March 1, 2024
  • March 1, 2024
Breaking News
  • Home
  • கல்வி
  • ஆஸ்திரேலியா லா ட்ரோப் மற்றும் வேலூர் விஐடியுடன் எஸ்ஆர்எம் புரிந்துணர்வு ஒப்பந்தம்
April 4, 2023

ஆஸ்திரேலியா லா ட்ரோப் மற்றும் வேலூர் விஐடியுடன் எஸ்ஆர்எம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

By 0 623 Views

சென்னை: 2023 ஏப்ரல் 4 : உலகின் முன்னணி 1% பல்கலைக்கழங்களுள் ஒன்றாக்கத் தர வரிசைப் பட்டியலிடப்பட்டுள்ள லா ட்ரோப் பல்கலைக்கழகம் ஆஸ்திரேலியா நாட்டின் விக்டோரியா மாகாணத்திலுள்ள பல வளாகங்களைக் கொண்ட பல்கலைக்கழகமாகும்.

தனித்துவமான மற்றும் உயர் தரமான பட்டப் படிப்புகளை வழங்கும் ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களுள் முன்னிலை வகிக்கிறது.இதன் மூலம் மாணவர்கள் இன்றைய சூழலில் நிலவும் பன்னாட்டுப் பிரச்சினைகளைப் புரிந்து கொள்வதுடன், எதிர்காலத்தில் சிறந்த வேலை வாய்புகளைப் பெறத் தேவையான திறன்களை வளர்த்துக் கொள்ளவும் இயலும்.

 

க்யூஎஸ் தர வரிசைப் பட்டியலில் லா ட்ரோப் 46 புள்ளிகள் முன்னேறி 316 ஆம் இடத்தைப் பிடித்துள்ளது. ஷாங்க்ஹய் தர வரிசைப் பட்டியலில் (ஏஆர்டபிள்யூயு) டா ட்ரோப் 296ஆம் இடத்துக்கு முன்னேறி உள்ளது. டைம்ஸ் ஹையர் எஜுகேஷன் உயர் கல்வி தர வரிசைப் பட்டியலில் 300 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

இது குறித்து லா ட்ரோப் பல்கலைக்கழக ஏஓ, துணை வேந்தர் & தலைவர் பேராசிரியர் ஜான் டேவர் கூறுகையில் ‘இம்முறை இந்தியாவுக்கு வருகை தந்தது இரு நாட்டு உறவுகளை விரிவுபடுத்தவும். வலுப்படுத்தவுமே ஆகும். மேலும், கூட்டு எமினனஸ் மையம் அமைக்கச் சென்னை எஸ்ஆர்எம் அறிவியல் & தொழில்நுட்ப நிலையத்துடனும், ஆய்வு மற்றும் கல்வி மூலோபாயங்களை வலுப்படுத்தச் சென்னை வேலூர் தொழில்நுட்ப நிலையத்துடனும் (விஐடி) புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திட உள்ளோம்’ என்றார்.

பொறியியல், மேலாண்மை, மருத்துவம், அறிவியல், மனித வளம் ஆகிய பிரிவுகளில் இளநிலை, முதுநிலை, ஆய்வு படிப்புகளை வழங்கு இந்தியாவின் முன்னணி பல்கலைக்கழகங்களுள் எஸ்ஆர்எம் குறிப்பிடத்தக்கது என லா ட்ரோப் அங்கீகரித்துள்ளது. டிஜிடல் தொழில்நுட்பம் & பொறியியலில் உலகத் தரமான கூட்டு எமினென்ஸ் மையத்தை இக்கூட்டாண்மை நிறுவும்.

