July 9, 2025
  • July 9, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • பிறந்தநாளில் நயன்தாராவை வச்சு செய்த நெட்டிசன்கள்
November 18, 2020

பிறந்தநாளில் நயன்தாராவை வச்சு செய்த நெட்டிசன்கள்

By 0 598 Views

இன்றைக்கு தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் பிறந்தநாள். அதற்காக அவர் பார்வையற்றவராக நடித்து வரும் நெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியிடப்பட்டது.

வெளியிடப்பட்ட சில நிமிடங்களிலேயே அது எந்தப் படத்தின் காப்பி என்பதே நெட்டிசன்கள் கண்டுபிடித்து விட்டனர். அதனால் பிறந்த நாளும் அதுவுமாக நயன்தாராவை நன்றாக ‘ வச்சு செய்து’ விட்டனர்.

அது கொரியன் படமான Blind என்ற படத்தின் அப்பட்டமான காப்பி என்பது டீசரிலேயே தெரிந்துவிட்டது.

இப்படி பல படங்களை காப்பி அடித்து தான் கோலிவுட் இயங்கி வருகிறது என்றாலும் இந்தப் படத்தை பொருத்தவரையில் ஷாட்டில் இருந்து வசனங்கள் வரை அப்படியே பிரதி எடுத்தது போல் காப்பி அடித்திருக்கிறார்கள்.

இரண்டுக்கும் பொதுவான விஷயங்களை ஒரு டீசரிலேயே கண்டுபிடித்து விட முடிகிறது என்றால் முழு படமும் எப்படி இருக்கும் என்று சொல்லத் தேவையில்லை.

அந்த இரண்டு படங்களுக்கான ஒற்றுமை காட்சிகளும் வசனங்களும் கீழே…

Netrikkan similarities to Blind

Netrikkan similarities to Blind