September 27, 2026
  • September 27, 2026
Breaking News

Articles Posted by G Tamil News

காலத்தை வென்ற சொன்னது நீதானா பாடல் மீள் உருவாக்கம்

by on October 20, 2020 0

கனடா வாழ் தமிழ் கலைஞர்கள் மத்தியில் நன்கு பிரபலமானவர் பாடகர் மின்னல் செந்தில்குமரன். சமூகநல மற்றும் விலங்குகள் நல ஆர்வலராகவும் இருப்பவர். ‘மின்னல் இசைக்குழு’ என்கிற பெயரில் பல இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருபவர். பல வருடங்களுக்கு முன் ஸ்ரீதர் இயக்கத்தில், விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையில் வெளியான, ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தில் இடம் பெற்ற, ‘சொன்னது நீ தானா’ என்கிற பாடலுக்கு தற்போது புதிய வடிவிலான கவர் ட்ராக் அமைத்து தயாரித்து வெளியிட்டுள்ளார். தனது வசீகர குரலால் ரசிகர்களை […]

Read More

விஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த நபர் குறித்து சைபர் கிரைம் விசாரணை

by on October 20, 2020 0

நடிகர் விஜய்சேதுபதி மகளுக்கு சமூக வலைதளம் மூலம் பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுத்த நபர் குறித்து சென்னை சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படமான 800 படத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடித்தால், அவரது மகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிவிடுவேன் என ஆபாசமாக ரித்திக் என்ற பெயரில் டிவிட்டரில் பதிவிடப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், நடிகர் விஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் வன்கொடுமை […]

Read More

800 படத்திலிருந்து விஜய் சேதுபதி வெளியேறவில்லை – வெளியேற்றப்பட்டார்

by on October 19, 2020 0

இலங்கை கிரிக்கெட் வீரர் முததையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை வைத்து உருவாகும் 800 படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாதென பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் வந்தும் விஜய் சேதுபதி அமைதி காத்தார். இந்நிலையில் இன்று முததையா முரளிதரன் ஒரு அறிக்கை அனுப்பினார்.அதில் 800 படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாதென எதிர்ப்புகள வருவதால் அவர் படத்தில் இருந்து விலகிக் கொள்ளலாம் என முரளிதரன் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து விஜய் சேதுபதி படத்திலிருந்து விலகுவதாக செய்திகள் வந்தன. அவரிடம் […]

Read More

புத்தம் புது காலை – சுதா கொங்கரா இயக்கிய படமும் சுட்ட கதையாம்

by on October 18, 2020 0

இரண்டு தினங்களுக்கு முன் அமேசான் பிரைம் ஒரிஜினல் இன்று வெளியிட்ட கதையில் 5 குறும் படங்கள் இடம் பெற்றிருந்தன. சுதா கொங்கரா கௌதம் வாசுதேவ் மேனன் சுகாசினி மணிரத்னம் கார்த்திக் ஆகிய ஐந்து இயக்கிய அந்த குறும்படங்களில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய மிராக்கள் என்ற படம் திரைக்கதை வசனகர்த்தா மற்றும் இயக்குனரான அஜயன் பாலாவின் குறும் படத்தை காப்பி அடித்து எடுத்த கதை என்று வெளியிட்டு இருந்தோம். இப்பொழுது சுதா கொங்கரா இயக்கிய இளமை இதோ இதோ […]

Read More

இரண்டாவது பிசாசாகும் ஆண்ட்ரியா – பத்திரிகையாளர்களிடம் ரகசியம் உடைத்த மிஷ்கின்

by on October 18, 2020 0

இன்று (18-10-2020) தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் புதிய அலுவலகத்தின் திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் மிஷ்கின்  கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி புது அலுவலகத்தை திறந்து வைத்தார். மிஷ்கின் பேசுகையில், ‘ சித்திரம் பேசுதடி படம் தொடங்கி இப்போது வரை என்னை வழிநடத்திச் சென்று கொண்டிருப்பது நீங்கள் மட்டுமே. எத்தனையோ ஏற்ற இறக்கங்கள் இருந்தும் என்னை கை பிடித்து கூட்டிச் சென்றது நீங்கள்தான். இன்று எனக்கு படம் சார்ந்த சில வேலைகள் […]

Read More

நாளை நாளை மறுதினம் சென்னை வடதமிழகத்தில் கனமழை – வெதர்மேன்

by on October 18, 2020 0

வரும் 20ம் தேதியில் சென்னை, வட தமிழகத்தில் மிதமான மழை முதல் கனமழை பெய்வதற்கான சாதகமான சூழல் நிலவுவதாக பிரதீப் ஜான் தெரிவித்திருக்கிறார். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறுகையில், ”மத்திய வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உள்ளது. 19, 20ம் தேதிகளில் தென் ஆந்திரா கடல் அருகே சுழற்சியின் ஒரு பகுதி அருகில் வருகிறது. இதனால் தமிழகத்தில் வட மாவட்டங்களில் நல்ல மழைக்கு வாய்ப்பிருக்கிறது. சென்னையில் இன்று மிதமான மழை […]

Read More

கொரோனா அழுத்தத்தில் தற்கொலைக்கு முயன்ற ரேணிகுண்டா ஹீரோயின்

by on October 17, 2020 0

ரேணிகுண்டா படத்தில் கதாநாயகியான சனுஷா, தமிழில் அரண், காசி, பீமா போன்ற படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். அத்துடன் எத்தன், நந்தி, அலெக்ஸ் பாண்டியன், கொடிவீரன் ஆகிய படங்களிலும் நடித்திருந்தார். அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதற வைத்திருக்கிறது. அதில்… “கொரோனாவின் ஆரம்ப காலம் எனக்கு பெரிய அளவில் கஷ்டத்தை கொடுத்தது. சொந்த வாழ்க்கையிலும் தொழில் ரீதியாகவும் சங்கடங்கள் ஏற்பட்டன. எண்ணங்கள் என்னை பயமுறுத்தின.   இதனால் மன அழுத்தம் ஏற்பட்டது. பிரச்சினைகளை யாருடன் பகிர்ந்து கொள்வது என்றும் […]

Read More

புத்தம் புது காலை – கார்த்திக் சுப்புராஜ் மொக்கையாக சுட்ட கதை

by on October 17, 2020 0

  அமேசானில் நேற்று புத்தம் புது காலை என்ற ஐந்தாவது வகை படம் ஒன்று வெளியானது. இயக்குனரகள் சுதா கோங்கரா, கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ்மேனன், சுகாசினி மணிரத்னம் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய குறும்படங்கள் மொத்தமாக ஒரு பெரும் படமாக வெளியானது. பெரிய இயக்குனர்கள் இருந்தும் மிகச் சுமாரான வரவேற்பையும் விமர்சனங்களையும் பெற்ற இந்தப் படங்களில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய மிராக்கிள் என்ற படம் மிகவும் மோசமான படமாக கருதப்பட்டது. அந்த கதைக்கருவும் கூட சுட்ட […]

Read More