அர்ஜுன் தாஸ், பூஜா, வினோத் நடித்துள்ள படம் ‘அந்தகாரம்’.
இயக்குநர் அட்லி முதல் முறையாக தயாரித்துள்ள இந்த அந்தகாரம் படத்தை விக்னராஜன் என்பவர் இயக்கி உள்ளார்.
கைதி, மாஸ்டர் படங்களில் மிரட்டல் நடிப்பை வெளிப்படுத்தி உள்ள அர்ஜுன் தாஸ் மற்றும், நந்தா, நான் மகான் அல்ல படத்தில் காட்டுத்தனமான நடிப்பை வெளிக்காட்டிய வினோத் கிஷன் ஆகிய இருவரும் இணைந்து இந்த படத்தில் நடித்துள்ளனர்.
அர்ஜுன் தாஸ், ‘பெருமான்’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார். அதன் பின்னர் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த அர்ஜுனுக்கு ‘கைதி’ படம் திருப்பு முனையாக அமைந்தது.
கைதி படத்தில் இவரது மிரட்டலான நடிப்பு இவருக்கென்று தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கியது. இவரது கம்பீரமான குரல் தான் இவர் மீது பலருக்கு ஈர்ப்பு ஏற்படக் காரணம் என்றும் இப்பட வாய்ப்பு கூட குரலால்தான் கிடைத்ததாம்.
இப் படத்தில் பார்வை குறைபாடு உள்ள நபராக நடித்த நடிகர் வினோத் கிஷன். நடிகர் கார்த்தி உடன் நான் மகான் அல்ல படத்தில் இளம் வயது வில்லனாக நடித்து கலக்கி இருந்தார்.
எங்கே போனாலும், இன்னமும் தன்னை நந்தா மற்றும் நான் மகான் அல்ல படங்களை வைத்துத் தான் நினைவு கூர்கின்றனர். அந்த அளவுக்கு அந்த இரு படங்களின் கதாபாத்திரங்களும் மக்கள் மனதில் பதிந்துள்ளது என்றவர் இந்த அந்தகாரம் அனுபவம் குறித்து கேட்ட போது “பார்வை குறைபாடு என்பது நமக்குத் தான் தெரியும், அவர்களுக்கு அது ஒரு குறையாகவே தெரியலை. இந்த கேரக்டர் ஸ்டெடிக்காவே சென்னையில் உள்ள ஒரு கண் பார்வையற்றவர்கள் விடுதியில் தங்கி அவர்களுடன் பழகினேன். செம ஜாலியா கிரிக்கெட் எல்லாம் விளையாடுகிறார்கள். எந்த இடத்திற்கு வேண்டுமானாலும், ஜாலியா போயிட்டு வருகிறார்கள்.
சினிமாவில்பார்ப்பது போல அவர்களுக்கு எல்லாம் ரோடு கிராஸ் எல்லாம் பண்ணி விட தேவையே இல்லை. அவர்களே சரியாக கணித்து போய்வருவது எல்லாம் பார்த்து மிரண்டு போய் என் ரோலை செய்தேன் என்றார்.
ராதா மோகனிடம் உதவி இயக்குனராக இருந்த விக்னராஜன்-தான் இதை இயக்கி உள்ளார். இது க குறித்து அவர், ‘அந்தகாரம்’ என்றால் காரிருள் என்று பொருள். எல்லா மனிதர்கள் வாழ்விலும் ஒரு இருளான பக்கம் இருக்கும். இப்படத்தில் உள்ள கேரக்டர்களின் இருள் பக்கமே இது. இப்படம் சஸ்பென்ஸ் நிறைந்த திரில்லர் படமாக இருக்கும்.
அர்ஜுன் தாஸ் தோல்வியடைந்த ஒரு கிரிக்கெட் வீரராக, மாணவர்களுக்கு கிரிக்கெட் கோச்சாக நடித்துள்ளார். வினோத் நூலகத்தில் வேலை பார்க்கும் ஒருவராக வருகிறார். ஆர்டிஓ அலுவலகத்தில் வேலை பார்ப்பவராக பூஜா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
நாம் பார்க்காத, கேள்விப்படாத பல வித்தியாசமான கதாபாத்திரங்களை இப்படத்தில் பார்க்கலாம். படம் முழுக்க சென்னையில் படமானது. ரசிகர்களுக்கு வித்யாசமான கதை களமாக இருக்கும்..!” என்றார்.
பார்வைத் திறன் இல்லாதவர்களுக்கான கதையாக இருந்தாலும் ரசிப்புத் திறன் உள்ளவர்களுக்கான படம் போல் இருக்கிறது அந்தகாரம்.
இந்தப் படம் நாளை நெட்ப்ளிக்ஸ் இல் வெளியாகிறது. கீழே பட டிரெய்லர்…