July 8, 2026
  • July 8, 2026
Breaking News

Articles Posted by G Tamil News

காதலையும் விடாமல் மாற்றும் அரசியல்!

by on January 19, 2024 0

சினிமாக்காரன் தயாரிப்பு நிறுவனம் சார்பாக, எஸ்.வினோத் குமார் வழங்கும், ‘சேத்துமான்’ படப்புகழ் தமிழ் இயக்கும் ‘கனா’ புகழ் தர்ஷன்- ‘ஹிருதயம்’ தர்ஷனா ராஜேந்திரன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. ‘சேத்துமான்’ என்ற இயல்பான படம் மூலம் ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர் இயக்குநர் தமிழ். இப்போது அவர் பெருமாள் முருகன் கதை வசனத்தில் செ.வினோத்குமார் தயாரிப்பில் தனது மூன்றாவது படத்தை இயக்கியுள்ளார். லவ் ஃபேமிலி டிராமா ஜானரில் உருவாகியுள்ள இந்தக் கதையில் உண்மையான காதல் என்றால் என்ன […]

Read More

சிங்கப்பூர் சலூனில் வேற மாதிரி ஆர்ஜே பாலாஜியைப் பார்க்கலாம் – ஐசரி கணேஷ்

by on January 18, 2024 0

*’சிங்கப்பூர் சலூன்’ டிரெய்லர் வெளியீட்டு விழா!* வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல், ஐசரி கணேஷ் தயாரிப்பில், கோகுல் இயக்கத்தில் நடிகர் ஆர்.ஜே. பாலாஜி, சத்யராஜ், மீனாட்சி செளத்ரி உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் இந்தப் படம் ஜனவரி 25 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் எடிட்டர் ஆர்.கே. செல்வா, “’சிங்கப்பூர் சலூன்’ படத்தில் நான் இருக்க முக்கிய காரணம் எனது நண்பர், சகோதரர் ஆர்.ஜே. பாலாஜிதான். அவர்தான் என்னை இயக்குநர் கோகுலுக்கு அறிமுகப்படுத்தி […]

Read More

ஆரோக்கியத்தை கருப்பொருளாகக் கொண்டு 120 ஏக்கரில் ‘பூர்வா சௌக்யம்..!’

by on January 18, 2024 0

புரவங்கரா சென்னையில் ‘ஆரோக்கியம் ’ கருப்பொருளில் திட்டமிடப்பட்ட ஒரு புதிய வளர்ச்சித் திட்டமான பூர்வா சௌக்யம் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது… சென்னை, ஜனவரி 18, 2024: இந்தியாவின் மிகவும் போற்றப்படும் மற்றும் நம்பகமான ரியல் எஸ்டேட் டெவலப்பர்களில் ஒருவரான புரவங்கரா லிமிடெட் இன் மனை உருவாக்கப் பிரிவான பூர்வா லேண்ட், சென்னையின் கூடுவாஞ்சேரியில் அதன் புதிய ‘ஆரோக்கியம் ’ கருப்பொருளுடன் உருவாக்கப்பட்ட மனை உருவாக்க வளர்ச்சித் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. ~120 ஏக்கர் உருவாக்கத்தின் ஒரு பகுதியாக Phase I […]

Read More

குடும்பத்தோடு ரசிகர்கள் படத்தைக் கொண்டாடுகிறார்கள் – அருண் விஜய்

by on January 17, 2024 0

*’மிஷன் சாப்டர்1′ படத்தின் தேங்க்ஸ் கிவிங் மீட்!* லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், விஜய் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய், ஏமி ஜாக்சன், நிமிஷா சஜயன் நடித்துள்ள ‘மிஷன் சாப்டர்1’ படம் பொங்கல் பண்டிகையை ஒட்டி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் இதன் தேங்க்ஸ் கிவிங் மீட் நடைபெற்றது.  ஒளிப்பதிவாளர் சந்தீப், “ஆதரவு கொடுத்த மீடியா, பார்வையாளர்களுக்கு நன்றி. இந்த வாய்ப்புக் கொடுத்த இயக்குநர் விஜய், அருண் விஜய், லைகா […]

Read More

ஹனு மான் திரைப்பட விமர்சனம்

by on January 16, 2024 0

சூப்பர் மேன், ஸ்பைடர் மேன் என்றெல்லாம் அசாத்திய சக்தி படைத்த மனிதர்களை ஹாலிவுட் வழங்குவதை பார்த்து கிட்டத்தட்ட அதே பாணியில் ஹனு மான் (Hanu Man) என்ற பெயர் வைத்திருக்கும் சூப்பர் ஹீரோவின் கதை இது. மிகவும் புத்திசாலித்தனமாக அமைக்கப்பட்ட திரைக்கதை இந்தப் படத்தின் பலமாக அமைந்திருக்கிறது. அத்துடன் இப்போதைய ராமராஜ்ய காலத்தில் படத்தை வெளியிட்டு  பேரைச் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார் இந்த படத்தின் இயக்குனர் பிரசாந்த் வர்மா. படத்தின் ஆரம்பத்தில் ஒரு சிறுவன் சூப்பர் ஹீரோ ஆக […]