கூட்டு எமினென்ஸ் மையத்தின் தொலைநோக்கு

டிஜிடல் தொழில்நுட்பம் மற்றும் பொறியியலில் உலகத் தரமான கூட்டு எமினென்ஸ் மையம் நிறுவுதல்

இளம் எண்ணங்கள் வணிக மாதிரிகள் அல்லது கருதுகோள் சாட்சியாக மலர்ந்து விரிவடைய, வடிவமைத்து, வளர்த்து, பாதுகாத்து, வளர்த்தெடுத்தல்…

பரஸ்பரம் இருவரும் வெற்றிபெறும் மாதிரியாக விளங்கத்தக்க புதுமையான எண்ணங்களின் முதலீடு செய்யத் தொழிற்துறையினரை ஈர்த்தல்…

ஐஓடி மற்றும் இணைந்த பிரிவுகளான எம்எல், ஏஐ, தரவு பகுப்பாய்வு, மேகம் மற்றும்

பாதுகாப்புத் துறைகளில் இலக்குகளை அடைய ஆர்வமுள்ள ஆற்றல்மிகு எண்ணங்களை ஈர்த்தல் மற்றும் உதவுதல்…

லா ட்ரோப் பல்கலைக்கழகச் சாதனைகள்

● உலகின் முன்னணி 300 பல்கலைகழகங்களுள் ஒன்றாக டைம்ஸ் ஹையர் எஜுகேஷன் உயர் கல்வி தர வரிசைப் பட்டியலிட்டுள்ளது

விக்டோரியா மாகாணத்தில் திறக்கப்பட்டுள்ள மூன்றாவது பலகலைக்கழகமாகும். 100 நாடுகளைச் சேர்ந்த 7000 பன்னாட்டு மாணவர்களுடன், 36000 மாணவர்கள் கல்வி கற்கும் பிரம்மாண்ட பலகலைக்கழகமாக விரிவடைந்துள்ளது.

●உலகின் முன்னணி வகிக்கும் 1% பல்கலைக்கழங்களுள் ஒன்றாக லா ட்ரோப் பல்கலைக்கழகம் பட்டியலிடப்பட்டுள்ளது (டைம்ஸ் ஹையர் எஜுகேஷன் 2021)

●முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, கபில் தேவ், மலைக்கா அரோரா கான், அமிதாப் பச்சன், ராஜ்குமாரி ஹிரானி, அபிஜத் ஜோஷி உள்ளிட்ட இந்தியப் பிரபலங்களை லா ட்ரோப் பல்கலைக்கழகம் விருந்தினர்களாக வரவேற்றுக் கௌரவித்துள்ளது.

●2005இல் பண்டூராவிலுள்ள லா ட்ரோப் மெல்போர்ன் வளாகம் பாலிவுட் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளது. முழுக்க முழுக்க ஆஸ்திரேலியாவில் எடுக்கப்பட்ட சலாம் நமஸ்தே என்னும் இந்தத் திரைப்படம் பாக்ஸ் ஆஃபீசில் 10 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்தது.

● லா ட்ரோப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் இப்போது உலகின் முன்னணி கார்பொரேட் குழுமங்களில் உயர் பொறுப்புகளை வகிக்கின்றனர். இவர்களுள் 20,000க்கும் அதிகமான பட்டதாரிகள் இந்திய மற்றும் சீன நாட்டைச் சேர்ந்தவர்கள்.

● லா ட்ரோப் பல்கலைக்கழக நூலகத்தில் ஆய்வுகள், சஞ்சிகைகள், பத்திரிக்கைகள், இந்திய அரசு நூல்களை உள்ளடக்கிய 38,000 தொகுதிகள் உள்ளன. ஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய கலெக்ஷனைக் கொண்ட நூலகங்களுள் ஒன்றாகும்.

விஐடி பல்கலைக்கழகத்துடனான லா ட்ரோப் கூட்டாண்மை ஒப்பந்தம் மூலம் ஆய்வு & கல்வி, கூட்டு ஆய்வு மானியங்கள், மெய்நிகர் பயிற்சிகள் மற்றும் குறுகிய கால வகுப்புகளை எதிர்பார்க்கலாம்.

