January 23, 2026
  • January 23, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • ‘‘அவன் இவள்’’ குறும்படம் யூடியூபில் 8ம் தேதி வெளியாகிறது..!
February 7, 2025

‘‘அவன் இவள்’’ குறும்படம் யூடியூபில் 8ம் தேதி வெளியாகிறது..!

By 0 368 Views

ஜியா எழுதி, இசையமைத்து இயக்கியுள்ள ‘அவன் இவள்’ குறும்படம் வரும் பிப்ரவரி 8ம் தேதி சனிக்கிழமையன்று இரவு 7 மணிக்கு கிங் பிக்சர்ஸ் யூடியூப் சேனலில் வெளியாகிறது.

இதில் செபாஸ்டின் அந்தோணி, மீரா ராஜ், இசபெல்லா நடித்துள்ளனர். ஒளிப்பதிவு, எடிட்டிங், கலர் கிரேடிங் அபிஷேக் கையாண்டுள்ளார். கலை இயக்கம் அர்ஜுன். இசை வடிவமைப்பு, சவுண்ட் மிக்ஸிங் கிலென் ரால்ஃப். மர்யம் தியேட்டர்ஸ் தயாரித்துள்ளது. 

ஒரு இரவில் நடக்கும் க்ரைம் திரில்லராக இந்த குறும்படம் உருவாகியுள்ளது. இதற்கு முன் ‘கள்வா’, ‘எனக்கொரு wife வேணுமடா’ ஆகிய குறும்படங்களை இயக்கிய ஜியாவின் 3வது குறும்படம் இது. இது குறித்து ஜியா கூறும்போது, ‘‘முதல் இரு குறும்படங்களிலும் வசனங்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. இதில் வசனம் குறைவாகவும் விஷுவல் கதை சொல்லல் அதிகமாகவும் இருக்கும். எனது முதல் இரண்டு குறும்படங்களைப் போல், இதுவும் முழுக்க கமர்ஷியல் அம்சத்தை கொண்ட படமாகும்’’ என்றார்.