Read More

மிஷன் சாப்டர் 1 திரைப்பட விமர்சனம்

by on January 14, 2024 0

தொடக்கத்தில் மறைந்த கேப்டனுக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள். தொடர்ந்து வரும் படத்தில் பாகிஸ்தான் தீவிரவாதி கதை உள்ளே வர இதுவும் ஒரு கேப்டன் கதைதான் என்று புரிந்து விடுகிறது. ஒரு காஷ்மீரிய கிராமத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் உள்ளே புகுந்து இருப்பது தெரிய வருகிறது. அவர்கள் ஏதோ திட்டத்துடன் இந்தியாவுக்கு வந்திருப்பது புரிகிறது. இங்கே மனைவியை இழந்த அருண் விஜய் தன் மகளின் உடல்நலப் பிரச்சனையை தீர்ப்பதற்காக லண்டனுக்கு போகிறார். அங்கே மருத்துவமனைக்கு பணம் புரட்டும் முயற்சியில் போலீஸில் சிக்கி […]

Read More

சிங்கப்பூர் சலூன் படத்தில் என்னுடன் நடித்திருக்கும் மிகப்பெரிய நடிகர் யார் தெரியுமா – ஆர்.ஜே.பாலாஜி தரும் சர்ப்ரைஸ்

by on January 14, 2024 0

ஐசரி கே. கணேஷின் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் ‘சிங்கப்பூர் சலூன்’ படத்தில் ஆர்.ஜே.பாலாஜி கதாநாயகனாக நடிக்கிறார். எல்கேஜி மற்றும் மூக்குத்தி அம்மன்  படங்களுக்குப் பிறகு வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனலில் ஆர்.ஜே. பாலாஜியின் மூன்றாவது படம் இது. ஆனால் முந்தைய படங்களைப் போல் ஆர்.ஜே .பாலாஜியே இந்தப் படத்தை இயக்கவில்லை. ‘ரெளத்திரம்’, ‘இதற்குத்தானேஆசைப்பட்டாய் பாலகுமாரா’,‘காஷ்மோரா’, ‘ஜுங்கா’, ‘அன்பிற்கினியாள்’ ஆகிய படங்களை இயக்கிய கோகுல், ‘சிங்கப்பூர் சலூன்’ படத்தை இயக்கியிருக்கிறார். வருகின்ற ஜனவரி 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படும் […]

Read More

திறமைசாலிகளுக்கு சினிமா மேடை – நீங்களும் மின்னலாம் நட்சத்திரமாய் நிகழ்ச்சி

by on January 13, 2024 0

திறமையானவர்களை நட்சத்திரங்களாக மின்ன வைக்க வருகிறது ‘நீங்களும் மின்னலாம் நட்சத்திரமாய்’ நிகழ்ச்சி! திறமைசாலிகளுக்கு பரிசு மட்டும் அல்ல சினிமா வாய்ப்பு பெற்றுக் கொடுத்து அங்கீகாரம் வழங்க வருகிறது ‘நீங்களும் மின்னலாம் நட்சத்திரமாய்’! ’நீங்களும் மின்னலாம் நட்சத்திரமாய்’ நிகழ்ச்சியில் விளம்பர தூதரான நடிகை சினேகா சோசியல் மீடியாவின் வளர்ச்சியால் இன்று பலரிடம் இருக்கும் திறமைகள் உலக அளவில் பிரபலமடைந்தாலும் அவர்களுக்கான சரியான வாய்ப்பு மட்டுமே எளிதாக கிடைப்பதில்லை. அப்படி ஒரு வாய்ப்பு அமைத்துக் கொடுக்கும் முயற்சியில் குளோப் நெக்சஸ் […]

Read More

கேப்டன் மில்லர் திரைப்பட விமர்சனம்

by on January 13, 2024 0

நாட்டுக்கு ராஜாவாக இருக்க முடியாதவர்கள் தன் பெயரை ராஜா என்று வைத்துக் கொண்டு திருப்திப்படுவது போல இந்தப் படத்தில் நாயகனாக வரும் தனுஷ், ராணுவத்தில் சேர்ந்த அன்றே தன்னை கேப்டனாக நிறுவிக் கொள்கிறார். சுதந்திரத்திற்கு முன்பான இந்தியாவில் நடக்கிறது கதை. அப்போதெல்லாம் ஒவ்வொரு இந்தியனுக்கும் வெள்ளைக்காரர்கள் மட்டும்தான் எதிரிகள் என்று நாம் நினைத்துக் கொண்டிருந்தால் அது தவறு. உள்நாட்டில் ராஜாக்களாக செயல்படும் ஜமீன்தார்கள்தான் ஒடுக்கப்பட்ட மக்களின் முதல் எதிரி என்கிறார் இயக்குனர் அருண் மாதேஸ்வரன். அப்படி சாதி […]

Read More

மெரி கிறிஸ்துமஸ் திரைப்பட விமர்சனம்

by on January 12, 2024 0

ஒரு கிறிஸ்துமஸ் இரவுக்குள் நடந்து முடிகிற கதை. ஒரு லவ் கம் மர்டர் மிஸ்டரியான இந்தக் கதையை ஒரு துளி கூட நாம் யூகிக்க முடியாத அளவில் நகர்த்திச் சென்று ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன். ‘இன்றைக்கு மும்பை என்று அழைக்கப்படும் ஊர், பழைய பம்பாய் என்று அழைக்கப்பட்ட காலகட்டம்’ என்று தொடங்கும் போதே நமக்குள் சுவாரஸ்யம் பற்றிக் கொள்கிறது. இந்தி, தமிழ் இரண்டு மொழிகளிலும் தயாராகி இருக்கும் இந்தப் படத்தை இந்திக்கு ஒரு மாதிரியும் […]

Read More