வித்திட்டத்தை வெற்றிகரமாக  முடிக்கும் மாணவர்களுக்கு கோ பிராண்டட் சான்றிதழ்களையும் இன்டெல்® உன்னாட்டி ஆய்வகங்கள் வழங்கும்.

எஜு லேட்டரல் ஃபவுண்டேஷனின் செயலாக்க இயக்குநர், டாக்டர். பிரதீப், கையெழுத்தாகியிருக்கும் இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து பேசுகையில்,

“AVIT-யில் பல்வேறு முறைகளுக்கு ஊடாக பணியாற்றுவதற்கான வாய்ப்புகளையும், ஆராய்ச்சி நேர்த்தியையும் மேம்படுத்துவதற்கு நவீன சாதனங்கள் மற்றும் வசதிகளுடன்கூடிய, உத்வேகமளிக்கும் ஆராய்ச்சி சூழலமைப்பை வழங்குவதே எமது நோக்கமாகும். இதன் மற்றும் ஒத்துழைப்புகளின் மிகப்பெரிய வலையமைப்புகளின் வழியாக நிஜ உலகில் எதிர்கொள்ளப்படும் பிரச்சனைகளுக்கு மூலம் கூட்டாண்மைகள் தீர்வுகள் காணப்படும்,” என்று கூறினார்.