January 23, 2026
  • January 23, 2026
Breaking News
December 23, 2019

அட்லீயை வச்சு செய்யும் பிகில் சுட்ட சீன் வீடியோ

By 0 1318 Views

ஸ்மைலீ உள்பட எதையும் விடாமல் காப்பி அடித்து படம் எடுக்கக் கூடியவர் அட்லீ என்பது ரசிகர்களும், விமர்சகர்களும் புரிந்து கொண்டிருக்கும் விஷயம்.

சமீபத்தில் விஜய் நடித்து அவரது இயக்கத்தில் வெளியான ‘பிகில்’ படத்தின் எந்தெந்த சீன்கள் எங்கெங்கிருந்து உருவப்பட்டன என்று சமூக வலைதளங்களில் விவாதங்கள் மட்டுமல்லாது அந்த சீன்களையும் பிடித்து அப்படியே வெளியிட்டு அட்லீயை ‘வச்சு செய்து’ வருகிறார்கள் ‘நெட்டிசன்’கள்.

அதைப் பார்க்கும் மக்களில் கூட ஏதோ ஒன்றிரண்டு ‘வெறித்தன’ ரசிகர்கள் மட்டும் அட்லீக்கு ஆதரவாக கம்பு சுத்துகிறார்களே தவிர மற்றவர்கள் எல்லாம் அட்லீயை வாங்கு வாங்கென்று வாங்கி வருகிறார்கள்.

இதற்கும் ‘பிகில்’ இசை விழாவில் “என் பெஸ்ட் ரைட்டிங் இந்தப்படமாத்தான் இருக்கும்..!” என்று அவர் உடான்ஸ் விட்டதையும், “ஒவ்வொரு சீனையும் ‘பாத்துப் பாத்து’ எடுத்திருக்கேன்..!’ என்பதையும் போட்டு ஓட்டு ஓட்டென்று ஓட்டி வருகிறார்கள்.

இன்று அப்படி 2004-ல் வெளியான ஆங்கிலப் படமான ‘மிராக்கிள்’ என்ற படத்திலிருந்து அட்லீ சுட்ட ‘பிகில்’ காட்சியை வெளியிட்டு ஓட்டி வருகிறார்கள்… இனியும் நெட்டிசன்களின் ‘காப்பி கேட்’ பிடிக்கும் காட்சி வேட்டை தொடரும் என்று தெரிகிறது…

ட்விட்டரில் வெளியிடப்பட்ட ‘பிகில்’ சுட்ட காட்சி கீழே…