October 20, 2025
  • October 20, 2025
Breaking News
April 10, 2019

அஜித் விரைவில் இந்தியில் நடிப்பார் – போனிகபூர்

By 0 992 Views

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் ‘நேர்கொண்ட பார்வை’யின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கிவிட்ட நிலையில் அவற்றைப் பார்த்த படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் புளகாங்கிதப்பட்டு ட்வீட் போட்டிருக்கிறார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளது…

“நேர் கொண்ட பார்வை’யின் காட்சிகளைப் பார்த்தேன். என்ன அருமையாக அஜித் நடித்திருக்கிறார்..?! வெகு விரைவில் அவர் இந்த்ப்படங்களில் நடிப்பார் என்று நம்புகிறேன். 

என்னிடமே மூன்று ஆக்‌ஷன் கதைகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றிலாவது அவர் நடிப்பார் என்று நம்புகிறேன்…” 

ஆக, போனி கபூரே அஜித்தை இந்தியில் களமிறக்குவார்… ‘தல’யும் அகில இந்திய நட்சத்திரமாவார் என்று நம்பலாம்..!