● கூட்டு ஆய்வு 2018இல் ஆஸ்திரேலிய அறிவியல் அகாதமி (ஏஏஎஸ்), ஆஸ்திரேலிய – இந்திய ஃபெலோஷிப் (நவீன் சிலம்குர்தி ஏஏஎஸ் ஃபெலோஷிப் 2018-19) ஒரு பகுதியாக எல்டியூ கல்வியாளர்கள் விஐடி பல்கலைக்கழகத்துக்கு வந்த போது தொடக்கம்.

● கூட்டாக நூல்கள் வெளியிடுதல், ஆய்வு வலை கருத்தரங்குகள், பயிலரங்குகள், ஊழியர் பயிற்சி வழங்கல்…

இந்தியா தர வரிசைப் பட்டியலின்படி இந்தியப் பல்கலைக்கழகங்களுள், விஐடி ஒட்டு மொத்தமாக 9ஆவது, ஆய்வில் 10ஆவது, பொறியியலில் 12ஆவது இடங்களை வகிக்கிறது.

என்ஐஆர்எஃப் போபால் உள்ளிட்ட மாநிலங்களில் விரிவுபடுத்தப்பட்ட வளாகங்கள் விஐடி பல்கலைக்கழகத்தின் 48 பேராசிரியர்கள் உலகளவில் முன்னணி வகிக்கும் 2% விஞ்ஞானிகள் பட்டியலில் இடம் வகிக்கின்னர் (ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம் ஆய்வறிக்கை)

● · ஆய்வில் அறிவியல் விளைவை ஏற்படுத்தும் 10 இந்தியப் பல்கலைக்கழங்களுள் ஒன்று லா ட்ரோப் பல்கலைக்கழகம் போன்று அதே ஆய்வு மற்றும் பணிச்சூழல் கலாச்சாரம்

● இந்திய வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பு (எஃப்ஐசிசிஐ) 2019ஆம் ஆண்டு ‘எக்ஸலன்ஸ் இன் எனேபிளிங்க் ரிசர்ச் என்வைரோன்மெண்ட்’ விருது வழங்கியது

புதிய படிப்பு உதவித் தொகைகள்

ஆஸ்திரேலிய லா ட்ரோப் பல்கலைக்கழகம் இளநிலை மற்றும் முதுநிலைப் பட்ட பன்னாட்டு மாணவர்களுக்கு மொத்தக் கல்விக் கட்டணத்தில் 20% – 100% மதிப்பிலான உதவித் தொகைகளை வழங்குகிறது. இந்த உதவித் தொகைகள் தகுதி அடிப்படையில் மாணவர்களின் முந்தைய கல்விச் செயல்பாட்டின் அடிப்படையில் வழங்கப்படும்.

லா ட்ரோப் பல்கலைக்கழகம்

ஆஸ்திரேலியா, விக்டோரியா மாகாணத்திலுள்ள லா ட்ரோப் .பல வளாகங்களைக் கொண்ட பல்கலைக்கழகமாகும். விக்டோரியா மாகாணத்தின் முதல் லெஃடென்ண்ட் கவர்னரின் பெயரில் அமைக்கப்பட்டுள்ள லா ட்ரோப் பல்கலைக்கழகம் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக உயர் கல்வியில் ஆஸ்திரேலியாவில் முன்னிலை வகிக்கிறது. கல்வி மேன்மை மற்றும் ஆய்வுகளில் லா ட்ரொப் புகழ் பெற்றதாகும். விக்டோரியாவில் ஏழு வளாகங்களும், நியூ சவுத் வேல்ஸில் ஒரு வளாகமும் உள்ளன

லா ட்ரோப் பல்கலைக்கழகத்திலிருந்து இதுவரை 2,50,000க்கும் அதிகமான மாணவர்கள் பட்டங்களைப் பெற்றுள்ளனர். வாழ்க்கையில் உயர் பொறுப்புகளை வகித்ததுடன், சாதனைகளும் படைத்து, லா ட்ரோப் பல்கலைக்கழகத்தின் பெருமைக்குச் சான்றாக விளங்குகின்றனர்.

மேலும் விவரங்களுக்கு : www.latrobe.edu.au/international